முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜென்னிக்கு என்ன ஆச்சி?

ஜென்னிக்கு என்ன ஆச்சி? அதுக்கப்புறம் ஆலிவருக்கு என்ன ஆச்சி? லவ் ஸ்டோரி. ஒரு நாட்டையே, ஒரு தலைமுறையையே காதல்வயப்படவைத்த புத்தகம். ஆலிவர், ஐஸ் ஹாக்கி ப்ளேயர். ஒரு கல்லூரியில் விளையாடச்சென்ற இடத்தில் ஜென்னியை பார்க்கிறான். பார்த்தவுடன் பற்றிக்கொள்கிறது பெருநெருப்பு.  அறிமுகம் செய்து உரையாடி விடைபெறும் முன்பு அடுத்தவாரம் அவளது கல்லூரிக்கு எதிரான போட்டியில் விளையாடப்போவதை கூறி அவளை போட்டி பார்க்க அழைக்கிறான். 'எந்த'பக்கத்துக்கு ஆடப்போற?' என கலாய்க்கிறாள் ஜென்னி. தாயிழந்த பெண். இத்தாலிய தந்தை, செல்ல மகள். ஆலிவரின் அப்பா வணிக காந்தம், அம்மா இல்லை, அப்பா இருந்தும் இல்லை என்பதாகவே அவனது உறவு. அவர் எதிர்க்க, அந்த எதிர்ப்பை எதிர்த்து ஜென்னியின் கரம் பற்றுகிறான். தேனாய் இனிக்கும் தனிக்குடித்தனம்.  ஒரு நாள் அவளுக்கு உடல்நலம் குறைகிறது. மருத்துவர் ஆராய்ந்து சொல்வது, கேன்சர்; சொற்ப நாட்களே வாழ விதித்திருக்கிறது. இந்த இளம் தம்பதி என்ன செய்கிறார்கள்? ஜென்னியின் தந்தை என்ன செய்கிறார்? ஆலிவரின் தந்தை, 'I won't even give you time of the da

கூடே - படம் இன்னும் பாக்கலையா!

கூடே - ரிவ்யூ லவ் ஸ்டோரி என்று ஒரு நாவல். ஜென்னி, நாயகி, 26 வயது, ஊற்றெடுக்கும் காதல், ஆலிவர் மீது. இறந்துபோகிறாள், 26 வயதில். அதை படித்தபின் இந்தப்பெயர் எனக்கு  Special ஆச்சு. கூடு - ஏழ்மையின் விளிம்பில் ஒரு மெகானிக் குடும்பம். பதின்வயது ஜோஷ்வா, கால்பந்தாட்டத்தை நேசிப்பவன், சோஃபியையும் சற்றே.  அவனுக்கு தங்கை பிறக்கிறாள். ஜென்னி என்கிற ஜெனிஃபர்.  அவனது உலகில் இறகு முளைக்கவைத்த தேவதை. விரலுக்கு மீறிய வீக்கமாய் அவளுக்கு ஒரு வியாதி. மருத்துவ செலவு ஏராளம். ஒரு கட்டத்தில் தகப்பன் கையறு நிலையில் இருக்கையில் Gulf இலிருந்து வந்திருக்கும் உறவினர் ஒருவர் தான் ஜோஷ்வாவை அழைத்துச்செல்வதாகவும், வேலை வாங்கித்தருவதாகவும் நம்பிக்கை அளிக்க, ஓநாயின் பின் வெள்ளாடாய் ஜோஷ் கிளம்புகிறான். தங்கையின் வாழ்வு அவனது சம்பாத்தியத்தில். பாலியல் வன்முறை, வாழ்வின் பெருஞ்சோகம் எல்லாம் அவனை நடைபிணமாய் மாற்ற, எண்ணெய்க்குழாய் சுத்தம் செய்துகொண்டிருக்கிறான். ஊரிலிருந்து செய்தி,ஜென்னி is no more. திரும்புகிறான்.  நல்லடக்கம் முடித்தபின் ஜென்னியை அடிக்கடி மருத்துவமனை அழைத்துச்செ

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித...

தடுப்பு சுவர் தாண்டி வளையல் கரம் ஒன்று. சுதாரிப்பதற்குள் நறுக்கென்று உச்சந்தலையில் கொட்டு! 'அம்மாடியோவ்! என்ற அலறலோடு வாயில் இருந்த பாதி சப்பிய புளிப்பு முட்டாய் பறக்க, வலியில உசிரு போயி வந்தது. "கௌன்டர் அட்டாக்! நௌ!" என முழக்கமிட்டு நாங்கள் மூவர், அரை டவுசரை இறுக்கிப்பிடித்தபடி வகுப்பிலிருந்து வெளியேறியபோதுகூட கேங் வாரின் உக்கிரத்தை அந்த நடுநிலைப்பள்ளி உணரவில்லை. Search Squad, செக்சன் செக்சனாய் தேடினோம். எல்லா செக்சனிலும் க்ளாஸ் நடந்துகொண்டிருந்தது. Usual Suspects எல்லாம் ரெட்ட ஜடை குனிஞ்ச தல நிமிராம எளுதிகிட்டு... "இது சாதாரண கொட்டு இல்ல; நாடி நரம்பெல்லாம் சண்டை வெறி புடிச்ச ஒரு பொண்ணோட கொட்டு" என கொய்யாப்பழ சைஸ் காயத்தை நான் தேய்க்க,  'கண்டிப்பா புளிப்பு முட்டாய்க்கோ வெள்ளரிப்பத்தைக்கோ ஆசைப்பட்ட ஒரு கூலிப்படை ஆளு செஞ்ச வேலையாதான் இருக்கும்!' என உறுதியாய் சொன்னான் சிங்காரவேல். என் டிகிரி தோஸ்த். அவனுக்கும் அடுத்த க்ளாசில் ஒரு வாயாடிக்கும் நிகழ்ந்த சண்டை சில நாட்களிலேயே Gang War ஆக வலுப்பெற, கொலாட்டரல் டேமேஜ் 'நங்'கென்று என்

வாசு! குரங்கு!!

கும்பகோணத்தில் பல கட்டு வீடு, ரயில் மாதிரி. வாசலில் நுழைந்து கொல்லை சுவர் தொட சில மணி நேரம் ஆகும் :-) ஏராளமான குரங்குகள், குட்டி முதல் மந்தி வரை. இஷ்டத்துக்கு நுழைந்து, கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடிவிடும். பின்கட்டு ஓட்டுக்கூரையில் அமர்ந்து உடைத்து உண்ண முயலும். உடைவது எதுவாக இருந்தாலும் கீழே கடப்பவர்மேல் அபிஷேகம்! அம்மா ஆடுகல்லில் மாவாட்டுகையில் ஒத்தாசை செய்யும் அடுத்த வீட்டுப்பெண் ஏதோ வேலையாக சொல்லிக்கொண்டு நகர, சற்று நேரத்தில் அவர் வந்துவிட்டதாய் உணர்ந்து கதை பேசிக்கொண்டே அம்மா மாவரைக்க, மாவில் கை துழாவிக்கொண்டிருந்தது அம்மா உயரமுள்ள மந்தி ஒன்று! பள்ளியிலிருந்து திரும்பி வீடு நுழைந்த சிறார்கள் நாங்கள், அலறிய அலறலில் மந்தி பதறி ஓட, அம்மாவுக்கு அப்பதான் தெரியும்! ஆனால் இந்தப்பதிவு அவர் பற்றி அல்ல. வாசு பற்றியது. வாசு, என் பால்ய நண்பன், அடுத்த வீடு. விடுமுறை நாளில் நாங்கள் டவுசர் பாண்டிகள் கூடி எங்கள் வீட்டு மாடியில் வாழைப்பழங்கள் தின்றவண்ணம் நூற்றுக்குச்சி விளையாடுகையில் ஜன்னல் வழியே குதித்தது அதே மந்தி! நாங்கள் அலறிய அலறலில் மொத்த தெருவும் பதறி ஓடிவர,

ரெவ்யூ: ஐ.எம்.ஒ சர்கார் ஒரு...

கார்ப்பரேட் கிரிமினலுக்கும் பொலிடிகல் கிரிமினல்சுக்கும் நடக்கும் போரில், பேசுகிறார்கள், அடிக்கிறார்கள், பேசுகிறார்கள், அடிக்கிறார்கள், ரத்தம் தெறிக்க தெறிக்க. ஜல்லிக்கட்டு, மாணவன்டா, மீனவன்டா, கந்துவட்டி, சென்னை வெள்ளம் என புல்லாங்குழலின் ஓட்டைகளை நிரப்பி, தேவைக்கேற்ப திறந்து மூடி வாசித்தாலும் கதையில் சீவனில்லை. ஆடி காரின் மீது போலிரோ ஒன்று டைவ் அடித்து தாண்டி செல்கையில் விஷால் கூட விசிலடிக்க மறந்து வேடிக்கை பார்த்திருப்பார்! ஒரு காட்சியில் டிசைனர் சூட்டில் கா. கிரிமினல், பொ.கிரிமினல் ஒருத்தரை அலேக்காக தூக்கி, தலைகீழாக, நெட்டுகுத்தாக்கி, அவரது தலையை தரையில் கடப்பாறை குத்து, சில குத்துக்கள், குத்தி சாய்க்கிறார், நம்மையும் சேர்த்தே... நீ கார்பரேட் கிரிமினல், நான் கருவிலயே கிரிமினல் (கானாவுக்கு கானா, பஞ்ச் ப்ரம்மாதம்!) என இறங்கிக்கொண்டே போகும் வசனங்கள்... ஜெயமோகனா இது?! மகா நதியை ஒரு குடத்தில் அடைத்தாலாவது தாங்கிக்கொள்ளலாம்; வெற்றிலை சாறு துப்பும் பாத்திரம் ரேஞ்சுக்கு... பணம் / புகழ் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல் அந்தப்பொண்ணுக்கு யாராவது அறிவுரை சொல்வார்களா? விஜய்,

கண்ணம்மா

உன் பிஞ்சுவிரல் என் சுண்டுவிரல் பற்றிய நொடியில் உலகம் பஞ்சாக, காற்றில் மிதந்து உயிர் வளர்த்த, உயிர் கரைந்த நாட்கள் உனது குழந்தை நாட்கள். எனக்கே தெரியாது என்னுள் பொதிந்திருந்த தாய்மை எட்டிப்பார்த்தது, உச்சி முகர்ந்தது. நான் தாயுமானேன். 'உயரமான கட்டிடங்களெல்லாம் எப்படி குளிக்கும்?' என ஒரு நொடியில் கேள்வியாகி, 'மழை பெய்யும்போது குளிச்சிடும், வெயில்ல காஞ்சிடும்' என மறுநொடியில் விடையாகி குமிழுடைக்கும் சிரிப்போடு பள்ளிக்கு கைகோர்த்து நீ நடக்கையில் நான் பாடம் பயின்றேன். பள்ளியில் விட்டு, மனதின்றி திரும்பி வரும் பாதையெங்கும் கொட்டிக்கிடக்கும் நம் உரையாடலின் சொற்கோவைகள் கூழாங்கற்கள் போல. மழலை சிரிப்பு புழுதிபோல் என்னைச்சூழ, மகிழ்வோடு சுவாசித்து நடந்து கடந்த நாட்கள்... (இன்றும்கூட தகப்பன் விரல் பிடித்து அந்த சாலையில் நடந்துபோகும் ஏதோவொரு சிறுமியின் கண்களில் அவை படலாம், மகிழ்வு தரலாம்...) வாழ்வெனும் பெருநதியில் அசைவிலா கூழாங்கற்களாய் சில்லிப்போடு என் நினைவுகளை சேர்த்துப்பிடிக்கும் இதுபோல பல கற்கள். இன்றொரு நாளில், வளர்ந்த பெண்ணாய் வாதிட்டு கோபமுற்று கதவடை

மழைக்கு ஒதுங்கிய வானம்

காற்றைத்துரத்தி மேகத்தை கடல் தள்ளி (சூரியக்)கதிரை ஏவி கடல் ஈரத்தை மேகத்தில் ஏற்றி புவியோட்டில் இரையும் பசித்த வயிறனைத்திற்கும் சில துளியேனும் பெய்யெனப்பெய்ய  பெருமழையை இறக்கி வேடிக்கை பார்க்குது மழைக்கு ஒதுங்கிய  கார்கால வானம். அமுதுண்ட மகிழ்வில் வெடித்துக்கிளம்பும் நன்றி பூவாய் காயாய் பறவையாய் மிருகமாய் இன்னும் என்னவெல்லாமோவாய் புவியின் பெருநிலமெங்கும். நன்றி கண்டு கனிந்து சிவந்த மழைவானின் மகிழ்ச்சி இங்கு கவிதையாய்!