தேவதைகள் காதலிப்பதுண்டு.
கையளவு மனசில்
கடலளவு நேசம்.
அலையாடி கரைமோதி
ததும்பி விழிவழியே.
உப்பின் கரிப்பு
சூரியன் சுட்டது,
விழியின் கரிப்பு
சொற்கள் சுட்டது.
தேவதைகளும் அழுவதுண்டு.
தேவதைகளும் அழுவதுண்டு.
சுட்டது குளிரும்
தழும்புகள் மறையும்
நம்பிக்கை வளரும்
அலை எழும்பும்
அலை வீழும்
அலை ஓயா.
அலை அறிந்தது
கடல் அறியுமா?
என்னுள்ளே கடல்.
உன்னுள்ளே கடல்.
என் கடலெனது.
உன் கடலுனது.
அலையுரசும் விளிம்பில்
நுரைகளின் தீண்டல்.
தீண்டி மீண்டு
மீண்டதில் எதெனது
எதுனது அலையறியா.
நுரை மாறி
நுரை மாறி
அலை மாறி
அலை மாறி
கடல் மாறி
கடல் மாறி
சுட்ட உப்பு
எக்கடல் உப்பு?
என்னுள்ளே கடல்.
உன்னுள்ளே கடல்.
என்னுப்பு எது?
உன்னுப்பு எது?
எது எதுவோ
அது அதுவே.
எதுவாயின் என்ன?
கருத்துகள்
கருத்துரையிடுக