முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

லாக்கு

சின்ன வயதில் டவுசர் பைகளில் குலுங்கும் பளிங்கிகளை இறுகப்பிடித்து பைய வீட்டுக்குள் நுழைந்து அம்மா அப்பாவிடம் அடி வாங்காமல் தப்பித்தவர்கள் இப்பதிவை படிக்கவேண்டாம் :-) ப வடிவில் காம்பவுண்டிலிருத்து வெளியே கோடு கிழித்து நடுவில் ஒரு குழி. நாலடி தள்ளி நின்று பளிங்கி (மார்பில்ஸ்/ கோலிகுண்டு) களை வீசவேண்டும். குழிக்குள் விழுந்தது வீசுபவனுக்கு சொந்தம். மிச்சமிருக்கும் பளிங்கிகளில் எதிராளி கைகாட்டும் ஒற்றையை, அது எத்தனையோடு ஒட்டியிருந்தாலும் துள்ளியமாய் குண்டு வீசி அடித்தால், மொத்தமும் அடித்தவனை சேரும்.  குறி தப்பினால் எதிராளியின் முறை. இப்படி பளிங்கு சொத்து சேர்த்து, இழந்து. சேர்த்து என பள்ளி நாட்களின் மாலைகளில் தீயாய் வேலை செய்த ஒரு தலைமுறை. ஐந்தில் வளைந்தது ஐம்பதிலும் வளையும்!  ஒரு போட்டி: சாலையில் ஒரு சிறு கல்லை பொறுக்கி எடுத்து, அருகில் ஏதாவது ஒரு இலக்கின்மீது எறிந்துபாருங்கள். லாக்கு விளையாடியவர்களால் மட்டுமே குறி தப்பாது அடிக்க முடியும்; பயிற்சி இல்லாமலே! இன்றைய சிறுவர் / சிறுமியரிடம் ஒரு சிறு கல்லை கொடுத்து, இந்தப்போட்டியை சொல்லி, முயற்சி செய்யச்சொல்லுங்

நாட்டாம, தீர்ப்ப மாத்து! வாழ்க்க ப்ரச்னை!

கல்லூரி நண்பன் தீவிரமாய் காதலித்தான். சொந்த ஊரில் சில தெருக்கள் தள்ளி அவள் வீடு. பார்வை பறிமாறி, அவன் மையலாகி, நட்புகள் உசுப்பேற்ற, கடிதம் ஒன்று எழுதினான். டிபிகல் காதல் கடிதம்: அன்பே, உன் நினைவால் வாடுகிறேன். உன் ஒற்றைப்பார்வை என் தீபாவளி. உனக்கு இளையராஜா பாட்டு பிடிக்குமா? பூவே இளைய பூவே எப்போ ரேடியோல கேட்டாலும் தெரில, அதென்னமோ ஒன் நினப்பு... உன் பார்வையில் ஓராயிரம்...! என்பதாகவே முதல் கடிதம் ப்ளஸ் அநேக follow up கடிதங்களும். ஆனால் கடிதம் கொடுப்பதில் ஒரு சிக்கல். அவள் வீட்டில் கட்டுக்காவல் அதிகம், வாசலில் நாய் வேறு! நண்பன் ஒரு சூப்பர் ஐடியா செய்தான். அவள் வீட்டுத்துணிகளை இஸ்திரி செய்யும் கடை, அவன் தெரு முனையில். இஸ்திரி காரருக்கு அவன் வயதில் ஒரு பெண். அவர் வேலையாக எங்காவது செல்கையில் கடையில் இருப்பாள். அவளை நட்பு பிடித்தான். ஏராளமான பயம் ப்ளஸ் பிகுவுக்குப்பிறகு அவனது கடிதங்களை அடுத்த தெரு பெண்ணின் துணிக்குள் வைத்து அவள் டெலிவரி செய்வதாக ஏற்பாடு. அந்த விடுமுறை முடிந்து கல்லூரி வந்தவன் அன்று பூத்த தாமரையாய் மகிழ்வோடு பல நாட்கள் சுற்றி

குமார 'சம்பவம்'

குமார 'சம்பவம்' அல்லது "தண்ணி"யில் தள்ளாடிய மரம்! குமார் தண்ணி அடித்திருந்தான். மிக போதையில் இருந்தான். ஃபைனல் இயர் ஹாஸ்டலர்களுக்கு இது பழகிய காட்சி. ஆனால் அவர்கள் பழகாத திருப்பம் ஒன்று இந்த காட்சியை இப்போது யாருமே எதிர்பாரா விதத்தில் மாற்றப்போகிறது. குமாரின் ஊறுகாய் நண்பன், சற்று நிதானத்தில் இருந்தவன், மாடிப்படியில் குரல் கேட்டு எட்டிப்பார்க்கிறான். ஹாஸ்டல் வார்டனும் ப்ரின்சியும் இரட்டையர்போல் ஒன்றாய் கை வீசி கால் நகர்த்தி மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். 'டேய் கொமாரு! ஓடுடாஆஆஆஆஆஆ' என்ற அலறலோடு அவன் மாடியிலிருந்து கீழே குதிக்க, கீழே கிரிக்கெட் ஆட்டம் தடைபட்டு கவனம் மாடியை நோக்கி திரும்ப, குமாரு குத்துமதிப்பாய் காற்றில் கைகளால் துழாவி எதையோ பற்றிக்கொண்டிழுப்பதாய் நினைத்து எழ முயற்சிக்க, வார்டனும் ப்ரின்சியும் மாடியில் நுழைய... போதையில் மூழ்கிய குமாரின் மூளையில் எங்கோ சிவப்பு விளக்கு சுழல, அபாயம் என்ற ஒற்றை உணர்வு உந்தித்தள்ள, தன் சக்தியை ஒன்றுதிரட்டி மாடிச்சுவரின் மேல் காலூன்றி ஏறி... அருகிலிருந்த

லாபமு லேது, சௌக்யமு ஆஹா!

லாபத்திற்கு ஈடான தமிழ் சொல் கேட்டிருந்தேன், நேற்று. குவிந்த விடைகள் எதுவும் ஈடான சொல்லை தரவில்லை. ஆனால் பங்கேற்பு அபாரம்! ஈடு, மிகை ஈடு, உபரி, வரசல்(!), வரும்படி, கந்தாயம், ஆதாயம், பலன்... இவை எதுவும் profit / லாபத்திற்கு மாற்று சொற்கள் அல்ல. எவ்வளவு முயன்றாலும் தமிழில் லாபத்திற்கு இணையான சொல் கிடையாது!!!!!!! ஏன் தெரியுமா?  நம் 'முன் தோன்றி மூத்த குடி'க்கு லாபம் என்ற கோட்பாடே இல்லை. இல்லாத ஒன்றுக்கு சொல் மட்டும் எப்படி இருந்திருக்கமுடியும்? சுருக்கமாய் விளக்குகிறேன்(!). தமிழர் வாழ்வியல், தேவைக்கான உற்பத்தி என்பதாகவே இருந்தது. உற்பத்தி செய்யத்தேவையான உதவிகள் (services / சேவை என்ற மொழிபெயர்ப்பெல்லாம் உதவி என்ற சொல்லின் நிழலைக்கூட தொட முடியாது!) வழங்குவோர், அதற்கு ஈடாக (மாற்றாக) விளைச்சலில் ஒரு பகுதியை மகிழ்வோடு பெற்றனர்.  உருக்கு கருவிகள், வேளாண்மைக்காக தேவைப்படும்போது கொல்லர் தனக்கு கிடைத்த விளைபொருளை உருக்குக்கு ஈடாக தந்து வாங்கி தளவாடம் செய்வார். தளவாடத்தை வேளாளரிடம் தந்து பின்னாளில் விளைபொருளாய் பெறுவார். விளைபொருள் என்பது அறுவடைக்கப்பு

முக்கிய நபர் கைது! உதவ நீங்க ரெடியா?!

தலைப்புச்செய்தி : சென்னையில் முக்கிய நபர் கைது! "அடப்பாவிகளா, இதுக்கெல்லாமா கைது பண்ணுவானுங்க?!" என்று நண்பன் வெள்ளந்தியாக கேட்டபோது சிரிப்பு வந்தது; தமிழ் தேய்ந்தாலும் நகைச்சுவை வளர்க்கத்தானே என்று மனதை தேற்றிக்கொண்டு, தமிழில் எப்படி இதற்கான சொல் இல்லாமல் இருக்கும் என சிந்திக்கத்தொடங்கினேன். சொற்களும் வரிசையாக நினைவில் வரத்தொடங்கின... முக்கியத்திலிருந்து முக்குவோமே! பெரிய மனிதர், முதன்மையானவர், மதிப்பு மிகுந்தவர் போன்ற சொற்கள் முக்கியவரை சிறப்பு செய்வன, தமிழில் :-) யோசனை - சிந்தனை பரவாயில்லை - அதனாலென்ன சி்ரமம் - கடினம் சுலபம் - எளிது சரி. இன்னொரு முக்கிய சொல்லுக்கு வருவோம்: லாபம் - தமிழ்க்கம்பு சுற்றி இந்த சொல்லை உரியடி அடித்து "மகிழ்மதி்யை" வெல்லப்போகும் வாசகர் யார்? யார்? யார்? ஹலோ!, ஆதாயம் என்பது சரியான சொல் அல்ல. அது benefit ஐ குறிக்கும், profit ஐ அல்ல :-) ஹலோ!! மகி்ழ்மதி பொண்ணு பேரோ ரியல் எஸ்டேட்டோ இல்லை. மகிழ்வான மூளை!!

மூன்றாம் தலைமுறை ஐ.டி சிகாமணி!

இந்தியாவில் மென்பொருள் நிறுவனங்கள் 1970களிலேயே இருந்தன. "இருந்தன", அவ்வளவே. 1991 இல் பொருளாதார தாராளமயமாக்கம் தொடங்கியதும் சூடு பிடித்த இவர்களது மார்க்கெட், இப்பொழுதுதான் சூடு குறையத்தொடங்கியுள்ளது. இந்த 1991-2018 காலத்தை (நான் ஒரு ஐ.டி நிபுணன், Inside man என்ற தகுதிகளில்) மூன்று தலைமுறைகளாக பிரித்து ஒரு குறுந்தொடராக உங்களுடன் பகிர்கிறேன். படித்து ரசிக்கவும், சிந்திக்கவும் :-) 1990-1999 முதலாம் தலைமுறை ஐ.டி சிகாமணி.  விசுவாசி. 1990களில் வசதியான பிள்ளைகளெல்லாம் கல்லூரியில் படிக்க அமெரிக்கா ஓடியபின் எஞ்சிய நடுத்தட்டு, அடித்தட்டு பிள்ளைகளின் பொருளாதார விடுதலைக்கும் வாழ்க்கை கனவுகளுக்கும் வலுவான தளம் அமைத்துத்தந்தது ஐ.டி துறை.  இந்திய மூளை, இந்திய உழைப்பு, இந்தியாவில். பயனாளர் அதை விற்பது உலகம் முழுதும் பன்னாட்டு கரன்சிகளில்; கொள்ளை லாபம்! செல்வா, என் சக ஐ.டி ஊழியன், அறை நண்பன். இந்தியன் திரைப்பட வடிவேலு போல இவனது வீக்னெஸ் இவனது இடுப்புப்பகுதி். சின்னதாய் இரு விரல் கொண்டு விலாவில் மெல்ல குத்தினால் கூச்சம் தாளாமல், தப்பிக்க தன் சொத்தையே எழுதித்தரு

ஆடையில்லாத தீபாவளி!

ஆடையில்லா தீபாவளி! ஒரு மாதம் முன்னையே குதூகலம். பள்ளியிலிருந்து வந்தவுடன் அப்பாவின் கை பிடித்து துள்ளல் நடையில் கடைக்கு போய் மொரமொரப்பான வாசனையான துணிகளை ஆசையுடன் தடவிப்பார்த்து நீலமும் வெள்ளையும் ஊடாடும் (அதாங்க check டிசைனு!) சட்டைத்துணியும் கரும்பச்சை அரைக்கால் டவுசர் துணியும் அளந்து கிழிச்சாச்சு. டெய்லர் கடைக்கு போகையில் துள்ளல் அதிகமாச்சு. மனக்கண்ணாடியில் விதம் விதமாய் போஸ் கொடுத்துக்கொண்டே நடந்தேன். 'கொஞ்சம் லூசா தைங்க டெய்லரே, வளர்ற பையன்' அப்பா வாஞ்சையோடு சொல்ல டெய்லர் அளவெடுத்தார். அதென்னவோ தெரியாது, இடுப்பை சுத்தி அளவெடுக்கையில் கிச்சு கிச்சு மூட்டின மாதிரி ஒரு நெளி :-) கிளம்புகையில் முத்தாய்ப்பாய் அப்பா சொன்னார், 'இடுப்பும் கொஞ்சம் லூசா, நாடா (suspender) வச்சி தச்சிருங்க, கழலாம தோள்பட்டைல நிக்கும்'. மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம், ரயில்வெடி, பாம்பு மாத்திரை, ரோல் கேப்பு, துப்பாக்கி, ராக்கெட் இத்யாதி, ஒரு நீநீநீநீள ஊதுபத்தி :-) பையை ஆனந்தமாய் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தால் அடுப்படியிலிருந்து தேன்குழல் வாசம்!  பண்டிக