முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அனுபவி ராஜா அனுபவி!

பாலகுமாரனின் அகல்யா, சிவசுவின் அகல்யா, மரண வேதனையில் சிவசுவை கண்களால் விளித்து ஒரு பாடல் படிக்கச்சொல்கிறாள். சிவசு படிக்கிறான்: ஈலோக கோளத்தில் ஒரு சிரா சந்த்யயில் இன்னும் ஒலிக்க நாம் கண்டு முட்டி, தெரியாமல் முட்டிக்கொண்டது மாதிரிதானே  சந்தித்தோம். தெரியாமல் முட்டிக்கொண்டு, சிதறினது மாதிரிதானே பிரிந்தோம். மறுபடி அவ்விதமே நிகழட்டும். போய்வா அகல்யா, ஆல் த பெஸ்ட்.  வே றெங்கேனும் எப்போதாவது சந்திக்க முடிகிறதா என்று பார்ப்போம். இந்தக்கோளத்திலோ அல்லது வேறு எங்கானுமா பார்க்கமுடிகிறதா என்று தவிப்போம்.  பார்த்தால் புரிந்துகொள்வோம்!' முதல்முதலாய் உங்களது கனவுப்பிரதேசத்துக்கு பயணம் செல்கிறீர்கள். அந்த இடம் வரை பஸ்ஸோ ரயிலோ செல்லும் என்பதை தவிற வேறொன்றும் தெரியாது உங்களுக்கு . அந்த ஊர் போனதும் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும்? அதற்கெல்லாம் என்னென்ன தகவல்கள் வேண்டியிருக்கும்? சுச்சூ, கக்கா போவதற்கான இடம் முதல், என்னென்ன காணலாம்? எங்கெங்கு காணலாம்? எந்த வாகனத்தில் போகமுடியும்? எப்போ? நல்ல உணவு எங்கு கிடைக்கும்? நல்ல தேநீர் / சிற்றுண்டி எங்கு கிடைக்கும்? நல்ல விடுதி எங்குள்ளது? நினைவுப்பரிசுகள் எ

டைம் ட்ராவல்!

டைம் மெஷின். டைம் ட்ராவல் சாத்தியமா? சத்தியமாய் சாத்தியமே! டைம் ட்ராவல் செய்கையில் எனக்கு கடந்த காலத்தினூடே பயணிப்பது மட்டுமே பிடிக்கும். ஏனெனில் கடந்த நிகழ்வுகள் எப்படி இருந்தாலும் இன்றைய என் இருப்பு ஒரு தைரியம் தருகிறது...past must have been good or else I would not be here! எதிர்காலத்தைப்பற்றி இப்படி உறுதியாய் சொல்ல இயலாதல்லவா, எனவே அந்தப்பக்கம் பயணிக்க மனம் விரும்புவதில்லை. கமிங் டு த பாயிண்ட், டெக்னாலஜி அதிகம் வளராத காலத்திலேயே நான் மாதம் ஒரு முறை டைம் ட்ராவல் செய்வதுண்டு! பல நேரங்களில் என் தாத்தாவின் காலம் வரை போகமுடியும். இப்போதெல்லாம் மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய காலம் வரை சென்று வர முடிகிறது. என்னுடைய டைம் மெஷின் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு வட்டமடிக்கும் உயர் நாற்காலி, நன்கு குஷன் வைத்து தைத்து ரெக்சின் தோல் பூசிய இருக்கை. அதில் சில பல லீவர்கள் (levers) இருக்கும், உயர்த்த, தாழ்த்த, சாய்க்க, நிமிர்த்த. நான் பயணம் செய்யப்போகும் கடந்தகாலம் என் கண்ணெதிரே பிரம்மாண்ட கண்ணாடி திரையில். ஆனால் அது நான் சீட்டில் அமர்ந்தவுடனே இயங்காது. பல நிமிடங்கள் ஆகும். அதற்குள் தலைமுடியில் ஒரு கர

தோல்பாவைக்கூத்து

India's unique struggle with Inflation through myopia. இதுவரை பொருளாதார பணவீக்கம் நம்மை அதிகமாக பாதிக்காமல் இருப்பதன் காரணம் என்ன தெரியுமா? அரசுகளோ அவர்கள் தீட்டும் திட்டங்களோ அல்ல. அவசியமான பொருட்களின் விலை அதிகமானால்... தேவைகளை சுருக்கிக்கொண்டு வாழும் மக்களின் 'இதுவும் கடந்துபோகும்' என்கிற அனுபவ அறிவு பொதிந்த வாழ்வியல்தான் காரணம். இதனால்தான் 1998இல் அணுகுண்டு வெடிப்பின் பின் நம் மீது உலக நாடுகள் விதித்த பொருளாதார கட்டுப்பாடுகள் நம்மை பாதிக்கவில்லை. கோவிட் போன்ற பெருந்தொற்று காலங்களும் இப்படித்தான் இதுவரை கடந்து போயிருக்கின்றன. ஆனால் கடந்த சில வருடங்களில் இந்த வாழ்வியலை உடைத்துப்போடும் விதமாக சில நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. ஐ.டி துறையில் நல்ல வேலையிலுள்ள இருவர் கடந்த மாதம் 'செயின் அறுப்பு' முயற்சியில் கைதாகி உள்ளனர். இன்று விடியல் காலையில் புது தில்லியில் நடை பயிற்சி செய்துகொண்டிருந்தவர்களை சிலர் வழிமறி்த்து பணம் மற்றும் பொருட்களை பிடுங்கிச்சென்றுள்ளனர். நாடு முழுவதும் இதுபோல பல கொள்ளை, வழிப்பறி சம்பவங்களும் முயற்சிகளும், (சிக்குவது பெண்களென்றால் பாலியல் தாக்க

விதிய மாத்துங்க சாமீ!

  நுனிக்கரும்பு இனிக்க காத்திருந்தவனும் இனிப்பு கிட்டி போயாச்சு சிவலோகத்துக்கு நெஞ்சிலே கோயில் கட்டிய பூசலானும் அடைந்தாயிற்று சிவ பாத ப்ராப்தம். 'நீ உருவாக்கிய ஞெகிழி மட்கி மண்ணானால்தான் உனக்கென் பாதத்தில் இடம்!' என தோடுடைய செவியன் விடமுண்ட கண்டன் சபிக்க, காத்திருக்குது மனித குலம் ஆண்டு எண்ணூறு எப்போது வருமெண்டு! "எண்ணூறு வருவதெப்போ ஞெகிழி மக்குவதெப்போ! மாத்துங்கப்பா "விதியை"!' என கூக்குரலிடும் மனிதரை சிவனே என்று இருக்கச்செய்வது சிவனார்க்கும் இயலாது போல! தாவரங்களிலிருந்து ஞெகிழி செய்வோம் விதியை வெல்வோம் என இப்போதும் ஞெகிழி பிடித்து தொங்குது ஒரு பெருங்கூட்டம். மௌனமாய் புன்னகையோடு வேடிக்கை பார்த்திருக்குது தாவரக்கூட்டம். (PC: salon dot com website)

வெயில் விதைத்தவன் வெயில் அறுப்பான்!

 விதைத்தவன் வெயில் அறுப்பான்! திணை விதைத்தவன் திணையறுக்கையில் வினை விதைத்தவன் வினையறுக்கையில் வெயில் விதைத்தவன் வெயில் அறுத்துதானே ஆகவேண்டும்?! மரங்களாலும் செடிகொடிகளாலும் இயற்கை நெய்த கானகங்கள் படர்ந்த மலைச்சரிவுகளை மானபங்கங்கப்படுத்தி தேயிலை, காபி, சில்வர் ஓக் என வகுந்து வகுந்து வகுத்து, இடையிடையே முழுதாய் மழித்து எஸ்டேட் பங்களாக்களும் ஆலைகளும் குடியிருப்புகளும் கட்டி...விதைத்ததெல்லாம் வெயில், வெயில் தவிர வேறில்லை... கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் பயணித்தபோது, குன்னூருக்கு சற்றுமுன் வரை என்னைப்போர்த்தியிருந்த கானகத்தை காலம் சட்டென உருவி தேயிலைப்பாலையின் நிர்வாண தரிசனம்... ஆங்கிலேயருக்காக உருவப்பட்ட மலையரசியின் ஆடையை மறுபடி நெய்து போர்த்த சுதந்திர இந்தியாவில் தறிகளே இல்லையாம்! உலக மற்றும் உள்ளூர் பெருவணிக சந்தைகள் தரும் ஊக்கத்தில் நாமும் நம் அரசி என்ன அற்புதமான பச்சையாடை உடுத்தியிருக்கிறாள் என ஆமோதித்துக்கொண்டிருக்கும்வரை இங்கு அவளது ஆடைக்கான நூல் கூட ஆயத்தமாகாது! தொலைத்த கானகங்களை தொலைத்த இடத்திலேயே மீளுருவாக்கும் எளிதான செயலை புறம்தள்ளி வேறு எங்கெங்கோ காடுகளை ந

வீடற்றவனின் கூடு

  வீடற்றவனின் கூடு  அவன் சுமக்கும் நினைவுப்பொதி. நினைவுகள், ஊறிப்போன நைந்துபோன புளித்துப்போன நினைவுகள், இடையிடையில் இனிப்பு கெடாத சிதறல்களும் கண்டிப்பாய் இருக்கும்... இருபுறமும் விரையும் வாகனங்களில் கடக்கும் மனிதர்களைவிட இவன் அமைதியாகவே கடக்கிறான், நிதானமாய், கைகளால் சாலையை பிளந்து,  மெல்ல மெல்ல, இலக்கின்றி. நமக்குத்தான் சாலையென்பது விதிகளுக்கும் விதிமீறல்களுக்கும் இடையில் ஊடாடும் கருப்பு நதி.  அவனுக்கு அது எதுவாகவும் இருக்காது... காற்றைக்கிழித்து விரையும் பறவை போல அவன் காலத்தை கிழித்து மெல்ல நடைபோடும் ஒரு பயணி, சாலையும் காற்றும் அவனது உலகில் அவையவையாக இல்லாமலுமிருக்கலாம். வீடற்றவனின் கூடு அவனுக்கு சில நேரங்களில் தலைச்சுமை, சில நேரங்களில் தலைச்சுமையை தாங்கும் சுமை. விழிப்பு, உறக்கம், பசி, தூக்கம் இவை எதுவுமே அண்டாத ஒரு மோன வெளியில் அவன் இன்னும் கைகளை காற்றில் துழாவி நடந்துகொண்டிருக்கிறான். இந்தப்பயணத்தில் இவன் இப்போது ஞானத்திற்கு எவ்வளவு தொலைவில் இருக்கிறான் எவ்வளவு அருகிலிருக்கிறான் என்பது ஒரே ஒரு போதிமரத்திற்கு மட்டுமே தெரியும். அவனது அழுக்குப்பொதி இளைப்பாற அந்த மரத்தடி, இடத்தை ஆயத்த

ஓயாத தேடல்...

நுங்கம்பாக்கம் ராஜ் பவனாவில் அதிகாலை அடுப்பில் பொங்கல் வெந்து இறங்கியவுடன் வடையுடன் முதல் ப்ளேட் எனக்குதான்.  கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தினமும் காலையில் ஆறு மணிக்கு என்னை பார்த்ததும் ரெகுலர் சர்வர் ஒரு புன்சிரிப்பு ப்ளஸ் தலையசைப்புடன் உள்ளே சென்று ஆவி பறக்க கொண்டு வருவார். முடித்தபின் காபி.  அடையாறில் ஐந்தரைக்கு ஆட்டோ பிடித்து இங்கு வந்து சிரம பரிகாரம் ஆன பின் மாக்ஸ் முல்லர் பவனம். ஜெர்மன் மொழி கற்கும் ஆவலில் ஆஃபீசுக்கே தெரியாம சேர்ந்து, தினமும் காலையில் வேலைக்கு எப்படியும் அரைமணி தாமதமாய் வந்து, டிசிஎஸ் ஆஃபீசில் (185, டி.கே.சண்முகம் சாலை) நெருப்பு கக்கும் ப்ராஜக்ட் மேனேஜரின் கண்களில் ஒரு நாள் சிக்க, 'வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்? யு நோ த இம்ப்பார்ட்டன்ஸ் ஆஃப் அவர் ப்ராஜக்ட் டு திஸ் ஆர்கனைசேஷன்? அதுவும் இப்பதான் ப்ராஜக்ட்ல சேந்திருக்க!' என அடித்தொண்டையில் எனக்கு மட்டும் பீதியைக்கிளப்பும் குரலில் மெல்ல கேட்டார்.  நியாயமான கேள்விதான். 750 Man Years தேவைப்படும் Show Piece Global Software Project ஐ கச்சிதமாய் செதுக்கிக்கொண்டிருப்பவர், கேட்பார்தானே! 'சாரி சார். ஆக்சுவலி சார், அவர் க்