"Sometimes I ask myself what I would be if Jenny were alive.
And then I answer:
I would also be alive"
ஆலிவரோட ப்ரச்னையே இதுதான்.
கண்ணை திறந்ததில் இருந்து மூடுவது வரை ஜென்னி, ஜென்னி, ஜென்னி...
ஜென்னி கேன்சரில் இறந்தபோது அவளுக்கு வயது 24, just twenty four...
இரண்டு ஆண்டுகள் ஜென்னி இல்லாத வாழ்வு, அவளுடைய நினைவுகளோடு மட்டுமே...
வீடு, வாகனம், வேலை வசதிகள் நிறைந்திருந்தாலும் ஜென்னி இல்லாத வெறுமை அவனை வாட்டுகிறது. நடைபிணமாய் வாழ்கிறான்.
ஜென்னியின் அப்பாவும், ஆலிவரின் நண்பர்களும் எவ்வளவோ பெண்களை பரிந்துரைத்தும் அவன் மனம் தேடுவது இல்லாத ஜென்னியை மட்டுமே.
ஆனால் காலம் யாரையும் மாற்றுமே! அவனையும் மாற்றுகிறது.
மறுபடியும் ஒரு magic நிகழ்கிறது. ஆலிவர் உள்ளம் மீண்டும் காதல் வசம்.
மார்சி, ஆளுமை மிகுந்த, வெற்றிகரமான தொழிலதிபர் (ஆயத்த ஆடைகள் விற்கும் பெருநிறுவனம்). அவள் அப்போதுதான் ஒரு துன்பமான திருமண உறவை முறித்து தன் காயங்களை ஆற்றிக்கொண்டிருப்பவள், புத்திசாலி.
காதல் பெருக, இருவரும் இணைந்து வாழ முடிவெடுக்கின்றனர்.
ஆலிவர் என்ன முயன்றாலும் ஜென்னி பிசாசை அவனால் மறக்கமுடியவில்லை.
'இதுவே ஜென்னியா இருந்தா இப்படி பண்ண மாட்டா', 'ஜென்னி மாதிரி வராது' என்பதாக வாக்கு வாதமாகி, கருத்து வேற்றுமை வலுக்கிறது. ஒரு காரசாரமான தருணத்தில், 'உனது நிறுவனத்திற்கு குறைந்த செலவில் ஆடைகள் தயாரிக்க Hingkong இல் Sweatshops ஐத்தானே பயன்படுத்துகிறாய்!?' என ஆலிவர் குறை கூற (தொழிலாளரை கொத்தடிமை போல நடத்தும், குறைந்த ஊதியத்தில், அடிப்படை காற்றோட்ட வெளிச்ச சுகாதார வசதிகள்கூட இல்லாத வியர்வைக்கடைகள்...) வெகுண்டெழுந்த மார்சி, தனது பாட்டி அப்படி ஒரு Sweatshop இல் உழைத்ததையும், மார்சி தொழிலாளர்களை மேன்மையாக நடத்துவதையும் சொல்லி எதிர்வாதம் செய்ய, உறவு அறுந்து போகிறது.
மனமுடைந்த ஆலிவருக்கு, அவனோடு ஒட்டுறவு அறுந்துபோன தந்தை ஆறுதலாயிருக்கிறார். தந்தை மகன் உறவில் தொலைந்த பலவற்றை இருவரும் மீட்டெடுக்க காலம் துணை செய்கிறது. ஆலிவர் தனது தந்தையின் நிறுவனத்திலேயே வேலைக்கு செல்கிறான்...
ஆலிவர் மீண்டும் காதல் வயப்படலாம், மறுமணமும் செய்யலாம், பிரியலாம், வேலையையும் விடலாம், இடம் மாறலாம்....
வாழ்வெனும் மகாநதியில் நீரோட்டத்தோடு நகர வேண்டிய யதார்த்தத்தை, ஆலிவரின் கதை வழியே ஜென்னியின் பிரிவால் வாடிய ஒரு தலைமுறையையே வாழ்வின் அடுத்த நிலைக்கு Erich Segal நகர்த்திச்சென்ற விதம், அற்புதம்.
Life goes on...
நூற்றி சொச்சம் பக்கங்களே ஆலிவரின் கதை.
Love Story படித்து சிறிய இடைவெளி விட்டு Oliver Story படித்துப்பாருங்கள். அது ஒரு வாழ்வனுபவம் தரும்!
கருத்துகள்
கருத்துரையிடுக