முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சுயம்பு -500!

எந்த பின்புலமும் எந்தத்துறையிலும் இல்லாமல், ஒரு மனிதன், ஒரு தமிழன், தன் வாழ்நாளில் தொடக்கூடிய உச்சத்துக்கு இவரை கண்டிப்பாய் எடுத்துக்காட்டாக கூற முடியாது. ஏனெனில் இவர் உச்சத்தை தாண்டியவர். தனிப்பிறவி. பல துறைகளில் இவர் தொட்ட உயரங்களே வரும் தலைமுறைக்கு புதிய உச்சங்கள்! அவர் பயணம் செய்த குதிரை ஒவ்வொன்றும் ராட்சத உழைப்பை தீனியாக கேட்கும், அசந்தால் ஆளை விழுங்கி ஏப்பம் விடும்; ஆனால் இவர் அவை அனைத்தையும் தன் சுண்டி இழுக்கும் திறமையால் அடக்கி ஆண்டவர். திரை (கதை, திரைக்கதை, வசனம், நாயகர்கள்), பத்திரிகை, அரசியல், இலக்கியம் என இவர் தன் வாழ்வை செதுக்கியபோது உதிர்ந்த துகள்களும் புகழ் பெற்றன. கலைஞர் எனும் இயந்திரத்தின் சக்தியில் புகழ் வெளிச்சத்தின் இரு கண்களாய் சிவாஜியும், எம் ஜி ஆரும். தமிழகத்தின் தங்க தருணம், அரை நூற்றாண்டு,1950-2000 இந்த மும்மூர்த்திகளால் நகர்த்தப்பட்டது. இவர் தோளோடு தோளுரசிய புகழ் மனிதர்கள் ஏராளம், உலக அரங்கிலும்தான். இவரோடு மடிந்தது திராவிட ஜோதியின் பெருவிளக்கு. இதனின்று சிதறிய கங்குகள் சில காலம் கனன்று மறையலாம்; அதில் ஒன்று கூட ஒரு நூற்றாண்டு ஜோதி தராது... ஒரு

பொங்குமாங்கடல்

தேவதைகள் காதலிப்பதுண்டு. கையளவு மனசில் கடலளவு நேசம். அலையாடி கரைமோதி ததும்பி விழிவழியே. உப்பின் கரிப்பு சூரியன் சுட்டது, விழியின் கரிப்பு சொற்கள் சுட்டது. தேவதைகளும் அழுவதுண்டு. சுட்டது குளிரும் தழும்புகள் மறையும் நம்பிக்கை வளரும் அலை எழும்பும் அலை வீழும் அலை ஓயா. அலை அறிந்தது கடல் அறியுமா? என்னுள்ளே கடல். உன்னுள்ளே கடல். என் கடலெனது. உன் கடலுனது. அலையுரசும் விளிம்பில் நுரைகளின் தீண்டல். தீண்டி மீண்டு மீண்டதில் எதெனது எதுனது அலையறியா. நுரை மாறி நுரை மாறி அலை மாறி  அலை மாறி கடல் மாறி கடல் மாறி சுட்ட உப்பு எக்கடல் உப்பு? என்னுள்ளே கடல். உன்னுள்ளே கடல். என்னுப்பு எது? உன்னுப்பு எது? எது எதுவோ அது அதுவே. எதுவாயின் என்ன?

சுழலி!

#onemoresong ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள். பின்புலமும் ஓரளவு தெரியும். ஊர்ப்பெரிய மனிதர் மனதில், உருவத்தில்... மிகப்பெரியவர். வாழ்க்கைத்துணை துயராக மாற மனதில் வைத்துப் வெளியில் கண்ணியம் காப்பவர். பஞ்சம் பிழைக்க அந்த ஊரில் ஒதுங்கிய பரிசல்காரி, துடுப்பு போட்டு ஊர் திரும்புகையில் கரையருகில் பாடல் ஒன்று கேட்கிறது. சின்ன வயதுக்காரி. பாறையை நீர் அறுப்பது போன்ற மென்சோகத்துடன் பெரியவர் தன் வாழ்வைப்பற்றி 'எசப்பாட்டு' பாடிக்கொண்டே நடக்க, பாடல் வரிகளின் சோகம், பாடுபவரின் மேன்மை அறிந்த பரிசல்காரி, ஆறுதலாய் பதில் பாட்டு பாடத்தொடங்குகிறாள். பாடுவது யார் என அறியும் ஆவலில் பாடலை நிறுத்தாது தேடிக்கொண்டே பெரியவர் நடக்க, பரிசலில் பதில் பாட்டு ஊர்க்கரை நோக்கி நகர, 'பூங்குயில் யாரது?' என முகமறியும் ஆவலில் பெரியவரும் பாடல் வரியோடு பரிசல் கரை நோக்கி நகர, 'கொஞ்சம் பாருங்க, பெண்குயில் நானுங்க' என பதில் அவர் காதில் விழ, அவர் கண்ணில், பாடும் அவள் பட... இன்னதென்று சொல்ல இயலாத உணர்வுக்குவியலில் 'அடி நீதானா அந்தக்குயில்! தானாக வந்த குயில்! பறந்த்தே, உலகமே

அவரவர் விருப்பம்

உதிர்வதெல்லாம் முளைக்கும், ரோமம் தவிர! ஒரு உணவகம். அழகற்ற ஒரு பெண் பணியாளர் உணவு பறிமாறுகிறாள். உணவருந்த வந்த நபர் இருக்கையில் அமர டம்ளரில் நந்நீர் வைக்கிறாள். 'நன்றி' என்கிறார் அவர். பெண் முகத்தில் குழப்பம். 'என்ன சொன்னீங்க?' 'நன்றி சொன்னேம்மா'. ... அடுத்த இருபது நிமிடங்கள் அவள் இறகு முளைத்த தேவதையாய் மாறி அவரை தனி விருந்தினர்போல பார்த்துப்பார்த்து கவனிக்க வைத்தது அந்த ஒற்றைச்சொல், 'நன்றி'... 'நாம் மரங்களல்ல, உதிர்ப்பது முளைக்க' என்றுதானே எண்ணி 'மௌனமாய்' திரிகிறோம்... பெருந்தவறல்லவா அது! நாம் உதிர்ப்பது அனைத்தும் முளைக்கும், நம் ரோமம்  தவிர. வாழும் நொடியெலாம் ரோமமுதிர்க்கும் நாம், அவை உதிராதபோதும் நாமாக உதிர்க்கும் சொற்களும், நமக்குள்ளே உதிர்க்கும் எண்ணங்களும் முளைக்கும்! தழைக்கும்!! ஏனெனில் நிலம் என்றும் நந்நிலம்தான். விதை எவ்விதமோ, சுரை அவ்விதமே! மரங்களும் நாமும் எங்கு வேறுபடுகிறோம் தெரியுமா? மரங்கள் உதிர்ப்பவை (விதைகள்) மட்டுமே முளைக்கும். ஆனால் தேவையான நேரத்தில்,

அற்புதங்கள்!

Miracles / அற்புதங்கள், நம்மைச்சுற்றி கூடை கூடையாய் கொட்டிக்கிடக்குது காணும் இடமெல்லாம்... ஊசித்தும்பியின் 'ஊசி' உடம்புக்குள் இதயம், வயிறு, மூளை எல்லாம் யார் வைத்தது? இதைவிட பெரிய அற்புதம் யார் செய்வார்?! ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கையில், ஒரு சிறு குருவியையாவது காற்று தள்ளி வீழ்த்துவதை பார்த்திருப்போமா?! காற்றுக்கு மரங்கள் சாயலாம்; பறக்கும் இனம் போல அவற்றிற்கு இறகுகள் இல்லையே... சற்றுமுன் என் கண்ணெதிரே ஒரு மஞ்சள் வண்ணப்பூச்சி... ஆளைத்தள்ளும் காற்றில் 'அலையேறுதல்' (wind surfing) போல சரசரவென காற்றில் ஏறி, எதிர்த்திசையில் பறந்தது கண்டேன். அத்தனை சிறிய உடலுக்குள் இந்த வலு! எளிது போல தோன்றும் அதன் பறத்தலின் பின்னிருந்து இயக்குவது எது? ஆன்ம பலம் சிற்றுயிரையும் பேருயிராக்கும் அற்புதம் நம்மைச்சுற்றி நொடிதோறும்... நமக்குதான் காண / உணர நேரமின்றி 'அற்புத வாழ்வு வேண்டி' வேறெதையெல்லாமோ தேடி ஓடிக்கொண்டேயிழுக்கிறோம்... (நாம் இழுத்துக்கொண்டோடும் மயிலிறகு எடை ஆசைகள் கூட பீலி பெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம்தானே!). நகத்தளவு வண்டு, விரைந்து

இன்னும் நீங்க வாங்கலயா!

  மூக்கு க்ளிப்பு! ஒரு ஊருல பரம்பர பரம்பரயா அம்புட்டு சனங்களும் மூக்குல கிளிப்பு மாட்டிகிட்டு வாழ்ந்துதாம். பொறந்ததலந்து சாயறவரைக்கும். ஊரு நாத்தம் அப்புடி... ஆரம்பத்துல கம்பிய வளச்சு கிளிப்பா பயன்படுத்த, அது மூக்கில குத்தி செப்டிக்காயி கொஞ்சம் மக்க மாண்டாக. ஒடனே ஊர் பெருசுக கூடி 'ஆபத்தில்லாத கிளிப்பு வோணும்'னு தீர்ப்ப எழுதி, பெருசுங்களுக்கு வேண்டப்பட்ட வியாபாரிங்கள தரச்சொன்னாக. மரம், செம்புன்னு என்னென்னமோ ட்ரை பண்ணி ப்ளாஸ்டிக்கு பெஸ்ட்டுன்னு முடிவு பண்ண அது ஆச்சு அம்பது வருசம். நாத்தத்துலயே பொறந்தவங்களுக்கு ஒரு கட்டத்துல நாத்தம்னா என்னான்னே தெரியாம்ப்போயி ஆனாலும்  பளக்க தோசத்துல கிளிப்ப மாட்டிகிட்டு சுத்துனாய்ங்க. இன்னொரு இருவது வருசம் செண்டு தொலவுலேந்து ஒரு பெரியவரு வந்தாரு. அவரு மூக்கில கிளிப்பு இல்ல. இந்த ஊரை சுத்திப்பாக்க வத்தவரு எல்லையில மூக்க பொத்தி நிக்க, வரவேத்த உள்ளூர் பெருசுங்க சால்வ போத்துற சாக்குல அவருக்கும் கிளிப்பு ஒண்ண மாட்டிவுட, அவரு சொஸ்தாயி, 'இன்னாபா இது?' ங்கவும், பெருசுங்கல்லாம் தல புராண மகிமய அள்ளி வுட்டுதுங்க. அ

நழுவும் மொழி - இவர் யாரென்று தெரிகிறதா!

" அந்தியிறங்கி ஒருவருக்கொருவர் முகம் மறையுமளவிற்கு அறையிருண்டு விட்டது. விளக்கைப் போடத் தோன்றவில்லை. பேசிக் கொண்டிருந்தோம். இருள் அடர அடர அது படிப்படியாக எங்கள் பேச்சைத்தான் சுழற்றிக் கொண்டது. எப்போது மௌனமானோம? ஏதோ ஒரு உள் நிறைவின் பொங்கலில் எங்களைப் பூரா வியாபித்துக் கொண்ட இருளின் இதவில் ஒரு சின்ன சம்புடத்தில் உருளும் இரு ஜின்டான் மாத்திரைகள் போல. ஒரே கோசத்தில் இரண்டு உயிர்த்தாதுக்கள் போல. கூடில் இரு குஞ்சுகள் போல் எங்கள் உள்ளங்களின் நெருக்கத்தில் ஒரு தனிக் கதகதப்பில் அது தந்த மகுதான்மத்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தோம். இந்நிலை எங்கள் நட்பின் தன்மையால் அல்ல. இது அந்த சமயத்தின் மஹிமை. சிருட்டியின் ஆயாத நூற்பில் இரண்டு இழைகளாக இழைந்து போய்விட்டோம். அல்லது அது தன் கோலத்தில எங்களை இழைத்துவிட்டது என்று சொல்லட்டுமா? " 1984 ஆம் ஆண்டு. கோடை விடுமுறை. கிராமத்து வீடு. மதியம் வரும் ஒற்றை நாளிதழ், தினமணி. ஞாயிறானால் மகிழ்வாக தயாராவோம்; தினமணியில் 'கதிர்' வரும் நாள். பதின்ம வயதில் அந்த ஞாயிறு இதழின் சில பக்கங்களை, சக வயது உறவுகளுக்கு முன்பு