முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இறகு வேண்டி...

வண்ணப்பூச்சியின் இறகிலிருந்து உதிரும் வண்ணமெல்லாம் எனக்கே எனக்காய். வழித்தெடுத்து அப்பிக்கொண்டு என்ன முயன்றும் பறக்கமுடியவில்லை. சின்ன வயதில் பெரிய கனவு எனக்கு இறகு முளைத்து பறப்பதாய். இன்றும்கூட என்றாவது கனவில் பறப்பது நிகழ்ந்தவண்ணமே.  வானிலிருந்து வண்ண வண்ணமாய் புவிப்பரப்பை பறவைப்பார்வையில் கண்டு மகிழ்வது கனவில் மட்டுமே சாத்தியப்படுகிறது... (இயற்கையில்) மாயத்தூரிகைகள் ஏராளம், வண்ணந்தாங்கி பறக்கும் உயிர்களும் ஏராளம். என்றாவது ஒரு நாள் என் இறகிலும் பறத்தலுக்கு ஏதுவான வண்ணத்தை எனக்கான தூரிகையொன்று தடவலாம். அது நிகழ்ந்தபின் உங்களை கடந்துபோகும் வண்ணப்பூச்சிகளில் நானும் இருக்கலாம். அதுவரை கவிதை எழுதுவதை தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை...

96. மூன்றாவது, இறுதி ரிவ்யூ!

96 மூன்றாவது ரிவ்யூ! சன் டிவி, தீபாவளி மாலையில் இந்த நல்ல படத்தை விளம்பரங்களின் இடைவெளியில் துண்டு துண்டாய் ஒளிபரப்பியதாலும், ஆனந்த விகடன் மிக நல்ல விமரிசனம் எழுதிவிட்டு 46 மதிப்பெண் மட்டுமே சம்பந்தமில்லாது கொடுத்ததாலும், நல்ல படங்களின் ரசிகர்கள் இதனை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை தவறவிட்டனர் என்றே எண்ணுகிறேன். So, blame it on Sun TV and Anandha Vikatan for this third review :-) வசந்தா லக்‌ஷ்மியின் லில்டிங் ம்யூசிக் - அற்புதம். ஆனால் இந்த படத்திற்கு இசை தேவையில்லை. டிவிடியில் இந்த படம் வெளியிடும்போது பிஜிஎம் இல்லாது கேட்க ஒரு ஆப்ஷன் இருந்தால் நான் சொல்வதன் காரணம் விளங்கும். பாடல்கள் எழுதப்பட்ட விதம், இடம்பெற்ற சொற்கள், பயன்படுத்தப்பட்ட, படமாக்கப்பட்ட விதம், தமிழுக்கு புதுசு. ரசித்து ருசித்த வரிகளை இங்கே கோர்த்துள்ளேன். உமா தேவி, தமிழில் PhD, பேராசிரியை, செதுக்கினாற்போல தமிழ் சொற்களை பயன்படுத்தி சினிமாவிலும் நற்கவிதைகள் நெய்கிறார். கார்த்திக் நேதா - நா. முத்துக்குமாரின் அடியொற்றி.  இவர்களது நற்கவிதைகள் நமது கேளனுபவத்தை பலமடங்கு உயர்த்தும், வரும்

ஈர நிலம்

  காயத்தில் ஈரம் உள்ளவரை  காயாது காயம். (காயம் = உடல்). ஈரம் வளர்த்த காயம், வளர்ந்தபின் ஈரம் வளர்த்தால் வாழ்வு செழிக்கும். ஒன்பது துளையிருந்தும் காயமின்றி  காயம் காக்கும் ஈரமனம்... அதை ஈரமாக்குவது எதுவோ  அதுவே (காயத்துள்)  அடைந்ததையும் காக்கும். இதுவே பேரன்பின் பேரற்புதம். புவியோட்டில் ஒற்றைத்துளை இட்டு ஒரு விதை விதைத்து அண்ணாந்து பார்த்தால் ஆயிரங்குருவி! இதுபோல ஆயிரம் விதை  விதைக்க ஈரமனதில் இடமுண்டு. இந்தக்கவிதை ஆயிரத்தில் ஒன்று!

அன்பே சிவம், அன்பே தவம்.

அன்பே சிவம். வாழ்வே தவம். உள்ளங்கைக்குள் உயிர்ப்பொதியாய் வாழ்வு,  உறவு, நட்பு, சுற்றம், சூழல், அனைத்தும். நொறுங்கப்பற்றின் சிக்கல். விரல்பிரித்து விட்டால் 'போச்சு'. குழந்தைபோலே எனில் இதம்,  வாழும் நாள் வரை. இது கடினமென்று நினைப்பவர், உள்ளங்கை குழந்தையாய்  நமை தாங்கும் பூமிப்பந்திடம் கற்கலாம். பற்றறும்வரை பற்றும் கலை பயில்வோம். ஏனெனில், அன்பே சிவம், வாழ்தல் தவம்.

'மகா' பாரதம்

இன்று தீபாவளி. May this joyous occasion bring You closer, safer and happier than before with all other lives around You :-) நல்லதொரு சிந்தனையை இந்த நாளில் விதைக்கிறேன் இங்கு! நம் 'மகா' பாரதத்தின் ஆரம்பப்புள்ளி் எது? இந்திரப்பிரஸ்த மாளிகையின் மாயப்பொய்கையை உண்மையென நினைத்து துரியோதனன் தன் ஆடையை சுருட்டி கால் பதித்ததை கண்டு பாஞ்சாலை சிரித்ததால்தான் பின்னாளில் போர் மூண்டது என ஒரு புரிதல். மண்ணுக்காக பெண்ணை இழந்து அந்த அவமானத்தால்தான் போர் என இன்னொரு புரிதல். தமக்கைக்கு கண்ணற்றவனுடன் விருப்பமில்லா திருமணம் ஆனதற்கு பழிவாங்க தமையன் பகடை உருட்டி வரவழைத்த போர் என்று ஒரு புரிதல். செஞ்சோற்றுக்கடன் தீர்க்க கர்ணன் சேராத இடம் சேர்ந்ததால் என ஒரு புரிதல். குந்தியின் தவறை கர்ணன் இருக்கும்போதே அவள் உலகிற்கு அறிவித்திருந்தால் யுத்தமே நிகழ்ந்திருக்காது என ஒரு புரிதல். மாயக்கண்ணன் நமக்கு ஒரு வாழ்வியல் சேதி சொல்லவே அவரவர் அவ்விதம் என ஒரு புரிதல். எழுத்தாளர் சோ தன் மகாபாரதம் பேசுகிறது நூலில் தெளிவாய் சொன்னதை இன்றுவரை வேறு யாரும் அடிக்கோடு இட்டு காட்டவில்

கரிய வானில் ஒற்றை நட்சத்திரம்

நேற்றைய தினங்களின் வாசனை வீசாத  இன்னொரு இரவில்  கரிய வானத்தில் எனக்கே எனக்காய்  நான் ஒட்டிக்கொண்டிருக்கும்  இந்த நட்சத்திரம் நீயாக இருக்கலாம்,  வழக்கம்போலவே. ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருந்து  உன் நினைவுகள் இப்போதுதான்  என்னை அடைந்திருக்கின்றன, உன் நேசம் உறங்கும் என் அடர் மௌனம்  முடிவற்ற வெளியாய் உன்னை சூழ்ந்திருப்பது  அறியாமலே. அண்டவெளிக்கப்பால்  என்ன இருந்து என்ன? என்ன இன்றி என்ன? உள்ளே நானிருக்கிறேன். நீயுமிருப்பாய், நான் உள்ளவரை.

96 - ரீ ரிவ்யூ! நாளையே கடைசி!!

96 - நாளையே கடைசி, இரண்டாம் முறை தியேட்டரில் பார்க்க :-) முந்தைய ரிவ்யூவில் சொன்னபடியே இரண்டாம் முறை, தனியே. சென்ற ரிவ்யூவில் விட்டுப்போன இன்னும் சில நேசப்பூக்கள் பூக்கும் தருணங்கள்: ராம் தொலைந்தபின் ஆளற்ற அவனது இருக்கையில் தாள முடியாத ஆற்றாமையோடு கைகளை குறுக்காக மடித்து அமர்ந்து, வெறுமை தாளாது விரல்களால் டேபிளில் வலிக்கத்தட்டி வேதனையோடு விலகும் ஜானு. ரீ யூனியனில் ராமை தேடும் ஜானகியின் கண்கள். ஜானகிக்கு உணவுத்தட்டை கவனமாய் விளிம்பு துடைத்து குழந்தை போல் கையில் ஏந்தி வரும் ராம். ரீ யூனியன் மேடையில் 'ஒறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது' என ஜானு பாடுகையில் பட்டுப்பூச்சி தாவலில் பார்வை பரிமாற்றம்... "என்னை இறக்கிவிடப்போறியா ராம்?" என நம்ப முடியாத உணர்வோடு தவிக்கும் ஜானு. 'ராம், ரொம்ப தூரம் போய்ட்டியா ராம்?' "இல்லை ஜானு. ஒன்ன எங்க விட்டனோ அங்கயே நின்னுட்டிருக்கேன்".  சலூனில் ராமின் தாடி மழிக்கப்படுவதை காணும் ஆவலில் பேரார்வ ஜானு. ரியாலிடியும் ஆல்நர்நேடிவ் ரியாலிடியும் போட்டுத்தாக்கும் அந்த ஏர்போர்ட் ரெஸ்டாரண்ட