Miracles / அற்புதங்கள், நம்மைச்சுற்றி கூடை கூடையாய் கொட்டிக்கிடக்குது காணும் இடமெல்லாம்...
ஊசித்தும்பியின் 'ஊசி' உடம்புக்குள் இதயம், வயிறு, மூளை எல்லாம் யார் வைத்தது? இதைவிட பெரிய அற்புதம் யார் செய்வார்?!
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கையில், ஒரு சிறு குருவியையாவது காற்று தள்ளி வீழ்த்துவதை பார்த்திருப்போமா?!
காற்றுக்கு மரங்கள் சாயலாம்; பறக்கும் இனம் போல அவற்றிற்கு இறகுகள் இல்லையே...
சற்றுமுன் என் கண்ணெதிரே ஒரு மஞ்சள் வண்ணப்பூச்சி... ஆளைத்தள்ளும் காற்றில் 'அலையேறுதல்' (wind surfing) போல சரசரவென காற்றில் ஏறி, எதிர்த்திசையில் பறந்தது கண்டேன். அத்தனை சிறிய உடலுக்குள் இந்த வலு!
எளிது போல தோன்றும் அதன் பறத்தலின் பின்னிருந்து இயக்குவது எது?
ஆன்ம பலம் சிற்றுயிரையும் பேருயிராக்கும் அற்புதம் நம்மைச்சுற்றி நொடிதோறும்... நமக்குதான் காண / உணர நேரமின்றி 'அற்புத வாழ்வு வேண்டி' வேறெதையெல்லாமோ தேடி ஓடிக்கொண்டேயிழுக்கிறோம்... (நாம் இழுத்துக்கொண்டோடும் மயிலிறகு எடை ஆசைகள் கூட பீலி பெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம்தானே!).
நகத்தளவு வண்டு, விரைந்து நகர இயலாத சிற்றுயிர், Selfie சூழ் உலகில் கேமராவை கண்டாலே "நான்கு நொடிக்குள்" மறைய ஓடும் முயற்சியில் இல்லாத கவிதையையா மனிதர்கள் நாம் எழுதப்போகிறோம்?!
விந்தைகள் ஆயிரம் உண்டிங்கு. நமக்குத்தான் அதனை உணர்ந்து குழந்தைகளுடன் ஒரு குழந்தையாகி வியந்து நிற்க நேரமில்லை. நாலாறு மாதமாய் குயவனை வேண்டி காெண்டுவந்த தாேண்டியில் உள்ள சூக்குமத்தை உணராது வீணே பாேட்டுடைக்கின்றாேம். உணவைக் காெரிப்பதால் பல் தேயும் எலிக்கு பல் வளர்ந்துகாெண்டே இருக்கும்பாேது அத்தகைய தேவையில்லாததால் நம் பல் ஒரு பருவத்திற்கு பின் வளர்வதில்லையே! உடல், அங்கங்கள்-விரல் மற்றும் நகம் உள்பட-'பருவம்' அடைந்தபின் வளர்வதில்லையே! கால் மற்றும் கை, கண் மற்றும் காது, டெலாேமர் மற்றும் டெலாேமரேஸ்,பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பிகள்
பதிலளிநீக்குஏன் இவ்வாறு அமைந்தன? தலை மற்றும் உடம்பின் உள்ளே உள்ளவற்றை இப்பாேதுள்ளவாறு அமைத்து,அடைத்ததெப்படி? வியந்து, மயங்க இது பாேதுமா?
இப்பதான்... வெளில ஆரம்பிச்சிருக்கேன். எண்ணம் உள்ளேயும் ஓடும் :-)
நீக்குசூப்பர் comment!!அருமையான பதிவு&pictures!!
நீக்கு