முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அலாவுதீனும் அடிமை இந்தியர்களும்

  2002 இல் ஒரு ஐரோப்பிய நிறுவனத்தில் மென்பொருள் எழுதும் வேலை (software programming).  புதிதாய் ஒரு ஐரோப்பிய பங்குச்சந்தை தொடக்குவதற்கு தேவையான வணிக இணைப்பு மென்பொருள் எழுத பன்னாட்டு பொறியியல் குழு ஒன்று, எங்கள் குழு, ராப்பகலாய் உழைத்துக்கொண்டிருந்தது.  உலகம் முழுதும் பரவப்போகும் அந்த புதிய வணிக தளத்தின் மென்பொருள் கட்டமைப்பின் தலைவர், Michael Schumacher, ஒரு ஸ்விஸ் ஜெர்மன் மனிதர். ஒரு கட்டமைப்பை முன்னடத்திச்செல்ல அவசியமான தலைமைப்பண்புகள் இவரிடம் ஏராளம். அடுத்தவர் நேரத்தை வீண்டிக்கமாட்டார், தனது குழு உறுப்பினர்களை துல்லியமாக கணிப்பதுல் வல்லவர் ஆனாலும் அவர்களில் யாராவது பணியில் பிழை செய்தால் அப்பழியை அவர் ஏற்றுக்கொண்டு சரி செய்வார். மிகப்பெரிய வளமான குடும்பத்தில் பிறந்திருப்பாரோ? உலகப்புகழ் கல்லூரிகளில் படித்திருப்பாரோ என்றால் அது மாதிரியான பின்புலமெல்லாம் அவருக்கு இல்லை. ஒரு நாள் மாலை பணி முடித்து அவரோடு தேநீர் அருந்துகையில் அவரது பெயரில் உள்ள Schumacher என்பதன் பொருள் கேட்டேன். அவரது விடை சட்டென அலாவுதீன் கில்ஜியை என் நினைவில் கொண்டு வந்தது. அதனோடு கூடவே என்னுள் ஒரு ஏக்கப்பெருமூச்சையும

நாலு வேதம் நாலு வர்ணம் மூவண்ணம்

  இன்று உழைப்பாளர் தினம்.  பேராசைப்பெருவணிகத்தின் வளம் மேலும் கொழிக்க பல்வேறு வகைகளில் கடுமையாய் உழைத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்தப்பதிவு அர்ப்பணம்! இழந்த ஆற்றலை மீண்டும் பெற அரியவகை மூலிகைகள் போல அரசியலில் இறையின் பயன்பாடு ஆகிக்கொண்டிருக்கிறது உலகம் முழுவதும். உலகம் முழுவதும் அடக்கியாண்டவர்களும் அடிமைப்பட்டுக்கிடந்தவர்களும் இன்று ஒரே மேசையில் ஷாம்ப்பெயின் / வோட்கா குடித்து புரிந்துணர்வு ஒப்பத்தங்கள் செய்கிறோம். ஷாம்ப்பெயின் / வோட்கா போதை தெளிந்ததும் உள்ளூரில் நமக்கு வேண்டாதவரை அவரவர் வணங்கும் இறைவழி கட்டம் கட்டி "1100இலே, 1300 இலே நம்மை அடிமைகளாக்கி இவர்களெல்லாம் என்னென்ன கொடுமைகள் எல்லாம் செய்தார்கள் மக்களே! இவர்களுக்கு நாம் சரியான பதில் தரவேண்டாமா?" என குற்றப்பரம்பரை முத்திரை குத்தி ஏழாம் தலைமுறையையும் சந்தேகத்தின் வழிமட்டுமே பார்க்கும் ஓட்டு வங்கி அரசியல் செய்வோம். சரித்திரத்தில் நிகழ்ந்த சில அநியாயங்கள் காலப்போக்கில் சரிசெய்யப்படும், செய்யப்படவேண்டும். அதுதான் மனிதகுல வளர்ச்சி. இது முஸ்லீம் கிறிஸ்துவ காலனியாதிக்கத்தின் விளைவு என்கிற புள்ளியில் இருந்துதான் தொடங்குகி

KGF ஒண்ணுடா, KGF ரெண்டுடா!

  பட்டி தொட்டி எல்லாம் கேஜிஎஃப் காய்ச்சல் கொரோனாவுக்கே டஃபு குடுத்தப்பகூட நான் சிக்கிக்கல. தெளிவா ஒதுங்கியே இருந்தேன். இப்ப பார்ட் 2 வந்தாலும் வந்தது, காய்ச்சல் அதிகமாக, 'தியேட்டர்லதான் பாக்கணும்! நீ கூட்டிகிட்டு போ!'' என அழுத்தமும் சேர்ந்து கொள்ள, 'பார்ட் 1 முதலில் ஓடிடி இல் பார்க்கிறேன். அப்புறமா முடிவு பண்ணலாம்' என்று... மூன்று முறை முயற்சி செய்து விட்டேன் முடிலபா! முதல் முறை 10 நிமிடம் மட்டுமே பார்க்க முடிந்தது. இரண்டாம் முறை 17 நிமிடம். மூன்றாம் முறை முப்பத்து மூன்று நிமிடம், sheer torture! கதையிலும் அதுவே, காண்பவருக்கும் அதுவே! தங்க சுரங்கங்களில் கொத்தடிமைகள், மனிதர்கள் dispensable resources. Bleak bleak bleak life. இதில் முளைத்து வரும் விடிவெள்ளி, இல்லை இல்லை, சுடர் விளக்கு...இல்லை இல்லை, தீப்பந்தம்...இல்லை இல்லை, வெடிகுண்டு...இல்லை இல்லை சூறாவளி...இல்லை இல்லை, கடவுள்போல ரட்சகன், எதற்கும் அஞ்சான் இவனை வெல்லல் யார்க்குமரிது! அதிலும் படத்தில் நாவலாசிரியர் ஒருவர் வரலாற்றில் மறைக்கப்பட்ட கதை சொல்கிறேன் என ரன்னிங் கமெண்டரி தொடங்கி படம் முழுதும் நிறுத்தாமல் முழங்க,

C/O என் தாயார் எஸ்டேட், முன்டக்காயம், கேரளா

  முன்டக்காயம் - கேரளா நூறு+ வருடங்களுக்கு முன்... ஊட்டியில் ஒரு மழை நாளில் கிறிஸ்தவ இறை சேவையில் தம்மை அர்ப்பணித்த ஒரு பெண்கள் குழு குளிரில் நடுங்கிக்கொண்டே நடந்துகொண்டிருக்கின்றனர். அவர்களை மெல்ல தாண்டிய ஒரு கார், நிற்கிறது. இறங்கிய மனிதர் 'I will drop you sisters' என்று அந்த பெண்களை காரில் ஏறிக்கொள்ள வேண்டுகிறார், 'ஏன் இப்படிப்பட்ட மழையில் நடந்து செல்கிறீர்கள்? வாகனம் இல்லையா?' என கேட்கிறார். 'எங்கள் கன்னிமடத்தில் இல்லை' என்கிறார்கள். அடுத்த நாள் காலையில் புத்தம்புதிய Dodge கார் ஒன்று அவர்களது கான்வென்ட் முன் நிற்கிறது. "ஐயோ! வேண்டாமே! ட்ரைவர் எல்லாம் கட்டுப்படியாகாது. பெட்ரோலுக்கும் செலவாகும். வேண்டாமே!" என மறுக்கிறார்கள். தன் சொந்த செலவில் ட்ரைவரை நியமித்து, ஊட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், 'இந்த காருக்கு ஆகும் பெட்ரோல் பில்லை எனக்கு அனுப்பி விடுங்கள்' என ஏற்பாடு செய்து கேரளா திரும்புகிறார் அந்த மனிதர். முன்டக்காயத்தில் அவரது எஸ்டேட். எஸ்டேட்டின் பெயர் Endayar - அதாவது, "என் தாயார்" என்கிற தமிழ் சொற்களை, மிக விரும்பி அவரது

நாம எல்லாம் சேம் சேம்!

  இலங்கை திவாலாகிறதா? நேபால்தான் அடுத்தது, நீ வேணா பாரேன்! பாகிஸ்தான்லயும் ப்ராப்ளமாமே?! வார்னால நமக்கு நல்லதொரு வாய்ப்பு, பிசினசு பிச்சிக்கப்போவுது! 5G வந்திடுச்சின்னா பாரேன், இந்தியாவோட வளர்ச்சி வேற லெவல்! சைனால கொரோனா மறுபடி பரவுதாம். அவனுங்க ஆர்டர்லாம் நமக்குதான் இனிமே! பாமாயிலு இந்தோனேசியாகாரன் தர்லன்னா என்ன? நாமதான் வடகிழக்கில நட்டுகிட்டிருக்கிறமே?! எந்த வண்ணங்களில், எந்த விலையுயர்ந்த இழைகளில், எந்த உலகப்புகழ்பெற்ற  brandகளால் செய்யப்பட்டிருந்தாலும் நம் கோவணம் கோவணம்தானே? அதன் கடைசி இழை உறிஞ்சி இழுக்கப்படும்வரை... பேசுவோம் பேசுவோம் பேசிக்கொண்டே இருப்போம். ஏனெனில், பேச்சு எங்கள் உயிர் மூச்சு! சரி... மொத்தமா உருவிட்டாங்னா?! அதுக்கென்ன போச்சு? நம்முடையத மட்டுமா உருவுவாங்க? எல்லாரோடதயும்தானே, அப்பால நாம எல்லாம் சேம் சேம்! 'ச இல்லயா, ஷ வா? வுடுங்க பாசு, பாத்துக்கலாம்!' :-)  (PC: Wikipedia)

காற்றின் மொழி...

  என்ன சத்தம் இந்த நேரம்? சத்தங்களால் நிரம்பி வழியுது நம் தினம், தினம் தினம். காலை 5 மணி முதல் வ்ரூம் வ்ரூம் என வாகன விரைச்சல் (= 'விரைவான இரைச்சல்'), bell curve மாதிரி சன்னமாய் தொலைவில் தொடங்கி சடுதியில் உச்சம் தொட்டு சட்டென சன்னமாகி மறை...யும் என முடிப்பதற்குள் அடுத்த வ்ரூம்! அடுத்த அரை மணி நேரத்திற்குள் 1. கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் 2. மாவ் மாவ் மாவ் மாவ் (இட்லி தோச மாவாம்) 3. காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் 4. அக்கா அண்ணா ஐயா அம்மா பளசுக்கு புதுசு பளசுக்கு புதுசு வீட்ல தேவயில்லாம கெடக்கிற பளைய டிவி, ஏசி மெசினு, ப்ரிட்ஜி, வாசிங் மெசினு, வாட்டர் ஹீட்டரு, நியூஸ் பேப்பரு வீட்டு வாசல்லயே வாங்கிக்கிறோம் பணமா மாத்திக்கலாம். பொருளோட வாங்க சந்தோசமா போங்க! அக்கா அண்ணா ஐயா அம்மா பளசுக்கு புதுசு பளசுக்கு புதுசு வீட்ல தேவயில்லாம கெடக்கிற பளைய டிவி, ஏசி மெசினு, ப்ரிட்ஜி, வாசிங் மெசினு, வாட்டர் ஹீட்டரு, நியூஸ் பேப்பரு வீட்டு வாசல்லய

ஆளுக்கொரு வீடு கட்டுவோம்!

  "ஒரு ஆயிரம் பேரு வாழ்றதுக்கு ஒரு குடியிருப்பு வேணும். எவ்ளோ செலவாகும்? எவ்ளோ மெட்டீரியல்ஸ் ஆகும்? எத்தன வருசத்தில கட்டமுடியும்?" இந்த கேள்விக்கு விடை சில கோடி ரூவா, ஒரு சிறு காட்டை அழித்து அங்கிருந்து கிடைக்கும் மரங்கள், தனிமங்கள், மண், கல், பல நூறு ஆளுங்க, பல மாத வேலை, மூணு வேளை சோறு, ரெண்டு வேலை டீ, காபி, பலகாரம், பிக்கப்பு ட்ராப்பு... என நீண்ட என் நினைவோட்டம் நீள்கையில்... அவரு சொன்ன விடை என்னை அதிரவைத்தது! "செலவென்னங்க செலவு! ஒத்த பைசா வேணாம். மெட்டீரியலும் வாங்க வேணாம். ஆளுங்க என்னங்க ஆளுங்க...நாங்களே வேல செஞ்சிடுவோம்..." நம்ப முடியாத வியப்பில் நான்! 'மெய்யாலுமேவா?! நம்பவே முடியலயே! சரி.... எத்தன நாளாவும் குடியிருப்பு ரெடியாவுறதுக்கு?!' "அதென்னங்க கெரகம், நாளை காலைல சூரியன் வந்ததும் கும்பிட்டு தொடங்கினா மக்காநாளு காலைல கிரகப்பிரவேசமே செஞ்சிடலாமுங்க" என்றார் செங்கோடன்! கிட்டத்தட்ட மயக்கம் வராத குறைதான் எனக்கு. How on Earth is THIS POSSIBLE?! 'அவ்ளோ வேகமாவா? அப்டீன்னா அதிநவீன கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் அதிகமாக பயன்படுத்துவீர்கள் போல