96 மூன்றாவது ரிவ்யூ!
சன் டிவி, தீபாவளி மாலையில் இந்த நல்ல படத்தை விளம்பரங்களின் இடைவெளியில் துண்டு துண்டாய் ஒளிபரப்பியதாலும், ஆனந்த விகடன் மிக நல்ல விமரிசனம் எழுதிவிட்டு 46 மதிப்பெண் மட்டுமே சம்பந்தமில்லாது கொடுத்ததாலும், நல்ல படங்களின் ரசிகர்கள் இதனை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை தவறவிட்டனர் என்றே எண்ணுகிறேன்.
So, blame it on Sun TV and Anandha Vikatan for this third review :-)
வசந்தா லக்ஷ்மியின் லில்டிங் ம்யூசிக் - அற்புதம். ஆனால் இந்த படத்திற்கு இசை தேவையில்லை. டிவிடியில் இந்த படம் வெளியிடும்போது பிஜிஎம் இல்லாது கேட்க ஒரு ஆப்ஷன் இருந்தால் நான் சொல்வதன் காரணம் விளங்கும்.
பாடல்கள் எழுதப்பட்ட விதம், இடம்பெற்ற சொற்கள், பயன்படுத்தப்பட்ட, படமாக்கப்பட்ட விதம், தமிழுக்கு புதுசு. ரசித்து ருசித்த வரிகளை இங்கே கோர்த்துள்ளேன்.
உமா தேவி, தமிழில் PhD, பேராசிரியை, செதுக்கினாற்போல தமிழ் சொற்களை பயன்படுத்தி சினிமாவிலும் நற்கவிதைகள் நெய்கிறார்.
கார்த்திக் நேதா - நா. முத்துக்குமாரின் அடியொற்றி.
இவர்களது நற்கவிதைகள் நமது கேளனுபவத்தை பலமடங்கு உயர்த்தும், வரும் காலத்தில்.
காலம் இரவின் புரவி ஆகாதோ என உமாவும்
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை என கார்த்திக்கும் அவர்கள் பங்கிற்கு போட்டு தாக்குகிறார்கள். பாடல்களும் விரும்பி கேட்கப்படும், பேசப்படும்!
---
கொஞ்சும் பூரணமே வா நீ
கொஞ்சும் எழிலிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி
காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்
காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீநீநீ
-----
இரவிங்கு தீவாய் நமை சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவை அழுதே
பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்
உயிரின் உயிராய் பிரிந்து போகிறேன்
மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்
வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்
கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்
...
இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே
அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே
ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே
அட காலங்கள் மீறி தடை போடுதே
நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வை
வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே
வரவா… வரவா…
------
தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே
...
காலம் இரவின் புரவி ஆகாதோ
அதே கனா அதே வினா
வானம் நழுவி தழுவி ஆடாத
அதே நிலா அருகினில் வருதே
...
நான் நனைத்திடும் தீயா பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனென ஆலாபனைதானா
காதல் கனாக்கள் தானா தீரா உலா நானா, போதாதா
காலம் வினாக்கள் தானா போதும்…
அருகினில் வர மனம் உருகித்தான் கரையுதே
-------
வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…
உயிரின் தாகங்கள் கிடந்தது சாகுதே
கடந்த காலங்கள் வாராதோ…
பார்வையின் பாராமையில் வாழுமோ என் நெஞ்சம்…
வார்த்தைகள் கோழைபோல் யாழிருந்தும் ராகமின்றியேங்கி போகுதே
வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…
ஹ்ம்ம்…காதலின் வேதங்களில்
நியாயங்கள் மாறி போகுதே
எண்ணங்கள் மீறிடுதே
வா…பாரங்கள் மேகம் ஆகுதே
பாதைகள் நூறாய் தோன்றுதே
உன்னோடு ஒன்றாகவே
காதல் நிலவை அட நான் காயவா
காலை ஒளியில் ஏமாறவா வா…
காயும் இருளில் அட நீ வாழவா
விடியுமிந்த காலை நமதே அழகே…
வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…
---------
கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
வாழா
என் வாழ்வை வாழவே
தாழாமல் மேலே போகிறேன்
தீரா உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆழ்கிறேன்
...
இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
வாழ்க்கை போகும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகாய்
...
இரு காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா..
நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறுக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்
தோ…காற்றோடு
வல்லூரு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்
நீரின் ஆழத்தில்
போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள்
நான் மூழ்கினேன்
திமிலேரி காளை மேல்
தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில்
கை கோர்த்து
நானும் நடப்பேன்
...
-----
பேரன்பே காதல் உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்
சதா... ஆறாத ஆவல்
ஏதேதோ சாயல் ஏற்று திரியும் காதல்
ப்ரத்தியேகத் தேடல்
தீயில் தீராத காற்றில்
புள் பூண்டில் புழுவில் உள்ளத்தில் இல்லத்தில்
தானே எல்லாமும் ஆகி நாம் காணும் அருவமே
இத்தியாதி காதல் இல்லாத போதும் தேடும் தேடல் சதா...
மாறாது காதல் மன்றாடும் போதும்
மாற்று கருத்தில் மோதும் மாளாத ஊடல்
நாம் இந்த தீயில் வீடு கட்டும் தீக்குச்சி
நாம் இந்த காற்றில் ஊஞ்சல் கட்டும் தூசி
நாம் இந்த நீரில் வாழ்க்கை ஓட்டும் நீர் பூச்சி
நாம் இந்த காம்பில் காமத்தின் ருசி
...
ஓர்... விடைக்குள்ளே... வினாவெல்லாம்... பதுங்குதே...
ஆஅ... நாம்... கரைந்ததே...
மறைந்ததே... முடிந்ததே... ஆஅ...
ஆஅ... கொஞ்சும் பூரணமே வா
நீ... கொஞ்சும் எழிலிசையே
பஞ்ச வர்ண பூதம் நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி ஈஈ...
காதலே காதலே தனி பெருந் துணையே
கூட வா கூட வா போதும் போதும்
...
ஆஅ... திகம்பர... வலம்புரி...
சுயம்பு நீ... நீ...
ஆஅ... பிரகாரம் நீ... பிரபாவம் நீ...
பிரவாகம் நீ... நீ...
ஆஅ ஆஅ... ஸ்ருங்காரம் நீ...
ஆங்காரம் நீ... ஓங்காரம் நீ... நீ...
நீ... அந்தாதி நீ... அந்தாதி நீ...
அந்தாதி நீ... நீ...
ஹ்ம்ம்... தேட வேண்டாம்
முன் அறிவிப்பின்றி வரும் அதன் வருகையை
இதயம் உரக்க சொல்லும்
காதல்... காதல் ஒரு நாள் உங்களையும் வந்து அடையும்
அதை அள்ளி அணைத்துக்கொள்ளுங்கள்
அன்பாக பார்த்துக்கொள்ளுங்கள் காதல் தாங்கும்
காதல் தயங்கும் காதல் சிரிக்கும் காதல் இனிக்கும்
காதல் கவிதைகள் வரையும்
காதல் கலங்கும் காதல் குழம்பும்
காதல் ஓரளவுக்கு புரியும்
காதல் விலகும் காதல் பிரியும்
கதவுகளை மூடாமல் வழி அனுப்புங்கள்
காத்திருங்கள்
ஒரு வேலை காதல் திரும்பினால்
தூரத்தில் தயங்கி நின்றால்
அருகில் செல்லுங்கள் அன்புடன் பேசுங்கள்
போதும்... காதல் உங்கள் வசம்
உள்ளம் காதல் வசம் மாற்றங்கள் வினா
மாற்றங்களே விடை காதல்...
கருத்துகள்
கருத்துரையிடுக