சில நாட்களுக்கு முன் குளிரான ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஒரு லாங் ட்ரைவ் போகலாம் என திடீர் திட்டம் தீட்டி கிளம்பினோம்.
ஏகாந்தமான பசுமைப்பாதையில் நெடுந்தூரம் சென்றோம். ஒரு சிறிய ஊரைத்தாண்டும்போது அருகில் ஒரு தொன்மையான நதி ஓடிக்கொண்டிருப்பது அந்த நிமிடம் நினைவில் வர, வண்டியை நிறுத்தி விசாரித்தால், 'சற்றுத்தொலைவில்தான், ஆனால் வண்டிப்பாதை இல்லை, நடந்துதான் போகணும்' என அறிந்தோம்.
இறங்கி நடந்தோம். சில நிமிடங்களிலேயே நகர சூழல் தொலைந்து ஆளரவமற்ற பகுதியாக மாறிய தடத்தில் நடந்து, பழைய கால படித்துறை ஒன்றை அடைந்தோம். சமீமப்பெருமழையில் சிவப்பாய் கரைபுரண்டோடிய ஆற்றில் நீரின் ஓசை தவிர வேறு சத்தமில்லை. மனிதர் சுவடே இல்லை. தலைக்கு மேலே ஒற்றை மின் கம்பி, அருகில் ஆற்றில் நீர் உறிஞ்சும் பாசனக்குழாய் தவிர எங்கும் நிறைந்திருந்தது அமைதியும் பசுமையும் மட்டுமே.
நகர இரைச்சல் பழகிய நமக்கு காடுகள் பிடித்தாலும் இந்த இடத்தின் அமைதி அடர்த்தி மிக்கதாக, அச்சமூட்டுவதாக இருந்தது. அந்த இடத்தின் அழகை பதிய எண்ணி அவசரமாய் சில படங்கள் எடுத்து விரைந்து திரும்பினோம்.
அடுத்த நாட்களில் அந்த பயணம் மறந்து போனாலும், நாட்கள் கழிந்து அதில் ஒரு புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றுவதற்காக திரும்ப பார்த்தபோது அதிர்ந்தேன். ஆளற்ற அந்த நதிக்கரையில் என் புகைப்படத்தில் பசுமையின் அடர்த்தியில் யாரோ மற்றும் எதுவோ 'இருப்பதை' உணர்ந்த அதிர்வு/சிலிர்ப்பு இன்னும் குறையவில்லை!
நான் கண்டதை நீங்களும் காணுகிறீர்களா? Comment section இல் பதிவிடுங்களேன்!
நடுவில் ஒருவர் நீர் அருகே இருவர் மறைந்துள்ளனர்.
பதிலளிநீக்குபடம் எடுக்கும்போது அங்கு யாருமே இல்லை!
பதிலளிநீக்கு