"அமைதியில் பல ரகம். அதில் ஆக டீப்பான அமைதின்னா அது மசான அமைதிதான்.சாதாரண அமைதிக்கும் இருக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. இதையும் தாண்டிய அமைதி ஒன்று உண்டு. அது கொஞ்சம் ஸ்பெஷல். அதை நமக்கு உணரவைப்பதற்கு ரெண்டே ரெண்டு இத்தாலியர்கள் போதும்!" இது நானும் என் நண்பர் அனந்துவும் பேசிக்கொண்டதில் ஒரு பகுதி. இடம்: சுவிஸ் தேசத்தில் அதிமெல்ல நகரும் ட்ராம் ஒன்றில் அலுவலகம் செல்லும் ஒரு சாதாரண நாளில். (அதிமெல்ல is the opposite of அதிவிரைவு. அதாவது மணிக்கு 15 கி.மீ ஸ்பீஈஈடு!) பெரும்பாலான ஐரோப்பிய தேசங்களில் சாதாரணமாகவே புன்சிரிக்க மறந்து சதா சீரியசான முகங்களாகவே பயணங்களில் தென்படும். உறைபனி கூடிய, சாம்பல் மேகங்கள் மூடிய குளிர்காலங்களில் எதிர்ப்படும் முகங்களில் கடுமையும் கூடியிருக்கும். இவர்கள் மத்தியில் 15-20 நிமிட பயணம் கூட ஒரு மணி நேர பயணம் போல தோன்றும் (இதனால inspire ஆகிதான் Swiss Patent Office ல கிளார்க்கா பெஞ்ச்ச தேய்ச்சிகிட்டிருந்த ஒருத்தர், Theory of Relativity எழுதினாரு போல 1906 இல, Annus Mirabilis என்கிற 'அறிவியலின் அற்புத ஆண்டில்'. ஆக்சுவலி, அவரு அந்த வருசம் எழுதின மூன்று
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!