வைரஸ் என்ற உயிரி...
உயிர் வாழ அதற்கு உணவு தரும் கொடை வள்ளல் ஒருவர் வேண்டும்.
அவர் தந்த உணவு, இருப்பிட வசதி காரணமாய் மகிழ்ந்து வளர்ந்து...
தன்னைத்தானே வெகு வேகமாய் பிரதி எடுக்கும்.
அங்கு இடம் போதவில்லையென்றால் இன்னும் பல கொடையாளர்களை தேடும், பரவும்.
வைரசின் அடிப்படைத்தேவை உயிர் வாழ்தல், தனக்கு இடம் தந்த கொடையாளரை கொல்வதல்ல. தானும் வளரணும் அவரும் இருக்கணும் என்பதாய் அதன் சார்பு நிலை.
வைரஸின் இவ்வாறான தங்கலை அதற்கு இடம் தந்தவர் விரும்பாவிட்டால் அதை துரத்த / மீண்டும் தம்மை அனுகாதிருக்க மருந்து ஏதேனும் பயன்படுத்துவார்.
அந்த மருந்து கொரோனா.
அப்போ வைரஸ்?
அப்போ கொடையாளர்?
இந்த மருந்து கொஞ்சம் தீவிரமாய் வைரஸை ஒழித்தே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது ஏன் தெரியுமா?
ம்யூட்டேஷன் காரணமாய் "நாமும் வளரணும், நமக்கு இடம் தந்த கொடையாளரும் (பூமிதானுங்கோ!) வளரணும்" என்ற அடிப்படை விதியிலிருந்து நழுவி, நமக்கு இடம் தந்த பூமியை அழித்தே தீர கங்கணம் கட்டிக்கொண்டு fast forward இல் இதுவரை ஓடிக்கொண்டிருந்த வைரஸ்கள் எல்லாம் Pause mode இல், சாத்திய கதவுகளுக்குப்பின் இருந்து முகமூடி அணிந்து மாதக்கணக்கில் கொஞ்சம் சிந்தித்தாலே விடை கிடைத்துவிடும் :-)
விடை கிடைத்த கூட்டமொன்றின் மகிழ்வு portrait இதோ!
கருத்துகள்
கருத்துரையிடுக