முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

துருவ யுத்தம்!

  நான்கு தட்பவெப்ப நிலைகள் மட்டுமே கொண்ட ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இல்லாத இன்னும் இரண்டு நிலைகள் / காலங்கள் நம்மிடையே இருந்தது.  அந்த இரண்டும்தான் நம் வாழ்வியலை, இயங்கியலை (dynamics) அவர்களது போர்க்கறை படிந்த வணிகப்பேரரசுகளிடம் இருந்து வேற்றுமைப்படுத்தியது, மேம்படுத்தியது. இள வேனில், முது வேனில் என வசந்த காலத்தின் இரு பிரிவுகள் (அவர்களுக்கு வசந்த காலம் என்ற ஒன்று மட்டுமே),  முன் பனி, பின் பனி என குளிர் காலத்தின்இரு பிரிவுகள் (அவர்களுக்கு குளிர் காலம் என்ற ஒன்று மட்டுமே)  என தலா ஒவ்வொன்று நமக்கு கூடுதலாய், அதுதான் அந்த இரண்டு வேற்றுமைக்காரணிகளா? இல்லை! நம்முடனிருந்த நாட்டு மாடுகளும் கூட்டுக்குடும்பமும்தான் அந்த இரண்டு காலங்கள், காலமாகிப்போன காலங்கள். நாட்டு மாடுகள் நம்மோடு இருந்தவரையில் தற்சார்பு இருந்தது. நெல்லுக்கும் பயிருக்கும் வழிந்தோடி உயிர் நனைத்த நீர் கசிந்தோடி விளிம்பு நிலம் நனைத்து புல் வளர்த்து புல்லை உரமாய் பாலாய் தயிராய் வெண்ணெயாய் நெய்யாய் மாற்றி... உழைப்பைத்தரும் காளைகளாகவும் மாற்றிய அந்த பேராற்றல் உயிரினங்களை பால் வணிகமும் இயந்திர வணிகமும் கெமிகல் வணிகமும் வலைகள் விரித்

உயிர்ச்சூடு

  பூமி தொடா பிள்ளைப்பாதம் பூமி தொடாமல் வளர முடியாது. பூமி தொட்டு விரல் விரித்து பாதம் பதித்து பாதம் புதைத்து பாதம் நனைத்து பாதம் கொதித்து பாதம் குளிர்ந்து என உணர்வின் வழி உடலில் ஏறும் பூமியின் ஆதி அன்பு. பிள்ளை தவழ்ந்து கைகளூடாகவும் புவியன்பு சேர்த்து பின்பு நின்று நடந்து ஓடி தாவி பறந்து... பூமியில் மட்டுமே இயல்பாய் எளிதாய் எவர் உதவியுமின்றி கால் பதிக்க முடியும், வேறெந்த கோள்களிலும் இன்றுவரை வாய்ப்பில்லை. கனவுகளை விற்கும் தொழில்நுட்ப மேகங்களில் முகம் புதைத்து நனவு மறந்து  இறகு முளைத்ததாய் கற்பிதம் செய்து ஓரிடத்தில் நில்லாது ஆனால் பூமி தொடாது காலணிகளால் பாதங்களை காத்து கையுறை அணிந்து உணவருந்தி முக கவசமனிந்து சுவாசித்து முகமூடி அணிந்து வாழ்ந்து என இயல்பை தொலைத்து பூமியுடனான அத்தனை தொடுபுள்ளிகளையும் நிராகரித்து மதி மயங்கி... விழுந்து கண்விழித்து பார்த்தால்...   சுற்றிலும் முக கவசமணிந்த கையுறைகள் தரித்த முகங்களும் ஆடைகளற்ற இயந்திரங்களும் மட்டுமே சூழ்ந்திருக்கும். கவசங்களற்ற முகங்கள், அதன் நீட்சியாய் கையுறையற்ற விரல்கள், அதனுள்ளே பொதிந்திருக்கும் வெதுவெதுப்பான உயிர்ச்சூடு, அது ஆற்றும் வாழ்வ

அன்றொரு நாள் இங்கு ஒரு காடு இருந்ததே!

கானகத்திற்கு கதவுகளில்லை கானகத்திற்கு எல்லைகளில்லை ஆழிசூழ் மட்டுமல்ல காடுசூழ் உலகும்தான். ஆழியின் விளிம்பு வரை தளும்பும் நிலப்பரப்பில் பயிரேதுமின்றி மரமேதுமின்றி நாம் மட்டுமே வாழ்தல் சாத்தியமேயில்லை. இயற்கையின் கூட்டில் காடும் ஒரு உயிரினம்தான், நம்மைப்போல. என்ன ஒரு வேற்றுமையென்றால் காடுகள் நம்மை அரவணைப்பநு போல யாம் காடுகளை அரவணைப்பதில்லை. அப்படியே தப்பித்தவறி அரவணைத்தாலும் இது சிவப்பிந்தியர்களை போர்த்திய நச்சுக்கிருமிகள்_தோய்ந்த வெள்ளை அமெரிக்கர்களின் தானக்கம்பளி போல, பாரதப்போர் முடிந்து பீமனை ஆலிங்கனம் செய்த திருதராஷ்டிரனின் அரவணைப்பு போல 'கொல்லும்' அணைப்பாகத்தான் இருக்கிறது இதுவரையில். இந்த நிலை மாறவேண்டுமென இப்போது ஜப்பானில் நகர்ப்பூங்காக்களில் மரங்களிடையில் உணர்வுபூர்வமாய் நடக்கவும் மரங்களை நோகாமல் அரவணைக்கவும் அவற்றோடு உரையாடவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள், தம் மக்களின் நோய் தீர்க்க! கனவில்கூட காடுகளை தழுவிக்கொண்டே உறங்குபவருக்கு மட்டுமே உயிரிருக்கும் வரை தாயின் அரவணைப்பு தொடருமாம் நினைவுகளின் வழியே. இதை விட அருமருந்து நம் உலகிலில்லை. கவனம் கொள்வோமா மனிதர்களே?:

Freeயா வுடு freeயா வுடு மாமே

  Freeயா வுடு freeயா வுடு மாமே வாழ்க்கைக்கு இல்ல க்யாரண்டீ... அவர் கல்லூரி பேராசிரியர். மனைவியும் ஏதோ ஒரு அலுவலகத்தில் பணி. ஐந்து வருடங்களுக்கு முன்பு கோவை சாய்பாபா காலனி எனப்படும் upmarket பகுதியில் ஒரு வெள்ளி இரவு உணவு முடித்து, சாலை ஆரவாரங்கள் சற்றே அடங்கிய நேரத்தில் walking கிளம்புகிறார்கள். அந்த பகுதியின் மெயின் ரோட்டில் இரவு ஒன்பது மணிக்கு சாலையோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்த தம்பதி மீது கட்டுப்பாடிழந்த இரு சக்கர வாகனம் மோதி மனைவி சம்பவ இடத்திலேயே பலி என அடுத்த நாளில் அவர்களது வாழ்வு ஊடக செய்தியாக மாறப்போவது அப்போது அவர்களுக்கு தெரியாது. சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு என் நணபனின் அப்பா இதே போன்ற ஊரடங்கிய ஒரு இரவில் நடைப்பயிற்சி சென்றவர் அங்கிருந்து நேராக ஐ.சி.யு போய் பின்பு யாரையும் பார்க்காமலே போய்விட்டார். அங்கும் ஒரு இரு சக்கர வாகனத்தில்தான் எமன் வந்தானாம். நேற்று இரவு எங்கள் பூர்வீக கிராமத்தில் கோவில் திருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் இனிதே நடத்தி முடித்த களைப்பில் பத்து மணிக்கெல்லாம் ஊர் உறங்கிப்போயாச்சு. அந்த ஊரின் ஒரு மனிதரை தவிர. திருத்துறைப்பூண்டி, எங்கள் கிராமத

உன் கவிதை தேவையில்லை பாரதி!

கொதிக்கும் வெயிலில் தார்ச்சாலையின் நடுவில் ஜட்டி பனியன் மட்டுமே அணிந்து மல்லாந்து கிடந்தது நம் மானம். சாலையின் ஒருபுறம் பாட்டி, மறுபுறம் அம்மா, நடுவில் தன்னைத்தானே தார்ச்சிலுவையில் ற மதுவால் அறைந்துகொண்ட 20+ வயது இளைஞன். ஒரு கால் நீட்டி ஒரு கால் மடக்கி கைகள் இருபுறமும் நதிக்கிளைகள் போல நீள மல்லாந்து வானம் பார்த்து கண்கள் மூடி கிடந்தான். வீதிக்கு வீதி சாராயம் தள்ளாடுது தமிழகம் என்ற பாடல் கேட்டு கோவனை கைது செய்து சிறையில் அடைத்தது அன்றைய அரசு. கோவனுக்கு அன்று துணை நின்ற எதிர்க்கட்சி இன்று ஆட்சியில். கைது செய்யப்படவேண்டிய மதுபானமென்னவோ தடையின்றி "குடி" மகன்களை சென்றடைய புதிது புதிதாய் மதுக்கடைகள், எதிர்ப்பு போராட்டங்கள்... கோவை சத்தியமங்கலம் சாலையில், கோவையில் இருந்து 25 கி.மீ தொலைவில் கரியாம்பாளையம் பிரிவு, அன்னூருக்கு சற்று முன்பாக. அந்த பிரிவில் இடதுபுறத்தில் இறங்கி விரையும் காரமடை சாலையில் ஆட்களற்ற தனிமையில் இரண்டு சிற்றூர்களுக்கு இடையில் 35° வெயிலில் நேற்று மதியம் குடிபோதையில் நினைவிழந்து விழுந்து கிடந்த வாட்டசாட்டமான மகனை இருவரும் சேர்ந்து இழுத்தும் கரை சேர்க்க முடியாமல் ஊ

1.5°

தாகங்கொண்ட மேகமொன்று நீரருந்த இடம் தேடி காற்றில் விரைய, படபடப்பாய் கீழாடுது ஆயிரம் உயிர். 'மேகத்துக்கே தாகமென்றால் நம் வேரெல்லாம் நனைவதெப்போ?' என தகிப்பாய் மரங்களின் சூடு மூச்சு. பல்லாயிரம் இலையற்ற கிளை வழியே ஆயிரம் மூச்சு. உயிர்த்தவிப்பு தணிக்கும் பேராவலில் மூச்சுக்காற்றின் உந்துதலில் விரைந்த மேகத்தை சோகமாய் தடுத்து நிறுத்தியது நெடிய மலை ஒன்று. மலையெங்கும் மனிதர்கள் கட்டிடங்கள் வாகனங்கள் கரும்புகை இரைச்சல்... இடையிடையே தப்பி நிற்கும் பெருமரங்களும் வெயிலில் நோக, 'எமைக்காக்க விரைந்து நீரோடு வா  பெரும் படையாக வா' என மலை இறைஞ்ச, மரமனைத்தும் கடல் திசையில் தலையாட்டி மேகத்துக்கு வழிகாட்ட, மனச்சுமைகூடி தள்ளாடி மேகமழுதது வான்மழையாய், வான்சூட்டில் தரைதொடுமுன் ஆவியாகிப்போன மழையாய்...  மேகத்தின் கண்ணீரை கண்டவருண்டோ! சேயழுகை கேட்ட தாய்போல கடல்மடி கலங்கி அலையெழும்பி அலை வீழ்ந்து அலை பரவி... தெறித்த நீர்த்திவலையெல்லாம் அலைதந்த காற்றிலேறி கரை நோக்கி விரைய, அள்ளி வந்த நீரெல்லாம் வானிலேயே ஆவியாவதற்குள் மலைக்கு அப்பாலும் தவிக்கும் மரங்களின் ஆவி ஆகிவிடும் பேரன்பில் விரையுது கடலிலெழுந்த நீ

வா, ரயில் விடப்போலாமா!

  ஒவ்வொரு முறையும் ரயில் பயணம் வீட்டிலிருந்து கிளம்பும்போதே அனுபவமும் தொடங்கிவிடும். இந்தமுறை அருண் என்கிற தேனி வட்டார மனிதர் வாகனம் ஓட்டினார். அப்பா போலீசாக இருந்து ஓய்வு பெற்று தேனியில் அம்மாவோடு. இவர் இங்கே கோவையில். போலீஸ்காரர் மகன் என்பதால் பயந்த சுபாவ குரலோ என தோணுமளவிற்கு அவரது குரல். டிப்ளமோ படிப்பு, சில காலம் படித்த நகரிலேயே பணி. பல காலம் சவுதி வாசம். ஊர் திரும்பி கல்யாணம் முடித்து இப்போது வாடகை டாக்சி நிறுவனமொன்றில் பணி. வீரபாண்டி தேர் திருவிழா பற்றி பேசிக்கொண்டே ரயில் நிலையம் வந்துவிட்டது. ஊரான ஊரில் கூட்டமான கூட்டமாம், திருவிழாவான திருவிழாவாம். ஏழு நாட்கள் அங்காளி பங்காளி அமளி துமளியாம். அவர்களது ஏரியாவில் கல்யாணம் முடிப்பது மட்டும் ஈஸ்வரன் கோவிலில் என்றும் மற்றபடி தெற்கு தமிழகம் எங்கும் அம்மன் ஆட்சிதான் என்றார். அவரது கண்களில் வீரபாண்டியின் தேர் நகர்வது தெரிந்தது. ஊரில் இருக்கும் விவசாய நிலத்தை குத்தகைக்கு விட்டாச்சாம். தேனி, போடி, கம்பம் பகுதிகளில் கேரள சேட்டன்கள் நிறைய வயல்களை குத்தகைக்கு எடுத்து தோட்டங்கள் செய்வதாகவும் அவர்களுக்கெல்லாம் 'ஒன்றை இரண்டாக்கும் வித்தை