முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

முக்தி பவன்

கற்பனை செய்து பாருங்கள். ஒரு அருமையான நகரத்தில், உங்களை அறியாத, உங்களுக்குத்தெரியாத நகரத்தில், நீங்கள் தங்கும் ஹோட்டலுக்கு வாடகை கிடையாது, சாப்பாடு இலவசம், 'இருக்கும்வரை' தங்கலாம், காலி செய்யும் அவசியம் கிடையவே கிடையாது...சொர்க்கம் அல்லவா! காசியில் உயிர்விடும் ஆசையில் (straight ஆ முக்தி, no மறுபிறவி!) வயதானவர்கள் சிலர் பலர் சென்று, டிக்கட் கிடைக்கும்வரை இறைவழிபாட்டிலும் உடல் உபாதைகளிலும் காலத்தை தள்ள, கருணையோடிணைந்த ஈகை உள்ளம் கொண்ட சிலர் இவர்களுக்காக அங்கு இலவச விடுதிகள் நடத்துகிறார்கள். இவற்றுக்கு முக்தி பவன் என்று பெயர். வயதில் மூத்த முதியோருக்குமட்டுமே(!) அனுமதி. முடிந்தபின் கங்கையில் விட்டுவிடுவார்களாம்! காசியிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் நாங்களும் எங்கள் நகரத்தில் ஒரு முக்தி பவன் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை தற்செயலாய் கண்டுபிடித்தோம். இது நகரின் முதல் முக்தி பவனாகக்கூட இருக்கலாம்.,.. ஆனால் காசிக்கும் எங்களுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு்: 'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

எண்ணச்சிதறல் - 4 - அமானுஷ்யம்?!

சில நாட்களுக்கு முன் குளிரான ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஒரு லாங் ட்ரைவ் போகலாம் என திடீர் திட்டம் தீட்டி கிளம்பினோம்.  ஏகாந்தமான பசுமைப்பாதையில் நெடுந்தூரம் சென்றோம். ஒரு சிறிய ஊரைத்தாண்டும்போது அருகில் ஒரு தொன்மையான நதி ஓடிக்கொண்டிருப்பது அந்த நிமிடம் நினைவில் வர, வண்டியை நிறுத்தி விசாரித்தால், 'சற்றுத்தொலைவில்தான், ஆனால் வண்டிப்பாதை இல்லை, நடந்துதான் போகணும்' என அறிந்தோம்.  இறங்கி நடந்தோம்.  சில நிமிடங்களிலேயே நகர சூழல் தொலைந்து ஆளரவமற்ற பகுதியாக மாறிய தடத்தில் நடந்து, பழைய கால படித்துறை ஒன்றை அடைந்தோம். சமீமப்பெருமழையில் சிவப்பாய் கரைபுரண்டோடிய ஆற்றில் நீரின் ஓசை தவிர வேறு சத்தமில்லை. மனிதர் சுவடே இல்லை. தலைக்கு மேலே ஒற்றை மின் கம்பி, அருகில் ஆற்றில் நீர் உறிஞ்சும் பாசனக்குழாய் தவிர எங்கும் நிறைந்திருந்தது அமைதியும் பசுமையும் மட்டுமே. நகர இரைச்சல் பழகிய நமக்கு காடுகள் பிடித்தாலும் இந்த இடத்தின் அமைதி அடர்த்தி மிக்கதாக, அச்சமூட்டுவதாக இருந்தது. அந்த இடத்தின் அழகை பதிய எண்ணி அவசரமாய் சில படங்கள் எடுத்து விரைந்து திரும்பினோம்.  அடுத்த நாட்களில் அந்த பயணம் ம

நாலாம் தமிழ் - 4 - மாட்டிகினான் பாரதி!

பத்து பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி ஒரு தமிழ்ப்படத்தில் ஒரு satire காமெடிசீன்: ஒரு வான்னாபி (wannabe) அரசியல்வாதி தன் குடும்ப அருமை பெருமைகளை குப்பத்து ஆடியன்ஸுக்கு சொல்ல ஒரு இலங்கைத்தமிழப்புலவரை அழைத்துவருகிறார். . புலவர் பேச ஆரம்பிக்கிறார்: 'அனைவரும் கரகோஷங்களை எழுப்புங்கள்'. ஆடியன்ஸ் அம்புட்டுப்பேரும் அடிச்சிப்பிடிச்சி எந்திறிக்கிறாங்க. கூட்டம் கலையப்போகுதேனு சில அல்லக்கைகள் அவர்களை 'ஏய் குந்துபா, குந்துபா' எனத்தடுக்க குடிமகன் 1: 'அவர்தான் கட்வுள் வாள்த்து பாடச்சொல்லிகிறாரே அதான் எந்திரிச்சம்' குடிமகள் இரண்டு : 'எதுமே பிரிலைபா தமிள்ள பேசச்சொல்லுபா'! குழம்பிப்போன புலவர்: 'என்ன கதைக்கிறார்கள்?' குடிமகன்கள் கும்பலாக:'அடிங்க! ஏய் யாரப்பாத்து கலாய்க்றான்ற????' இன்னொரு குடிமகன்:'சார், நீ இன்னா சொல்றனு ஜனங்ளுக்கு பிரில சார். நீ பேசு சார், நா வோணா ட்ரான்ஸ்பர் பண்றன்' புலவர்:'சென்னைவாழ் மக்களுக்கு அன்பான வணங்கங்கள்' ட்ரான்ஸ்லேட்டர் வாலண்டியர்: 'மெட்ராஸ்ல வாள்ற மக்களுக்கு வணக்கங்றன்'

எனக்கொரு போதிமரம் வேணுமடா!

ஞானம் தரும் போதிமரம் இன்றளவும் இருப்பது ஓரிடத்தில் (புத்த கயா) மட்டுமே! ஏன் என்று என்றேனும் எண்ணியதுண்டா? (ஞானம் தேடி) புத்தன் ஓடாத  ஓட்டமா நாம் ஓடப்போகிறோம்?  ஓடி அலுத்தவனுக்கு அமர்ந்த இடத்திலேயே அள்ளித்தந்த ஞான வித்து, ஞான விருட்சம் அங்கு மட்டுமே அமர்ந்திருக்கவேண்டும் என்பது யார் இட்ட கட்டளை? நம்மைச்சுற்றி போதிமரங்கள் தேடிப்பார்த்து,  'மரமே இல்லையே!' என உணர்பவர் ஒவ்வொருவரும் ஞானவான்தானே! நமக்கான போதிமரத்தை நாமே நடுவோம் நம்மருகே.  வளர வளர ஞானம் வளரும்.

ஐந்து, நான்காகும்!

அல்லது 'விதை சுமக்கும் பெருவிதை'! ஈரிலையில் கூடு செய்து, கூட்டுக்குள் முட்டையிட்டு பாதுகாத்து பொறித்து குஞ்சுகளுக்கு இறக்கை முளைக்கும் வரை உணவிட்டு...இத்தனையும் நடந்தது ஒரு ஒற்றை தேக்குமரக்கன்றிலே! பெரிதினும் பெரிது (பூமி) கிடைத்தும் போதாமல் தவிக்கும் நம் கண் முன்னே இடையறாது இயற்கை நடத்தும் இந்த அற்புதப்பாடம் கண்டதுண்டா கண நேரமேனும்? பேரண்ட வீட்டில், நட்சத்திரங்கள் கொண்டு தைத்த வான் கூரையின்கீழ், காற்று விசிறும் மரங்களிடையில், தொட்ட இடமெல்லாம் உயிர் முளைக்கவைக்கும் வெயில் மழை மந்திரக்கூட்டணியில், நம் வாழ்வு மட்டும் ஏனிப்படி கடினமாச்சி?  கதவென்ன ஜன்னலென்ன வீடென்ன காடென்ன வரையறைகள்? எதிலிருந்து எதைக்காக்க இந்த புதிய ஏற்பாடு. உலகின் முதல் பாலைவனம் நம் காலடித்தடமே தெரியுமா? பேராசை, பெரும்பயம் என்ற காலணிகளுடன் நாம் நடந்த தடத்தில் புற்கள்கூட முளைப்பதில்லை என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவர்? உணர்வர்? (மனிதனின் கால் தடம் படாத கானகத்தில் எண்ணற்ற மிருகங்கள் இருந்தும் ஒரு சுவடு மண்கூட மலடில்லை நட்பே!). குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என நால்வகை நி

முடிவற்ற ஒரே கதை சொல்லட்டுமா?

விழுவது ஒன்று மழையாக இருக்கலாம், விதையாய் இருக்கலாம், இலையாய், கிளையாய், செடியாய், மரமாய் இருக்கலாம்.  இவை தவிர வேறொன்றும் விழுந்ததில்லை பூமியில், தாவரங்கள் மட்டுமே இருந்த வரையில்.  நீரில் உருவான ஒற்றை உயிர் கை கால் முளைத்து கரையேறியதும் இவை அதற்கும் உணவு ஈதிருக்கலாம். உணவுண்டு கொழுத்த அவ்வுயிர் பல்கிப்பெருகும்போதும் ஈதல் தொடர்ந்திருக்கலாம். ஈதலின் "மூலம் ஏதென" அறியும் ஆவலில் வால் வளர்த்த ஒன்று மரமேறியிருக்கலாம். மரம் காட்டிய தூரமே எல்லையென வாழ்ந்திருக்கலாம். தூரத்து மரங்கள்மேல் மையலாகி தாவி பயணம் தொடங்கியிருக்கலாம். இவை கண்ட காட்சி, வாழ்ந்த வாழ்வு ஏதோ ஒரு புள்ளியில் சலிக்கவும் வானேற முயன்று தாவி தரையில் வீழ்ந்திருக்கலாம். முகத்தில் மண் துடைத்து நிமிர்கையில் இடையறாத தாவர ஈகை தொட்ட பூமியின் பரப்பெல்லாம் நிறம் மாறி வளம் ஓங்கி கோடானு கோடி உயிர் நிரப்பியதை கண்டு களித்து கூத்தாடி, 'நம் பிறவிப்பயனை கண்டாச்சு' என மகிழ்ந்து மகிழ்வின் உச்சத்தில் வால் உதறி மனிதராகியிருக்கலாம். மனம் சிந்தனை வாக்கு என பிரித்தறியும் திறமை ஏதோ ஒரு புள்ளியில் கிட்ட,  &

எண்ணச்சிதறல் - 3

ஆளற்ற கானகத்தில் விழும் மரத்திற்கு ஓசை உண்டா? சாலை கடக்கையில் வாகனத்தின் குறுக்கே சடுதியில் கடக்கும் ஓணானையோ, நாயையோ, ஆடையோ, அணிலையோ காப்பாற்ற நொடியில் ப்ரேக் அடித்து, 'அப்பாடா, தப்பிச்சிட்டு' என மகிழ்ந்து KFC யில் கோழிக்கால் கடிக்க அமரும் நமது மனது எத்தகையது? நான் வெஜ் கடைகளில் நீங்கள் உண்ணும் உணவை உயிரோடு உங்கள் கையில் தந்து வெட்டுங்கள் என்றால் நம்மில் எத்தனை பேர் செய்வோம்? காற்றில் விழும் மரம் உண்டாக்கும் அதிர்வு நம் காதுகளை அடையும்போதுதான் நம்மைப்பொறுத்தவரை ஓசை உண்டாகும் நொடி. உயிர் உணவை வெட்டும்பொழுது எழும் ஓலம் கேட்காத காதுகளைப்பொறுத்தவரையில் அவை ஓசையற்ற ஒலிதானே... வெஜ், நான் வெஜ் என்ற பஞ்சாயத்துக்காக அல்ல இந்தப்பதிவு. நாம் fridge இல் வைத்திருக்கும் காய்கறிகளுக்குள்ளும் பழங்களுக்குள்ளும் உறங்கிக்கொண்டிருக்கும் விதைகளும் ஓசை எழுப்பிய வண்ணமே இருக்கும்தானே. கொன்றால் பாபம், தின்றால் போச்சி, போங்க பாஸ்!