முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

என் பெயர் தெரியுமா?

ஒரு கதை சொல்லட்டுமா? ஜேம்ஸ் பாண்டும் V. V. S. லக்‌ஷ்மணும் விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில். பாண்ட் கரம் நீட்டி தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார், 'My name is Bond, James Bond'. நம்ம ஆளு லக்‌ஷ்மண், கரம் குலுக்கிக்கொண்டே சொல்கிறார், 'My name is Laxman, Sai Laxman, Venkata Sai Laxman, Veer Venkata Sai Laxman'. கரத்தை உதறி விடுபட்டு நம் ஜேம்ஸ், air hostess ஐ நோக்கி ஓடுகிறார், 'Sweetie, give me a seat anywhere else but NOT here!' அப்படி என்னதான் இருக்கிறது பெயரில்? பெயர் என்னவாக இருந்தால் போதும்? கவிக்கோ அப்துல் ரகுமான் 'பெயரில் நான் முடங்கிப்படுக்கக்கூட இடமில்லை' என்று ஒரு கவிதையில் எழுதியதாய் நினைவு... முன்னொரு காலத்தில் நம் வாழ்வின் எல்லைகள் சிறியதாய் இருந்த காலத்தில், நமை இன்னாரென  'இனம்'காண (ஊர், குலம், வம்சம், வீரம், பால்பேதம், இத்யாதி) பெயர் அவசியமாயிருந்தது, ஒரு திறவுகோல் போல. கதவுகள் பல மாறி, எல்லைகள் விரிந்து, நாவிதனும் சிற்றப்பனானதெல்லாம் நடந்துமுடிந்தபின்னரும் பெயர் எதற்கு? பெயரில்லாவிட்டாலும் நாம் ந

சே, காந்தி!

சங்கிலித்தொடராய் வாழ்ந்து முடியும் நம் வாழ்வை தடம் புரட்டும் விதமாய் ஒற்றை மனிதர்கள் அவ்வப்போது தோன்றுவதுண்டு.  சென்ற நூற்றாண்டின் இரு பெரும் ஆளுமைகள் - உலக அரசியலில்! இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைத்தது புவியை உருட்டும் நெம்புகோல்?  அடிமைத்தனத்திற்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராய் இருவரும் உயர்த்தியது போர்க்கொடிதான், கத்தியோடு ரத்தமோடு ஒன்றும் கத்தியின்றி ரத்தமின்றி ஒன்றும். வழி என்னவானாலும் போர் போர்தானே. தென்னமெரிக்காவில் ஒரு நாட்டில் பிறந்து இன்னொரு நாட்டின் ஆயுதப்புரட்சியில் தலைவனுக்கு உறுதுணையாய் நின்று, வென்று, ஆட்சிப்பொறுப்பு பெற்று அமைச்சரான பின் அவன் ஓய்வெடுக்கவில்லை...'இந்த மக்கள் மட்டும் சுதந்திரமாக இருந்தால் போதுமா? அடுத்த நாட்டின் மக்களும் என் மக்கள்தானே'! நானும் கூடடையும் பறவையல்லவே. பறக்கவேண்டிய தூரமும் வானமும் நிறைய நிறைய' என நலிந்தோரை நாடி, எதிர்ப்புக்குழு திரட்டி ஆயுதமேந்திப்போராடியவன்,  ஒரு மருத்துவன் - மானுடம் காக்க அவன் தேர்வு செய்த வழி அது.  இந்தியாவில் பிறந்து, தென்னாப்பிரிக்காவில் நலிந்தோர் உரிமைக்குப்போராடி வென்ற வழக

தலைவனற்ற சமுதாயம், ஒப்பிலாதொரு புதுமை!

மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கினத்திலும் உடல்/மனவலிமை சார்ந்த சமுதாயக்கட்டமைப்புகள், தலைமைகள் இருந்தே தீரும். சிறுநீ்ர் கொண்டு எல்லை வகுக்கும் மிருகங்களுக்கும், படை கொண்டு எல்லை வகுக்கும் மனிதருக்கும் இதுவே. பறவைகள் சமுதாயத்தில் குழு மனப்பான்மை தாண்டி தனி ஆளுமைகள் இல்லை என்றே சொல்லலாம். எந்த வித தலைமையும் இன்றி, என் கடன் பணிசெய்து நிற்பதே என்று காலத்திற்கும் இயற்கையோடு இணைந்து ஏனைய அனைத்தையும் வளர்க்கும் பேருயிர் மரம் மட்டுமே.  மாமரத்தோப்பில் தலைவனேது? பனைமரக்காட்டில் தலைவியேது?! எல்லைகள்தான் ஏது? ஒரு மரத்தின் அடியில் எது வளர்ந்தாலும் அதற்கு சங்கடமில்லை. இவைதான் வேண்டும், இவை வேண்டாம் என பாகுபாடு கிடையாது. தன்னை இறுக்கும் கொடியினங்களைக்கூட மரம் அறுத்ததாய் சுவடுகளில்லை. இறுக்கத்திற்கும் எல்லை காட்டி அவற்றினூடே வளர்வது மட்டுமே அவற்றிற்கு தெரியும். வண்டு துளைத்த மரம்கூட வாழுமட்டும் வண்டுக்கு விருந்தோம்பல் செய்தபின்னேதான் மாளும்!  கடும் வெயிலில் நீரின்றி வாடினாலும் கண்ணீர் விடும் ஒற்றை மரமாவது கண்டதுண்டா யாரேனும்?! கலீல் கிப்ரான் எழுதிய Prophet இலிருந்து திருமணம் குறி

நாலாம் தமிழ் - 3

மொழியின் உன்னதம் அறிய இலக்கணம் தேவையா? பழத்தின் சுவை அறிய தாவரவியல் அறிவு தேவையா?! அவ்வையைச்'சுட்ட' பழம் வேறு எந்த மொழியிலாவது உண்டா?! மற்ற மொழிகளைத்தழுவும் நம் ஆர்வம் தமிழ்மீது குறைய நாமே காரணம்... தாய்மொழியின் சுவையறியாதவர் வேற்று மொழியின் சுவை தேடி ஓட முதற்காரணம், அறியாத வயதில் நம் பள்ளி வகுப்பில் நடமாடும் கடுந்தமிழும், அதற்கு மாற்றாய், புது மொழியாய் எளிமையாக்கப்பட்ட வேற்றுமொழிகளின் அணிவகுப்பும்! கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி என தமிழ்ச்சங்கத்தலைவன் முழங்கிய கடுந்தமிழ்ப்பாட்டுக்கு விளக்கமும் கடுந்தமிழில் கற்பவர் ஒருபுறம், மிக எளிமைப்படுத்தப்பட்ட French, German மொழி கற்பவர் மறுபுறம், தேர்வு எழுதுகையில் எளிமைக்குத்தானே கூடுதல் மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு? மதிப்பெண் பின்னேதானே நம் சிறார்களை ஓடப்பழக்குகிறோம்? I wonder how we provide distorted playing fields for kids and expect them to choose the toughest of these fields in the name of 'love of the tamil language'? சேலை உடுத்தியவரை காண்பது அழகு. சேலை உடுத்துவது கடினம் என்பதாகத்தான்

நாலாம் தமிழ் - 2

எனக்கு இன்னும் பல பேர் இருக்கு! நாலாம் தமிழ் - 1 இல் 'மெல்லத்தமிழ் இனி சாகாது ப்ரோ' என்று எழுதியிருந்தேன். பாரதி, மெல்லத்தமிழ்...என்று சொன்னது சாபமாயல்ல, கோபமாய், அதுவும் யாரோ தமிழின் ஆளுமைத்திறனை ஏளனம் செய்யப்பயன்படுத்திய சொற்றொடரை சினந்து, தமிழரை திசையெங்கும் சென்று உலக மொழிகளில் (தமிழில் இல்லாத) உன்னதங்களை கண்டுபிடித்து தமிழில் சேர்க்கவைப்பதற்காக சொன்னது. பழகு தமிழ் தவிர மற்றவை வழக்கொழிந்து போய்க்கொண்டிருப்பதை உணர்ந்ததால் என் கணிப்பு 'மற்ற மூன்று தமிழ் மாண்டாலும் பழகு தமிழ் மட்டுமாவது தப்பி, தழைத்தோங்கும்' என்பதே! வர்ணபேதமற்ற உலகில் மூன்று தமிழ் மட்டுமே இருந்திருக்கவேண்டும். மக்களும் அவற்றையே 'பழகி'யிருக்கவேண்டும். என்று சிலருக்கு அது மறுக்கப்பட்டதோ அன்றே நாலாம் தமிழ் முளைத்திருக்கக்கூடும்... எந்த மொழியுமே நாப்பழக்கம். எந்த வர்ணம் தன் உணர்வுகளை மொழி மூலம் அதிகமாக பழகுகிறதோ அந்த மொழியே ஊட்டமாய் வளரும். உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்க முடிந்தால் மட்டுமே எந்த மொழியும் போற்றப்படும், பழகப்படும். இயல் இசை நாடகத்தமிழால் 'மெர

வலைக்கு வெளியே துள்ளும் எதுவோ! - 1

எப்போதாவது உங்கள் எண்ண ஓட்டத்தை, வேற்று மனிதர் போல 'தள்ளி இருந்து' கவனித்ததுண்டா? எந்தவித இலக்கணத்திற்கும் உட்படாமல், கோர்வையாக இருக்கவேண்டிய அவசியமின்றி, கால தேச அளவீடுகளை கடந்ததாகவே அது எப்போதும் அதன் போக்கில் செல்லுமல்லவா. அத்தகையதுதான் எனதும். அந்த எண்ணவோட்டத்தின் சில துளிகளை, random stream of consciousness, தொடர்ந்து உங்களோடு பகிர ஆவல். இப்போது இந்த நொடியில் கனவு பற்றி பகிரத்தோன்றுகிறது... இரண்டு வயது குழந்தை,  நள்ளிரவில் தூக்கம் கலைந்து எழுந்து ஒரே அழுகை...'அந்த அங்க்கிள் என்னை ஊஞ்சல்லேந்து தள்ளி விட்டாரு'....எந்த அங்க்கிள், எந்த ஊஞ்சல் என்று எவ்வளவு முயன்றும் விடை கிட்டவில்லை. எங்கள் கண் பார்வையிலேதான் பார்க்கில் ஊஞ்சல் விளையாட்டு...எங்களுக்குத்தெரிந்து யாரும் அவளை கீழே தள்ளவில்லையே... கனவாக இருக்கும் என முடிவு செய்து, கனவென்பதே என்னவென்று தெரியாத சிறு குழந்தைக்கு என்ன சொல்லிப்புரியவைப்பது?... ஏதோ சமாதானம் சொல்லி தூங்கச்செய்தோம்.  எனக்கும் கனவுகள் ஏராளமாய் வரும்...நெடுஞ்சாலையல் டைனோசார் துரத்துவது போலவும், ஆட்டோவில் தப்பியோடி, விமா

பித்தும் சித்தும் தரிகிட தரிகிட!

தன்னுள்ளே கரைந்து தானே யாதுமாய் யாதும் தானேயாய் அண்டத்தில் பிண்டமாய் என்றெல்லாம் நாமுரைக்க, இதேதும் உணராது அலைபவனை நகைத்து 'நம் ஆளல்லவே' என வெறுப்புமிழ்ந்து கல்லெடுத்து மிருகமெறிய விளையாட்டில் பங்கெடுத்து அவனும் திருப்பியெறிந்தான். அடிபட்டு ஊளையிட்டு பித்தம் தலைக்கேறி ஏனை மிருகம் கூட்டி முச்சந்தியில் கட்டியடிக்க, மாள்வது தெரியாமலே மரித்தான் அவன். சிரித்தது அண்டம். பிண்டத்திலொன்று போனாலும் வருவது அண்டத்திடமே!