#onemoresong
ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள். பின்புலமும் ஓரளவு தெரியும்.
ஊர்ப்பெரிய மனிதர் மனதில், உருவத்தில்... மிகப்பெரியவர். வாழ்க்கைத்துணை துயராக மாற மனதில் வைத்துப் வெளியில் கண்ணியம் காப்பவர்.
பஞ்சம் பிழைக்க அந்த ஊரில் ஒதுங்கிய பரிசல்காரி, துடுப்பு போட்டு ஊர் திரும்புகையில் கரையருகில் பாடல் ஒன்று கேட்கிறது. சின்ன வயதுக்காரி.
பாறையை நீர் அறுப்பது போன்ற மென்சோகத்துடன் பெரியவர் தன் வாழ்வைப்பற்றி 'எசப்பாட்டு' பாடிக்கொண்டே நடக்க, பாடல் வரிகளின் சோகம், பாடுபவரின் மேன்மை அறிந்த பரிசல்காரி, ஆறுதலாய் பதில் பாட்டு பாடத்தொடங்குகிறாள்.
பாடுவது யார் என அறியும் ஆவலில் பாடலை நிறுத்தாது தேடிக்கொண்டே பெரியவர் நடக்க, பரிசலில் பதில் பாட்டு ஊர்க்கரை நோக்கி நகர, 'பூங்குயில் யாரது?' என முகமறியும் ஆவலில் பெரியவரும் பாடல் வரியோடு பரிசல் கரை நோக்கி நகர, 'கொஞ்சம் பாருங்க, பெண்குயில் நானுங்க' என பதில் அவர் காதில் விழ, அவர் கண்ணில், பாடும் அவள் பட...
இன்னதென்று சொல்ல இயலாத உணர்வுக்குவியலில் 'அடி நீதானா அந்தக்குயில்! தானாக வந்த குயில்! பறந்த்தே, உலகமே மறந்ததே' என அவர் நெக்குருகி நிற்க, மயிலிறகு இசையால் வைர வரிகள் ராஜ பவனி வர, கண்ணனின் கேமரா வழி பாரதி ராஜா செல்லுலாய்டில் கவிதை செதுக்க, பார்த்தவர் கேட்டவர் எல்லாம் மையலாகி மயங்க...
#onemoresong
பூங்காற்று திரும்புமா?
என் பாட்ட விரும்புமா?
பாராட்ட மடியில் வெச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?
(பூங்காற்று திரும்புமா...)
ராசாவே வருத்தமா?
ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா?
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி
சொக ராக சோகந்தானே
யாரது போறது?
குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா
(பூங்காற்று திரும்புமா...)
உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்
மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே
எசப் பாட்டு படிச்சேன் நானே
பூங்குயில் யாரது?
கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க
அடி நீதானா அந்தக் குயில்?
யார் வீட்டு சொந்தக் குயில்?
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே
நாந்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா?
(குயில் மட்டும் வேறு யாராவதொரு அட்டுக்கிழவியாக இருந்திருந்தால், பெரியவரின் சோகம் மறுநாளில் கூடியிருக்கும் :-)
கருத்துகள்
கருத்துரையிடுக