முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஒன்றென்பது யாதெனின்...

கையில் விரிந்திருக்கும் புத்தக பக்கங்களின்வழி என்னை வாசித்துக்கொண்டிருக்கிறார் ஓஷோ. உயிர்சுமந்து உள்நுழைந்து  அழுக்காய் வெளியேறும் இடைவெளியில் என்னை வாசிக்குது மூச்சுக்காற்று. சுற்றியிருக்கும் மரங்களும் பெயர்தெரியா உயிரனைத்தும் ஐம்பூதங்களும் என்னை  இடையறாது வாசிக்க நானெங்கே தனியனாவேன்? எங்கோ பால்வெளியில் காலம் துவங்குமுன் ஒரு பெருநிகழ்வில் சிதறிய சிறுபுள்ளியின் துகளனைத்தும் ஒன்றுதானே? ஆமெனில் ஒன்றென்பது  தனியா இல்லையா? காலம் விடைதரும்...

காதலை காதலிப்போம், அப்படியே ரூமியையும்!

உனக்கும் எனக்குமான இடைவெளியில் நாம் இதுவரை புதைத்த சொற்கள் மீது இன்று மௌனம் வளர்ந்து நிற்கிறது அடர்பச்சையாய். பச்சை பாசியாகி புதிய சொற்களை இலக்கு சேரவிடாது வழுக்கி விழவைத்து தன்னுள் புதைத்துக்கொள்கிறது, புதைந்தவை மீதும் மௌனம் வளர்கிறது. இலக்கு தைக்காத அம்புகள் உயிர் காக்கும். இலக்கு தைக்கா சொற்கள் உறவு காக்கும். மௌன வெளியை அனுபவக்காற்று அவ்வப்போது கலைத்துப்போட்டு ஒற்றையடிப்பாதை காட்டும். அதையும் நாம் சொற்கள் இட்டு நிரப்ப, அவையும் அங்கு புதைந்துபோய் பச்சை கட்டி நிற்கும் மௌனமாய். ஒரு நாள் இப்படி ஒரு பாதை காட்டியபின் காற்று நிற்கக்கூடும், அன்று நாம் சொற்களேதும் வீசாமல் ஒருவரை ஒருவர் நோக்கி நடக்கக்கூடும். ஏதாவது ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடும். அந்தப்புள்ளியில் இருந்து நம் இணைபயணம் மீண்டும் தொடங்கக்கூடும். அது நிகழும் தருணம் முதல் மௌனமாய் நடப்போம் சொற்களேதுமின்றி. சொற்களற்ற இடங்களில் பாசிகள் படராது, வழுக்கலும் இராது. சொற்களால் உரமேறாத பழைய பச்சை தானே கறைந்துபோய் புதியதொரு நிலப்பரப்பு நம் கண்முன் விரியக்கூடும். அங்கு நாம் அன்பை விதைப்போம், அ

கான்ஃபிடன்ஸ்!

கோல்கேட் வேதசக்திக்கு மாறியாச்சே! சில ஆண்டுகள் முன் என் பொறியியல் கல்லூரி மாணவர்க்காக முன்னாள் மாணவர்கள் + க.நிர்வாகம் சேர்ந்து நடத்திய ஒரு கலந்துரையாடலில் பழைய மாணவனாய் கலந்துகொண்டேன். மாணவர்களை ஊக்குவிக்க, எதிர்காலத்திற்கு வழிகாட்ட என சில தொழில்முனைவோரும் பெறுநிறுவனங்களின் மேலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். மாணவர்கள் எளிதாய் வேலைவாய்ப்பு பெற என்னவெல்லாம் செய்யவேண்டும்? என்ற மையப்புள்ளியின் மீது நடந்த உரையாடல். அனுபவப்பகிர்தல்கள், வினாக்களுக்கு தெளிவுதரும் விடைகள் என நகர்ந்த நிகழ்வின் இறுதியில் ஒரு இறுதி ஆண்டு மாணவன் தயங்கி எழுந்து, கையில் மைக்கை வைத்துக்கொண்டு ஒரு வினா எழுப்பினான்; 'மூன்றாமாண்டு, நான்காமாண்டில் மட்டுமே எங்களுக்கு வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன. அது போதாது. குறிப்பாய் ஆங்கிலமொழி ஆளுமையின் அவசியம். தமிழ்மொழியில் பள்ளி கற்ற என்போன்றோர் தடுமாறுகிறோமே?' தலைமை வகித்தவர், 'கவலை வேண்டாம். நம் கல்லூரி நூலகத்தில் ஆங்கில சிறார்கதை நூல்கள் வைத்துள்ளோம். படிக்க முயலலாம், தேவைப்பட்டால் கல்லூரி முடிந்த பொழுதுகளில் தனி வகுப்புகள் நடத்தலாம்...'

பூமித்திருவிழாவில் தொலைந்துபோன குழந்தைகள்

நம்மை வீட்டுக்கு இட்டுச்செல்லும் சாலைகள் வேறெங்கும் செல்வதில்லை. கிணற்றில் நீர்வாளி நகர்த்தும் உருளை வேறெங்கும் நகர்வதில்லை. வெளிச்சத்திலும் இருளிலும் அங்கேயே அவ்வண்ணமே. அவை வெறும் கருவிகள்தானே என்றால், நாமும் அவ்வாறுதானே? உணவுச்சங்கிலியில், வாழ்வியல் சங்கிலியில், நமக்கென ஒரு இடம், ஒரு வேலை, தெளிவாக வகுத்துத்தந்திருக்கிறது இயற்கை. சாலைகள் ஓய்வு விரும்பி புரண்டு ஒருபுறம் சாய்ந்து படுத்தாலோ, கிணற்று சகடை ஒரு திசையில்  மட்டுமே சுற்ற முடிவுசெய்தாலோ அதன் படைப்பிற்கான பயன் கெட்டுவிடுமல்லவா? இந்த தெளிவை நமக்கு தந்த அறிவு மட்டும் ஏனோ நம்மை ஒரு திசையில் மட்டுமே சுற்ற, நிலைமாறிப்படுக்க சொல்கிறதே அது ஏன்? நாமும் அவ்வாறு செய்ய முயல்கிறோமே அது ஏன்? மனிதர்போலவே சிந்தித்து 'சுயநலம்' மட்டுமே போற்றும் ஆற்றல் இன்னொரு உயிருக்கு நம் பூமியில் கிடைத்துவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? வண்டிகளில் மாடுகளின் இடத்தில் நாம் பிணைக்கப்பட்டு வண்டி இழுக்க நேரலாம்... நாய் எஜமானர் தூக்கி வீசும் பிஸ்கட்டை தாவி வாயில் கவ்வி விலங்குகள் போலே நான்கு 'கால்களில்' நடக்

தங்கப்ப தக்கம்!

கத கேளு கத கேளு: கூட்டுக்குடும்பம் கூட்டுக்கு டம்பம் ஆன கத கேளு! 1980 களில் ஒரு டிபிகல் கிராமத்து வீட்டில் குறைந்தது ஏழெட்டு பெரியவர்கள், ஐந்தாறு சிறார்கள், சில கால்நடைகள், கையகல காய்கறி தோட்டம்... நிலத்தில் உழைக்க வீட்டாரே வேலையாட்கள், எஜமானர் எல்லாம். வீட்டுத்தேவைக்காக மட்டுமே நிலத்தைக்கெடுக்காத மெனக்கெடல் நிறைந்த வாழ்வு. சிறார்கள் பள்ளி செல்லுமுன்னரே  தங்களை சுற்றியிருந்த அனைத்துயிர்களிடமிருந்தும் வாழ்க்கைக்கல்வி கற்று வளர்ந்தனர். Hindu Undivided Family - HUF - பல நன்மைகளையும் சில கெடுதல்களையும் (ஆணாதிக்க சமுதாயம்...) கொண்டிருந்தது. நதியில் விளையாடி கொடியில் தலைசீவி வளர்ந்த இவர்களது பால்யகாலத்தில் மேலைநாடுகள் வளர்த்தெடுத்த பெருநுகர்வு வணிகத்தின் கரியநிழல் படியவில்லை.  Hindu Growth of Rate (3% GDP வளர்ச்சி, அதில் 2% விவசாயம் சார்ந்து, 1% மட்டுமே மற்றது) என மேலைநாடுகள் எள்ளி நகையாடிய இந்த 3% வளர்ச்சிகூட அந்த நாடுகளில் இன்று இல்லை.... மருத்துவம், மன நல கவுன்சிலிங், பொது நலம், இன்சூரன்ஸ், பென்ஷன் என அனைத்துமாயிருந்த HUF ஒவ்வொன்றும் ஒரு அரசு சாரா தன்னார்வு

வள்ளுவனின் சீற்றம், மூலனின் ஏமாற்றம்...

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் யானைகளும், புலிகளும், சிங்கங்களும், மான்களும் க்வாரண்டைன் செய்யப்பட்டுள்ளன. பி.பி நோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பூனைகள் கூடுவாஞ்சேரியில் திடீர் மரணம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட முதலைகள் சென்னை முதலைப்பண்ணையில் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கின்றன. ஏங்க இது மாதிரி செய்திகள் ஒன்று கூட வர்றதில்ல? மிருகங்கள அடிச்சி விழ வைக்க, மாமிசத்த கிழிச்சி சாப்பிட, வேற விலங்குகள் / பறவைகள்கிட்டேர்ந்து தன்ன காப்பாத்திக்க கூரிய நகங்களோ, முள்ளுள்ள வாலோ, மரம் ஏறித்தொங்க வாலோ அல்லது நிறம் மாறும் தன்மையோ எதுவுமே இல்லாத ஏங்க இந்த மனுசப்படைப்பு? விலங்கு பறவை பூச்சிக்கெல்லாம் மேல சொன்ன ஆற்றலை எல்லாம் படைச்ச கடவுளுங்க, இதெல்லாம் யோசிக்கத்தானே நமக்கு சிந்திக்கிற தன்மையை தந்திருக்காங்க? நாம வரம்பு இல்லாத, தேவையில்லாத சிந்தனைகள், கண்டுபிடிப்புகள்னு எங்கயோ போயி, அடிபட்டு இடிபட்டு மருந்து மாத்திரைகள் உதவியோட உசுர வளக்குற நிலைமைக்கு ஆளாயிட்டோமே. ஊனை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனேன்னு சொன்ன திருமூலரே இன்னைக்கு இருந்தா மூல வியாதியால, முட

பாபெல் கோபுர உச்சியில்... - At the top of the Tower of Babel...

130 கோடி முகமுடையாள்  ... செப்புமொழி பதினெட்டுடையாள் ... ஆனாலும் ஏன் புரிதலின்றி இருக்கிறோம்? ஏன் சிந்தனை ஒன்றுடையாளாக முடியவில்லை? ஏன் நம்மிடையே உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டே போகிறது (தூரம் சுருங்கிக்கொண்டே போனாலும்)? இளவரசன் சித்தார்த்தனுக்கு பேச்சு வரவில்லை என்பதே ஊரெங்கும் பேச்சாக இருந்ததாம். அரசனும் அரசியும் மிக கவலையோடு பல முயற்சிகளை செய்து பார்த்தும் பயனில்லையாம். இயல்பாக தன்னைச்சுற்றி நடப்பது அனைத்தும் சித்தார்த்தனுக்கு புரிந்தாலும் பேச்சின்றி வளர்ந்தானாம். 'இளவரசை பேச வைப்பவருக்கு அவர் கேட்டதெல்லாம் தருவேன்' என அரசன் முரசறிவிக்க சொல்ல, நாடெங்குமிருந்து மருத்துவர்களும், மந்திரவாதிகளும் அரண்மனை நோக்கி படையெடுத்து, முயன்றும் முடியவில்லையாம். கவலையை சற்றே குறைக்க எண்ணிய அரசன், கானக வேட்டை நிகழ்வுக்காக இளவரசை அழைத்துச்சென்றானாம். அங்கும் மௌனமாகவே இளவரசன் சுற்றிவரவும் கவலை தாளாது காட்டுமரமொன்றின் நிழலில் அரச பரிவாரங்கள் ஒதுங்கி ஓய்வெடுத்தனவாம்.  அடுத்த நாள் அதிகாலையில் ஏதோ சத்தம் கேட்டு அனைவருக்கும் முன்னர் எழுந்த சித்தார்த்தன் சத்