முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூடே - படம் இன்னும் பாக்கலையா!




கூடே - ரிவ்யூ

லவ் ஸ்டோரி என்று ஒரு நாவல். ஜென்னி, நாயகி, 26 வயது, ஊற்றெடுக்கும் காதல், ஆலிவர் மீது. இறந்துபோகிறாள், 26 வயதில்.

அதை படித்தபின் இந்தப்பெயர் எனக்கு  Special ஆச்சு.

கூடு - ஏழ்மையின் விளிம்பில் ஒரு மெகானிக் குடும்பம். பதின்வயது ஜோஷ்வா, கால்பந்தாட்டத்தை நேசிப்பவன், சோஃபியையும் சற்றே. 

அவனுக்கு தங்கை பிறக்கிறாள். ஜென்னி என்கிற ஜெனிஃபர்.  அவனது உலகில் இறகு முளைக்கவைத்த தேவதை.

விரலுக்கு மீறிய வீக்கமாய் அவளுக்கு ஒரு வியாதி. மருத்துவ செலவு ஏராளம். ஒரு கட்டத்தில் தகப்பன் கையறு நிலையில் இருக்கையில் Gulf இலிருந்து வந்திருக்கும் உறவினர் ஒருவர் தான் ஜோஷ்வாவை அழைத்துச்செல்வதாகவும், வேலை வாங்கித்தருவதாகவும் நம்பிக்கை அளிக்க, ஓநாயின் பின் வெள்ளாடாய் ஜோஷ் கிளம்புகிறான்.

தங்கையின் வாழ்வு அவனது சம்பாத்தியத்தில். பாலியல் வன்முறை, வாழ்வின் பெருஞ்சோகம் எல்லாம் அவனை நடைபிணமாய் மாற்ற, எண்ணெய்க்குழாய் சுத்தம் செய்துகொண்டிருக்கிறான்.

ஊரிலிருந்து செய்தி,ஜென்னி is no more.

திரும்புகிறான். 

நல்லடக்கம் முடித்தபின் ஜென்னியை அடிக்கடி மருத்துவமனை அழைத்துச்செல்லும் பழைய நீல நிற வோல்க்ஸ்வாகன் வேனின் பின் சீட்டில் ஜென்னி அவனுக்காக காத்திருக்கிறாள்!!!

ஜென்னியின் வாழ்வு, ஜென்னி வழியாகவே அவன் கண்முன் விரிகிறது. அவளுடன் அவன் செய்யும் பயணம், அது முடியும் இடம், விதம், பயணத்தில் அவன் மீட்டெடுத்த சொத்துக்கள், அன்பிற்கும் கடமைக்கும் உள்ள வேறுபாடு, 'என்னை எல்லாரும் மறந்திருப்பாங்கள்ல' என்ற ஜென்னிக்கு அவன் தரும் விளக்கம்... கவிதை வழியும் அன்புக்கூடு...

எமோஷனல் மானிபுலேஷன் - துளியும் இல்லை.

எமோஷனல் exaggeration - அறவே கிடையாது.

ப்ருத்விராஜ் - நம் சினிமாவில் அடுத்த பல ஆண்டுகளில் பல மாற்றங்கள் செய்வார் என நான் மிக நம்பும் அற்புதமான நடிகர் (இன்னொருவர், விஜய் சேதுபதி. பாலிவுட் தன் தரத்தை பளபளவென இன்டர்நேஷனல் லெவலுக்கு மெனக்கெட்டு மெருகேற்றினால் இங்கு இந்த இரு நடிப்பு அரக்கர்களும் நடிப்பின்மூலம் மட்டுமே உலகத்தரத்திற்கு உயர்த்துகின்றனர்!)

உடல்மொழி, பார்வை, மென்சோகம், விசும்பல் என மனிதர் ஜோஷ்வாவாகவே வாழ்ந்திருக்கிறார். தங்கையை வாஞ்சையோடு அணைப்பதற்கும் காதலியை வெட்கம் மற்றும் மனத்தழும்போடு அணைப்பதற்கும் மனிதர் காட்டும் வித்தியாசம், வீட்டின் மேலறையில் தகப்பன் செட் செய்திருக்கும் பொம்மை ரயில் நிலப்பரப்பை காண்கையில், பதின்பருவ பிரிதலில் இருந்து அந்த நொடி வரை இருந்த இறுக்கம் பாகாய் கரைய அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளின் கலவை, வார்த்தைகள் ஏதுமின்றி... வாவ்! 

இறுதியில் ஜென்னியைக்காணாது தவிக்கும் தவிப்பு, உடைந்து அழுகையில் நம் கண்களும் தளும்பும்!

பார்வதி மேனனின் சோஃ.பி, மென்சோக கவிதை, கொள்ளை அழகு. மிக நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். கண்களாலேயே பலவற்றை நமக்குள் கடத்துகிறார். ஜோடிப்பொருத்தம் ஓஹோ!

கோச் - 'அதுல் குல்கர்னி பெரிய நடிகராச்சே... அவருக்கு எதுக்கு இந்த ரோல்?' என்ற கேள்வியை மனிதர் படத்தில் ரீ என்ட்ரி ஆகும் நொடியிலிருந்து அடித்து தகர்த்துவிட்டார். அவரது நைந்துபோன கோச் விசில்கூட நம் தொண்டையில் உணர்வுப்பந்தொன்றை உருட்டும்...

நஸ்ரியா என்கிற ஜென்னி - லவ்லி பேய்! நான் வேறொன்றும் சொல்லப்போவதில்லை :-)

இசை -மயிலிறகு!

மீட்பர், மீட்கப்படுவோர் என அனைவரும் கொண்டாடி ரசிக்கவேண்டிய படம். 

ஆண் டைரக்டர்கள் இதுபோன்ற சென்சிடிவ்  அணுகுமுறையுடன் படங்கள் செய்வது கடினம். அஞ்சலி மேனன், இன்னும் நிறைய படங்கள், இது போன்ற நல்ல படங்கள், எதிர்பார்க்கிறேன். வலது மூளை இடது மூளை தியரி சரியே என மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்.


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்