வேரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்.
Onetreerevolution (ஒற்றை மரப்புரட்சி) என்ற முகநூல் பக்கத்தை நடத்திவருகிறேன்.
உலகை மாற்ற ஒரு மரம் நடுவோம் என்ற பெருவிருப்பத்தினால், ஒரு பழத்திலுள்ள விதைகளை எண்ணிவிடலாம் ஆனால் ஒரு விதையிலுள்ள பழங்களை எண்ணவே இயலாது என்ற புரிதலால், என் வரும் காலத்திற்கு (மனிதரும் இதனுள் அடக்கம்) இளைப்பாற நிழல், பசியாற உணவு தரக்கூடியதால் என ஏராளமாய் காரணங்கள்.
இந்த புரட்சியில் இணைபவர் செய்யவேண்டியது ஒரே ஒரு மரம் நட்டு வளர்ப்பது; நட்டதில் இருந்து வளர வளர selfie எடுத்து பகிர்ந்து பார்ப்பவரையும் மரம் நட வைப்பது. நம் தலைமுறை தாண்டியும் நீளவேண்டிய நெடியதொரு பணியில், கடமையில் அனைவரும் இணைந்தால் பறவைகளும் வாழ்த்தும்!
இந்த fb பக்கத்தின் அடிப்படை பதிவுகளாக screen shots சில இணைத்துள்ளேன்.
வாழும்போதும் விதையாக இருப்போமே!வெத, நாம போட்டதாயிருக்கட்டுமே நம் வழி வருபவர்க்கு!
ஒரு மரம், ஒரே ஒரு மரம், புதிதாய் நட்டு இணைவீர்களா?
பேரன்புடன்,
பாபுஜி
நான்... மாற்றம் விரும்பும், மாற்றமாக விரும்பும் ஒற்றை விதை. எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது :-)
கருத்துகள்
கருத்துரையிடுக