முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எங்கெங்கு காணினும் வைரஸடா!

வைரஸ் என்ற உயிரி... உயிர் வாழ அதற்கு உணவு தரும் கொடை வள்ளல் ஒருவர் வேண்டும். அவர் தந்த உணவு, இருப்பிட வசதி காரணமாய் மகிழ்ந்து வளர்ந்து... தன்னைத்தானே வெகு வேகமாய் பிரதி எடுக்கும்.  அங்கு இடம் போதவில்லையென்றால் இன்னும் பல கொடையாளர்களை தேடும், பரவும். வைரசின் அடிப்படைத்தேவை உயிர் வாழ்தல், தனக்கு இடம் தந்த கொடையாளரை கொல்வதல்ல. தானும் வளரணும் அவரும் இருக்கணும் என்பதாய் அதன் சார்பு நிலை. வைரஸின் இவ்வாறான தங்கலை அதற்கு இடம் தந்தவர் விரும்பாவிட்டால் அதை துரத்த / மீண்டும் தம்மை அனுகாதிருக்க மருந்து ஏதேனும் பயன்படுத்துவார். அந்த மருந்து கொரோனா. அப்போ வைரஸ்? அப்போ கொடையாளர்? இந்த மருந்து கொஞ்சம் தீவிரமாய் வைரஸை ஒழித்தே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது ஏன் தெரியுமா? ம்யூட்டேஷன் காரணமாய் "நாமும் வளரணும், நமக்கு இடம் தந்த கொடையாளரும் (பூமிதானுங்கோ!) வளரணும்" என்ற அடிப்படை விதியிலிருந்து நழுவி, நமக்கு இடம் தந்த பூமியை அழித்தே தீர கங்கணம் கட்டிக்கொண்டு fast forward இல் இதுவரை ஓடிக்கொண்டிருந்த வைரஸ்கள் எல்லாம் Pause mode இல், ச

அடங்கமாட்டேங்குதே ஊரு!

ஊரு அடங்கமாட்டேங்குதே! நாட்கள் நகர நகர ஊரடங்கு இருப்பது மாதிரியான அறிகுறிகள் குறைந்தவண்ணமே இருக்கின்றன. மருந்துப்பொருட்கள் வாங்கித்தர மட்டுமே கடந்த பதினைந்து நாட்களில் சில முறை மெயின் ரோடு போக நேரிடும். இன்று அதில் ஒரு நாள். மருந்து விற்கும் கடை வாசலில் மாஸ்க் அணிந்த மூன்று பேர். மருந்து வாங்க வந்தவர்கள் என்று எண்ணி இடைவெளி விட்டு நின்றேன். கடைக்காரர் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே பிசியாக இருக்கவும் அந்த மூவர் ஏன் எனப்பார்த்தால்... அரட்டைக்கச்சேரி! 'ஏங்க, கொரோனாவைரஸ் நியூசெல்லாம் பாத்தீங்கதானே? அவசியம்னா மட்டும் வெளில வரலாம்னு சொல்லியும் இப்படி பண்றீங்களே நியாயமா? உங்களுக்கு தொத்துனா உங்க வீட்டில் உள்ளவங்களையும் பாதிக்குமே?' என்றேன். 'வந்தா... போவ வேண்டியதுதான்!' என ஜஸ்ட் லைக் தாட் பதில் சொல்லிட்டு ஞானச்செருக்கோடு கச்சேரிய அவங்க நடத்த, நொந்துபோய் மருந்தோடு வீடு திரும்பலாமென்றால், ஊரடங்கின் அறிகுறியே இல்லாத அளவு மக்களும், வாகனங்களும் சாலைகளில்... தனித்திரு, விழித்திரு, பசித்திருன்னு சொன்ன வள்ளலாரையே 'கடை விரித்தேன்... கொள்வா

ஆலிவருக்கு என்ன ஆச்சி? / Oliver's Story

"Sometimes I ask myself what I would be if Jenny were alive. And then I answer: I would also be alive" ஆலிவரோட ப்ரச்னையே இதுதான். கண்ணை திறந்ததில் இருந்து மூடுவது வரை ஜென்னி, ஜென்னி, ஜென்னி... ஜென்னி கேன்சரில் இறந்தபோது அவளுக்கு வயது 24, just twenty four... இரண்டு ஆண்டுகள் ஜென்னி இல்லாத வாழ்வு, அவளுடைய நினைவுகளோடு மட்டுமே... வீடு, வாகனம், வேலை வசதிகள் நிறைந்திருந்தாலும் ஜென்னி இல்லாத வெறுமை அவனை வாட்டுகிறது. நடைபிணமாய் வாழ்கிறான். ஜென்னியின் அப்பாவும், ஆலிவரின் நண்பர்களும் எவ்வளவோ பெண்களை பரிந்துரைத்தும் அவன் மனம் தேடுவது இல்லாத ஜென்னியை மட்டுமே. ஆனால் காலம் யாரையும் மாற்றுமே! அவனையும் மாற்றுகிறது. மறுபடியும் ஒரு magic நிகழ்கிறது. ஆலிவர் உள்ளம் மீண்டும் காதல் வசம். மார்சி, ஆளுமை மிகுந்த, வெற்றிகரமான தொழிலதிபர் (ஆயத்த ஆடைகள் விற்கும் பெருநிறுவனம்). அவள் அப்போதுதான் ஒரு துன்பமான திருமண உறவை முறித்து தன் காயங்களை ஆற்றிக்கொண்டிருப்பவள், புத்திசாலி.  காதல் பெருக, இருவரும் இணைந்து வாழ முடிவெடுக்கின்றனர். ஆலிவர் என்ன முயன்றாலும்

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்

ராங் நம்பர் but ரைட் நம்பர்!

வருடம் 1977. முந்தைய வருடம் 14 படங்கள். இந்த வருடம் 18 படங்கள்! வயது 22 மட்டுமே! இரவு பகலாய் உழைக்கும் தாகம், நடிப்பின்மீது மாளாத காதல், எந்த பாத்திரமானாலும் குருநாதர் இயக்கத்தில் நடிக்க தயார், தனக்கு ஸ்கோப்பே இல்லாத கதையானாலும் பரவாயில்லை! குருநாதர் பார்த்தார், 'இவனை ஒரு வழி பண்ணிடலாம்!' என ஒரு ரோல் தந்தார். திருமண வாழ்வை சில வருடங்கள் சுகித்தபின்னும், மனைவி மீது மாறாத காதல் இருந்தும், கண்ணில் படும் பெண்களையெல்லாம் மயக்க எந்த எல்லையையும் மீறக்கூடிய, உண்மை அறிந்த மனைவியிடம்கூட தன் குணம் மாறாமலே வசியத்தை தொடரக்கூடிய ஒரு ரோல். காமம் மட்டுமே உணர்வாய் சுற்றும் இவரது வலையில் சிக்குபவர் எந்தப்பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை, அந்தப்பெண்களே மனம் மாறி வேறு திருமண பந்தத்தில் இருந்தாலும்கூட! இவரிடம் வேலை செய்யும் குமாஸ்தா, ஒரு கட்டத்தில் இவரது பாவச்சுமைகளை சுமக்கத்தொடங்கி, நோயாளியாகி, வாழ்வு வெறுத்து, கோவில்களில் உபந்யாசம் செய்வார். அங்கும் துரத்திச்சென்ற இவரை கண்டதுமே அவருக்கு மனக்கொதிப்பு அதிகமாகி கன்னாபின்னாவென திட்டி மயங்கி சாய்வார். மன்மதனாய் வலம்

இவந்தான்யா போராளி!!

இரண்டாம் உலகப்போர் பரவிக்கொண்டிருந்த நேரம்.  ஆண்டு 1941. க்ரீஸ் நாடு, உலக நாகரீகத்தின் தொட்டில் என மேற்கத்திய தொல்லியலாளர்கள் கொண்டாடிய நாடு, ஹிட்லரின் நாஜி படையிடனரிடம் வீழ்ந்தது.  நாடு ஆக்கிரமிக்கப்பட்டது.   தனது வெற்றியை உலகிற்கு உரக்க தெரிவிக்க நாஜி படையினர் தேர்ந்தெடுத்தது அக்ரோபோலிஸ் எனப்படும் (அந்நாட்டின் தொன்மையின் சின்னமாய் நிற்கும்) ஒரு கட்டிடம். Akropolis? கிரேக்க நாகரிகத்தின் உச்சம். ஏதென்ஸ் நகரின் மிக உயர்ந்த குன்றின் உச்சியில் மூன்று ஹெக்டேர் நிலத்தில் நிறுவப்பட்ட உன்னதமான கோட்டை போன்ற வசிப்பிடம். பண்டைய கட்டிட கலைகளின் உச்சம்! மிச்சத்துக்கு கூகுள் செய்வீர் :-) அதன் உச்சியில் அது வரை பறந்துகொண்டிருந்த கிரேக்க கொடியை இறக்கி நாஜி சின்னமான ஸ்வஸ்திகா கொடியை ஏற்ற அவர்கள் முடிவு செய்து, அந்த உயர்ந்த கட்டிடத்தின் உச்சிக்கு ஒரு கிரேக்க வீரனை அனுப்புகின்றனர், 'உனது தேசியக்கொடியை இறக்கிவிட்டு, கழற்றிவிட்டு, அதே கம்பத்தில் எங்களது கொடியை பறக்கவிடு' என்ற உத்தரவுடன். ஏறியவன் இறக்கினான் தனது தேசியக்கொடியை, கழற்றினான்... ஸ்வஸ்திகா கொடிய

உரசிட்டு, எதிர்த்ததும் தங்கச்சி மாதிரின்னான்...

இன்றைய ஜனதா ஊரடங்கின் பகல் பொழுது ருத்ராவோடு கழிந்தது... என்று முடிக்கும் முன்பே மஞ்சுவும், அருணும், தியாகுவும் போட்டி போட்டுக்கொண்டு சண்டை பிடித்தனர். இவர்களை எனக்கு சில வருடங்களாய் தெரியும். பல நாள் பழகிய நட்பு போல ஏதோ ஒரு உணர்வு. வாருங்கள், இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவர்களது நட்பு உங்களையும் தொற்றட்டும்! தியாகு, ஒரு விளம்பர நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர். பெண் பித்தன். பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடங்கியே, போகப்பொருளாகவே இருக்கவேண்டும் என்று ஆணித்தரமாய் நம்புகிறவன். அதன்படியே வாழ்கிறவன். அருண், அவனது நெருங்கிய நண்பன். விளம்பர பட டைரக்டர். பெண்கள் பற்றிய டாகுமெண்டரி படமும் எடுப்பவன். புரட்சிகரமான கருத்துகளை வாழ்வாகவே மாற்றிக்கொண்டவன். பெண்களை சக உயிர்களாய், உயர்வாய் பார்ப்பவன். தியாகுவின் பார்வையில் அவன் சாமி படங்கள் மட்டுமே பார்க்கும் 'ர்ர்ரொம்ப ஜென்டில்மேன்'. மஞ்சு, தியாகுவின் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு புதுமைப்பெண். தளைகள் இன்றி, தனக்கான உலகம் என்கிற பார்வையோடு வளையவருபவள்.  தியாகு அவளை அருணுக்கு உதவி செய்ய பணிக்கிறான்