முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'மகா' பாரதம்


இன்று தீபாவளி.

May this joyous occasion bring You closer, safer and happier than before with all other lives around You :-)

நல்லதொரு சிந்தனையை இந்த நாளில் விதைக்கிறேன் இங்கு!

நம் 'மகா' பாரதத்தின் ஆரம்பப்புள்ளி் எது?

இந்திரப்பிரஸ்த மாளிகையின் மாயப்பொய்கையை உண்மையென நினைத்து துரியோதனன் தன் ஆடையை சுருட்டி கால் பதித்ததை கண்டு பாஞ்சாலை சிரித்ததால்தான் பின்னாளில் போர் மூண்டது என ஒரு புரிதல்.

மண்ணுக்காக பெண்ணை இழந்து அந்த அவமானத்தால்தான் போர் என இன்னொரு புரிதல்.

தமக்கைக்கு கண்ணற்றவனுடன் விருப்பமில்லா திருமணம் ஆனதற்கு பழிவாங்க தமையன் பகடை உருட்டி வரவழைத்த போர் என்று ஒரு புரிதல்.

செஞ்சோற்றுக்கடன் தீர்க்க கர்ணன் சேராத இடம் சேர்ந்ததால் என ஒரு புரிதல்.

குந்தியின் தவறை கர்ணன் இருக்கும்போதே அவள் உலகிற்கு அறிவித்திருந்தால் யுத்தமே நிகழ்ந்திருக்காது என ஒரு புரிதல்.

மாயக்கண்ணன் நமக்கு ஒரு வாழ்வியல் சேதி சொல்லவே அவரவர் அவ்விதம் என ஒரு புரிதல்.

எழுத்தாளர் சோ தன் மகாபாரதம் பேசுகிறது நூலில் தெளிவாய் சொன்னதை இன்றுவரை வேறு யாரும் அடிக்கோடு இட்டு காட்டவில்லை;

'ஒன்றின் விளைவாக இன்னொன்று. அதன் விளைவாக இன்னொன்று என மனித நகர்வில்தான் மகாபாரதம் என்கிற சங்கிலித்தொடர் நிகழ்வுகள் நிகழ்ந்த'தாக எழுதுகிறார்.

தீபாவளி கூட்டத்தில் ஒரு உணவகத்தில் என்னருகே ஒரு டேபிளில் ஒரு ஐயப்ப பக்தர், காலணியின்றி. எதிர்புறம் ஒரு காலனியவாதி, பிரிட்டிஷ்காரர், காலில் ஷூக்களுடன். இருவரும் அவரவர் தட்டில் ரோஸ்ட், சாம்பாரில் குழைத்து. 

நட்பான புன்னகை, விசாரிப்பு, 'Your attire, I see many wearing similar stuff; religious?' என காலனி கேட்க, 

"யு நோ? லார்ட் ஐயப்பா, கன்னி காட்? நோ வுமன், வெரி பவர்ஃபுல். 48 டேய்ஸ் ப்ரேயர், நோ அவுட்சைட் ஃபுட். தென் வி வாக். எய்ட்டீன் ஸ்டெப்ஸ் அபோவ், லார்ட் சிட்ஸ் ஆன் எ டைகர்' என குத்து மதிப்பாய் காலணியற்ற பக்தர் பதில் சொல்ல

" Wow! Great belief! All the best" என காலனி மகிழ, 

இருவரும் அவரவர் பில்லை செட்டில் செய்து தத்தம் பயணம் தொடர்ந்தனர்.

இதுவே 'மகா' பாரதம்! The greatest cauldron of civilization and compassion.

இந்த அகண்ட பாரதத்தில் அனைத்துயிரும் இன்பமுற வாழ்ந்துதான் பார்ப்போமே! நல்லதொரு நிகழ்வை நாம் துவக்கி, அது மிக நல்லதொரு சங்கிலித்தொடராக நம்மிடம் இருந்து நீளட்டுமே. உலகனைத்தையும் பிணைக்கட்டுமே! 

தன்னலம் சார்ந்த குறுகிய கண்ணோட்டங்களும், சட்டங்களும் இந்தப்பேராற்றில் உருளும் சிறு கற்கள். அவ்வளவே!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்