உச்சம் |
பேரமைதியின் உச்சம்
மனிதன் இல்லா பூமி.
பேரிரைச்சலின் உச்சம்
நாம், நாம் மட்டுமே.
பெருங்களியின் உச்சம்
மண் நனைக்கும் மழைத்துளி.
பெருந்துயரின் உச்சம்
நாம், நாம் மட்டுமே.
பேராசையின் உச்சம்
கையில் பூமிப்பத்திரத்துடன்
இறுதி மனிதன்.
பேரன்பின் உச்சம்
அவனுக்கும் ஆறடி நிலம்
ஈயும் பூமி.
பேராற்றலின் உச்சம்
(பூமியின்) ஓடு துளைக்கும்
சிறு விதை.
பேரற்புதத்தின் உச்சம்
காற்றில் ஆடி மண்ணிறங்கும் ஒற்றை இலை / இதழ் / இறகு / விதை.
இருப்பு சுகம்,
வாழ்வு தவம்,
வாழ்தல் வரம்.
வாழ்ந்து பார்க்கலாமே
பூமிக்கு பாரமின்றி...
இப்போது கவிதை மட்டும்
----------------------------------------------
பேரமைதியின் உச்சம்
மனிதன் இல்லா பூமி.
பேரிரைச்சலின் உச்சம்
நாம், நாம் மட்டுமே.
பெருங்களியின் உச்சம்
மண் நனைக்கும் மழைத்துளி.
பெருந்துயரின் உச்சம்
நாம், நாம் மட்டுமே.
பேராசையின் உச்சம்
கையில் பூமிப்பத்திரத்துடன்
இறுதி மனிதன்.
பேரன்பின் உச்சம்
அவனுக்கும் ஆறடி நிலம்
ஈயும் பூமி.
பேராற்றலின் உச்சம்
(பூமியின்) ஓடு துளைக்கும்
சிறு விதை.
பேரற்புதத்தின் உச்சம்
காற்றில் ஆடி மண்ணிறங்கும் ஒற்றை இலை / இதழ் / இறகு / விதை.
இருப்பு சுகம்,
வாழ்வு தவம்,
வாழ்தல் வரம்.
வாழ்ந்து பார்க்கலாமே
பூமிக்கு பாரமின்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக