முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நழுவும் மொழி - 2 : கடல்

'தமிழ்னா எனக்கு உசுரு. நல்ல books எல்லாம் தேடித்தேடி படிப்பேன். ஆன்லைன்ல கூட கிடைக்குது...But you know, நல்ல தரமான நாவல்லாம் rare. புதுசா எழுதறவங்க சுமாராதான் எழுதுறாங்க...அதுவும் fiction தான் நல்லாருக்கும். Non fiction லாம் chance ஏ இல்ல...' வணக்கம், உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். இந்தப்பதிவு உங்களுக்கே! கடல் என்பது நம்மில் அநேகருக்கு வியப்பு ஏற்படுத்தும் ஒரு பெரிய பாத்திரம், அவ்வளவே. அலைகளில் பயத்துடன் கால் நனைத்தும், ஈர மணலில் நடை பயின்றும் கிளிஞ்சல்கள் பொறுக்கியும் மகிழ்வோம். கரை திரும்பி கால் மணலைத்தட்டுகையில் 'என்னா பிசுபிசுப்பு. தட்டுனாலும் போமாட்டேங்குது' என்று அலுப்போம். சமஸ் என்கிற இளைஞர் நம்மில் ஒருவர்தானென்றாலும் அவர் நம்மைப்போல் அல்ல!  'நீராலானது உலகு, உலகில் 70 சதம் கடல்' என்ற விபரங்களை நம்மைப்போல் படித்ததும் மறப்பவரல்ல. 30 சத நிலப்பரப்பில் வாழும் நமக்கு எஞ்சிய 70 சத வாழ்வை , அவை சூழும் நிலப்பரப்பை, மனிதர்களை, அவர்களின் வலிகளை, துயரங்களை, மகிழ்ச்சியை (இளையராஜா!) அவர்களுள் ஒருவராய் வாழ்ந்த நாட்களை, சேமித்த முத்துக்களை அ

மால்துஸ் பொறியில் சிக்கிய எலி நாம்!

ஒரு சமுதாயம்.  எல்லோருக்கும் வேண்டிய அளவு உணவு.  உண்டு பெரு(க்)கும் சமுதாயம் ஒரு கட்டத்தில் பஞ்சத்தை சந்தித்தே தீரும்.  பஞ்சம் போக்க உற்பத்தி பெருக்கம். பசித்த வயிறு, பெருகிய உணவை உண்டு உற்சாகமாகி மறுபடி சந்ததி பெருக்கும். மறுபடி பஞ்சம் வந்தே தீரும். (பஞ்சம் வராவிட்டாலும் வியாதி வரும், யுத்தம் வரும். மக்கள் தொகையை குறைக்கும்). இவையெல்லாம் தாமஸ் ராபர்ட் மால்துஸ் 200 ஆண்டுகளுக்கு முன் சொல்லிச்சென்றது, மால்துஸ் பொறி (Malthus trap) எனப்படுவது, என்றும் நிற்பது.  அவர் அதோடு நிற்கவில்லை, இன்னும் சொன்னார்: 'உணவுப்பொருளை வெளிநாட்டில் யாருக்கோ விற்று அல்லது யாரிடமோ வாங்கி அதிக பொருளீட்டலாம்  என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு உள்நாட்டு உணவுத்தேவையை உள்நாட்டிலேயே  நிறைவேற்று.  தேவைக்கான உற்பத்தி உள்நாட்டிலேயே நடக்க இசைவாக, இறக்குமதி வரி விதி, எந்த உணவுப்பொருள் வெளியிலிருந்து வந்தாலும்.' செமிகண்டக்டரில் மூர் விதியை கொண்டாடுவது போல் மால்துஸ் பொறியை கொண்டாட ஆளில்லை.  நம் புறக்கணிப்பின் காரணம் என்ன தெரியுமா?  Ignorance. மூர் விதி, வேலும் மேலும் அ

என் விழித்திரையில் - 1 - கோகிலா

இந்து ஆங்கில நாளிதழில் stamp size க்கு ஒரு photo. கருப்பு வெள்ளை. கமல், ஷோபா முகங்கள் மட்டுமே. அந்த கருப்பு வெள்ளையிலும் ஏதோ ஒரு வசியமிருந்தது, ஈர்த்தது... பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறைதான் நான் அவருடைய படங்களில் முதலில் பார்த்தது. 'கருப்பு வெள்ளைல படம் எடுத்திருக்காரா இந்தாளு?, அதுவும் கமலை வச்சி!', பாக்கணும், உடனே பாக்கணும் என சில ஆண்டுகள் தேடி அலுத்தபின்(பழைய, நல்ல படங்களை நம்ம ஊரில் எந்த கடையிலாவது வாங்கி காட்டுங்க பாக்கலாம்!) YouTube வழி காட்டியது! டாக்டர் மகள், ஓயாது பயணம் செய்யும் அப்பா, மகளுக்கு துணையாய் அவள் வயதையொத்த வேலைப்பெண், Paying guest ஆக தங்கும் bank manager, அவர் நண்பர் என சொற்ப பாத்திரங்களை வைத்து உணர்வுக்கோட்டை கட்டியுள்ளார். பாலு என்றால் அடல்ட்ரி இல்லாமலா என்று அப்போதே தெரியும்போல. இந்தக்கதையின் knot உம் அதுவே. எப்படி அது அவிழ்கிறது என்பது ஏராளமான சுவாரஸ்யத்துடன், மிக மிக இயல்பான நடிப்புடன் (ஒருவர் மட்டுமல்ல, அனைவருமே!) அற்புதமான ஒளிப்பதிவில் (சத்தியமாய் உணர்வீர்கள், கருப்பு வெள்ளையிலும்) கண்முன்னே விரிகிறது. ஐம்பது படங்களுக்குமேல், உச்

என் விழித்திரையில்: முன்னுரை

சிறுவயது முதலே நல்ல சினிமாக்கள் மீதான எனது காதல், ஏதோ ஒரு சிற்றூரில் தொடங்கி ஊரழகு சினிமா முதல் இன்று உலக அழகு சினிமா வரை ரசிக்கும்போதும் மாறாதிருக்கிறது.  இந்த ரசனை பல நல்ல நட்புகளை அடையாளம் காட்டி, இன்றளவும் தொடரச்செய்கிறது ('ஹய்யோ, உனக்கும் அந்தப்படத்தில அந்த சீன் பிடிச்சிதா! வாவ்'!!). குறிப்பாக வெளி நாடுகளில் வாழ்கையிலும் மொழி, இன, புவி எல்லைகள் தாண்டிய ஒத்த அலைவரிசை (same wavelength) ரசனைகளை இணைத்து, நல்ல படங்கள் பார்க்க திட்டமிட்டு, நாள் குறித்து, நேரம் ஒதுக்கி, பார்த்து, அலசி...ஒரு happy state of mind உடன் பிரிந்து அடுத்த நல்ல படம் கேள்விப்பட்டதும் மீண்டும் திட்டமிட்டு...என. நல்ல சினிமான்னா? 'அட, இப்டி கூட கதை யோசிக்க முடியுமா!', 'என்னா நடிப்பு!',  'ஐயோ மனசை உருக்குதே இசை...' ... என்பவற்றையெல்லாம் கடந்து ஏதோ ஒன்று அந்தப்படத்தைப்பற்றி என்று நினைத்தாலும் / பேசினாலும் நம் பதின்பருவ நாட்களில் எதிர்பால் நட்பு தந்த பரவசத்தை மீண்டும் தருதோ அதுவே நல்ல சினிமா! மொழி இதற்கு ஒரு தடையே அல்ல. எனக்குப்பிடித்த, என்னை பாத

புள்ளிகளை சிறைபிடித்த கோலம்!

கோலம் பார்த்திருக்கிறீர்களா? புள்ளி வைத்து கோடிழுத்து? மாக்கோலம் கோலத்துள் எல்லாம் தலை, ஏனெனில் அது எறும்புக்கும் ஏனைய உயிர்க்கும் உணவளிக்கும் உன்னதக்கலை. சமையலறையில் மட்டுமே அடைந்திருந்த பெண்கள் மனச்சிறைகளில் முடங்கிவிடாமல் கற்பனைத்திறன் வளர்த்து புள்ளிகளிலும் கோடுகளிலும் தம் எண்ணத்திறத்திற்கேற்ப செய்த மாயம், எறும்புக்கும் ஏனைய உயிர்க்குமான விருந்து உபசரிப்போடு இணைந்தபோது ஒரு பண்பாடு பண்பட்டது.  காட்டில் கதிரடித்து நெல்மணிகள் உதிர்த்து, சேர்த்து, மூட்டை கட்டி வீடு சேரும். அதில் ஒரு கையளவு உரலில் ஏறி தோலுறிந்து அரசியாகி, அரிசியாகி சேரும். முழு அரிசி சோறுக்கும், உடைந்த  அரிசி 'நொய்'யென்று ஏனைய உணவுக்கும் சேமிக்கப்படும். மிஞ்சிய அரிசித்துகள்கள் அரைபட்டு 'கோலமிடும்' மாவாகும். எறும்புக்கு உணவாகும். கதிரோ கால்நடைகளுக்கும் இன்ன பிற உயிரினங்களுக்கும் உணவாகும். நம் ஆதி'வாசிகள்' நெல் வீணாவதைக்குறைக்க என்று எந்த திட்டமும் இட்டதில்லை கதிரடிக்கையில். ஏனெனில் இந்த உணவு அனைத்துயிருக்குமானது என்ற அவர்களின் தெளிவான புரிதல். வீண் என்ற வார்த்தையையே அறிந்திரா

வலைக்கு வெளியே துள்ளும் எதுவோ! - 2

கேரளத்து எழுத்தாளர் நகுலனை அவர் வீட்டில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சந்தித்து உரையாடியதை நகுலன் இறந்தபின்பு பதிவிட்டிருந்தார் இந்த தலைப்பில். நகுலன் வீட்டில் அவர் கண்ட பூனையும் அதில் இடம் பெற்றதாய் நினைவு... கண்ணன் வீட்டிலும் யாருமில்லை...இல்லை இல்லை...யாரோ இருக்கிறார்கள் ஆனால் கண்ணன் இல்லை. கண்ணனை உங்களுக்குத்தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. ஒரு சராசரி மனித வாழ்வுதான் அவரது வாழ்வும். படிப்பு, வேலை, காதல், திருமணம், குழந்தை, குழந்தை படிப்பு, வேலை, திருமணம், பேத்தி,பேத்திக்கு முடியிறக்கி காது குத்து என ஐம்பத்தைந்து வயதில் கடமைகளை முடித்து, வாழ்வின்  வட்டத்திலிருந்து விடுபட்டு போய்விட்டார் நட்சத்திரங்களிடம். என்னேரமும் புன்னகை அணிந்தவர், இவரிடம் உதவி பெறாதவர் இங்கு குறைவே. ஓயாது வேலை, இறை பணி என இறுதி ஆண்டுகளை இறுதி என்று தெரியாமலே... முதல் நாள் வங்கியில் அவரது இருக்கைக்கு முன்னால் நெடிய வரிசை. எப்போது அங்கு சென்றாலும் அவரை சந்திப்பதும், என்ன வேலை இருந்தாலும் நிறுத்தி என்னோடு அன்போடு உரையாடுவதுமாய் வழக்கம். 'நாளை பார்க்கலாம்' என்று அன்றுதான் முதல்முத

பொத்தல்களால் நெய்த சேலை!

ஆடை என்பது மானம் காப்பது. அளவு, அழகு, எளிமை, வலிமை என்பவை எல்லாம் இதற்கு அப்புறம்தான்.  இழைத்து இழைத்து நெய்த ஆடையில் ஒரு ஓட்டையோ கிழிசலோ இருந்தால், 'சும்மாக்குடுத்தாக்கூட வேணாம்' என்பதாகவே உலகப்பொது மனநிலை. நம்மைப்போலவே நம் நாட்டிற்கும் ஒரு ஆடை உண்டு. அது இன, மொழி, வரலாறு, புவியியல் எல்லைகளைத்தாண்டிய ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது.  நாடு தாண்டியும் விரிந்து உலகம் முழுவதற்குமான ஒரே ஒரு ஆடை, வேற்றுமைகள் அனைத்தையும் அணைத்து மானம் காக்கும் அந்த ஆடை, உலகம் முழுவதும் Moral Fabric என்ற ஒற்றைப்பெயராலே அறியப்படுகிறது.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று என்றோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவன் மகிழ்ந்து கூவியபோது அதில் பொத்தல்களோ. கிழிசல்களோ இல்லை. இடைப்பட்ட காலத்தில் அவரவர் சக்திக்கு அவரவர் இட்ட பொத்தல்கள்தான் எத்தனை? ஒரே ஒரு நாளில், ஒரே ஒரு நிலப்பரப்பில் இன்று மட்டுமே புதிதாய் எத்தனை பொத்தல்கள்? 'ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை' 'மருத்துவக்கல்லாரி மாணவி தொங்கினார்' 'நீரில் மூழ்கிய நண்பனை காப்பாற்றாமல் மரண நிமிடங்களை வீடியோ எட