ஊரு அடங்கமாட்டேங்குதே!
நாட்கள் நகர நகர ஊரடங்கு இருப்பது மாதிரியான அறிகுறிகள் குறைந்தவண்ணமே இருக்கின்றன.
மருந்துப்பொருட்கள் வாங்கித்தர மட்டுமே கடந்த பதினைந்து நாட்களில் சில முறை மெயின் ரோடு போக நேரிடும்.
இன்று அதில் ஒரு நாள்.
மருந்து விற்கும் கடை வாசலில் மாஸ்க் அணிந்த மூன்று பேர்.
மருந்து வாங்க வந்தவர்கள் என்று எண்ணி இடைவெளி விட்டு நின்றேன்.
கடைக்காரர் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே பிசியாக இருக்கவும் அந்த மூவர் ஏன் எனப்பார்த்தால்... அரட்டைக்கச்சேரி!
'ஏங்க, கொரோனாவைரஸ் நியூசெல்லாம் பாத்தீங்கதானே? அவசியம்னா மட்டும் வெளில வரலாம்னு சொல்லியும் இப்படி பண்றீங்களே நியாயமா? உங்களுக்கு தொத்துனா உங்க வீட்டில் உள்ளவங்களையும் பாதிக்குமே?' என்றேன்.
'வந்தா... போவ வேண்டியதுதான்!' என ஜஸ்ட் லைக் தாட் பதில் சொல்லிட்டு ஞானச்செருக்கோடு கச்சேரிய அவங்க நடத்த, நொந்துபோய் மருந்தோடு வீடு திரும்பலாமென்றால், ஊரடங்கின் அறிகுறியே இல்லாத அளவு மக்களும், வாகனங்களும் சாலைகளில்...
தனித்திரு, விழித்திரு, பசித்திருன்னு சொன்ன வள்ளலாரையே 'கடை விரித்தேன்... கொள்வாரில்லை!' என புலம்ப வைத்த ஞான பூமியல்லவா நம்ம பூமி!
கொரோனாவுக்கு இது தெரியாம இங்க வந்து சிக்கிகிச்சே!
கருத்துகள்
கருத்துரையிடுக