முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

நம் ஆன்மாவின் நிறம் கருப்பு

சில ஆயிரம் முதலைகளை அழிக்க, ஒரு பெருங்கடல் முழுவதும் குண்டு வீசலாம். அல்லது முதலைகளை வேறு சொற்பமான வழிகளிலும் பிடிக்கலாம். ப்ரச்னை என்னன்னா, முதலைங்களெல்லாம் பினாமி முதலைகளை காவு கொடுத்துவிட்டு மீண்டும் தம் பணியில் கண்ணும் கருத்துமாய்.  விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து பாருங்கள். நம் அன்றாட வாழ்வில் ஊழலின் தாக்கம் குறையவே இல்லை. இன்றும் நாம் அரசு எந்திரத்தின் கடைசி ஆணிக்கு கூட கரன்சி காட்டாமல் எந்த ஆணியையும் நாம் பிடுங்க முடியாது...வேலையும் நடக்காது.  'சர்வீஸ் சார்ஜ் எவ்ளோ?' ன்னு எந்த அலுவலகத்தில் கேட்டாலும் 'உங்களுக்கு பிரியப்பட்டத குடுங்க' என்பதாகவே பதில்! அவங்க சரியாதான் சொன்னாங்க. நம்மடமிருந்து 'பிரிய'ப்படவேண்டியதாய் அவர்கள் நினைக்கும் தொகையை கேட்கிறார்கள்.  பண மதிப்பு இழப்பில் அவங்கள்லாம் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்களா, அதனால, கூடுதல் வேகத்துடன் 'உழைக்கிறார்கள்'. சொந்த ஊருக்கு ட்ரான்ஸ்பரா, கொடு 5 லட்சம் என்று கொடுத்தால், விட்டதை பிடிக்க வசூலிக்கையில் அங்காளி என்ன பங்காளி என்ன?! வசூலித்தது, பணமாய், தங்கமாய், வைர

கடவுள் இருக்குறாரு கொமாரு!

"இல்லைன்னு சொல்லல, இருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்' என ஒருத்தர். இவரை நம்பும் ஒரு கூட்டம். 'ஆண்டவன் சொல்றான். அருணாசலம் செய்றான்' என இன்னொருவர். இவரை நம்பும் இன்னொரு கூட்டம். 'கடவுள் இல்லை. கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி' என ஒரு கூட்டம். 'ராமர் கோயில் கட்டியே தீருவோம்' என ஒரு கூட்டம். 'பாபர் சமாதி எங்களுக்கே' என ஒரு கூட்டம். 'குழம்பிய மக்களே! கர்த்தரிடம் வாருங்கள்!' என ஒரு கூட்டம். 'அஹம் ப்ரம்மாஸ்மி. எனக்குள் கடவுள், உனக்குள் கடவுள். ஆனால் என் கடவுள் உன் கடவுளல்ல!' என ஒரு கூட்டம். இது போக கல்கி முதல் நித்தி வரை சித்தி வேண்டி கூட்டமோ கூட்டம்! "இவங்க கைல சிக்கினோம்னா செத்தோம்டா!" ன்னு கடவுளர் அனைவரும் பதுங்கியிருக்கும் இடம், எனக்கு தெரியும் :-) நீங்களும் அறிய விரும்பினால் மேலே படிங்க :-) Before Sunrise என்று ஒரு திரைப்படம். 1990களில் வெளியாகி உலகின் நூற்றாண்டின் டாப் 100 படங்களில் முதலிடம் பிடித்த படம். செலின் என்ற ஃப்ரெஞ்ச்சு பொண்ணுக்கும் ஜெஸ்ஸி என்ற அமெரிக்க

கன்ட்ரோல் யுவர்செல்ஃப் பூச்சி!

கன்ட்ரோல் யுவர்செல்ஃப், பூச்சி! (இதய பலஹீனமானவர்களர படிக்கவேண்டாம்!) கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது பழமொழி. பல்லி இல்லா வீட்டில் குடியிருக்கவேண்டாம் என்பது முதுமொழி :-) பல வருடங்கள் முன்பு, வீடு வாங்கவோ வாடகைக்கோ தேடும் சூட்சுமமான பெரிசுகள், ஒரு வீட்டுள் நுழைந்தவுடன் கவனிப்பது பல்லிகள் இருக்கிறதா என்பதைத்தான். வீடு எவ்வளவு பிடித்திருந்தாலும், எவ்வளவு சல்லிசாக கிடைத்தாலும் பல்லி இல்லையென்றால் டீல் இல்லை. இன்னும் எஞ்சியிருக்கும் இம்மாதிரி சூட்சுமக்காரர்களின் பல்லி பிரியம் குறித்து கேட்டால், 'பல்லி கூட இருக்காத வீட்டில மனுசன் இருப்பானா?' என பதில் கேள்வி வரும். பெஸ்ட் கன்ட்ரோல்!!!!! 'ஹலோ, பெஸ்ட் கன்ட்ரோல்?. எங்க வீட்ல பல்லி, எர்ம்பு, ஈ, பூச்சி எல்லாம், எல்லாம் வர்து. யூ காட் எனி சொல்யூஷன்?' என கௌதம் கார்த்திக் வாய்சில் கால் பண்ணினால், மறுமுனையின் பதில், 'ஆமாங்க, ஆமாம். ஒரு முறை சேனிடேஷன் பண்ணா சில வருஷத்துக்கு பல்லி, பூச்சி எல்லாம் மூச்சி கூட காட்டாது. ஜஸ்ட் டூ ஹவர்ஸ். தௌசண்ட் ரூபீஸ் ஃபார் கிட்சன். அதர் ப்ளேசஸ் எக்

சேதாரத்துக்கு செய்கூலி!

அன்றொரு நாள் என் வீட்டு மாடியில் படர்ந்திருந்த சுரைக்கொடி தாங்கிய கயிறொன்றை, உணவுதேடிப்பறக்கையில் தவறுதலாய் மோதி அறுத்துவிட்டதாய் என் மாடிச்சுவரில் அமர்ந்து வருத்தம் தெரிவித்தது தோகை மயிலொன்று. அது நகர்ந்து பறந்து மறைந்தபின் அவ்விடத்தில் கிடந்தது ஒற்றை மயிலிறகு, சேதாரத்திற்கு செய்கூலியாய்! குட்டிபோடும் என நான் புத்தகத்துக்குள் புதைத்து வைத்திருந்த அந்த மயிலிறகு, குட்டிபோட்டு, பெருத்து, அறையெங்கும் மயில் தோகை! அம்மயில்தோகையின் உச்சியில்... தோகை வேண்டி காத்திருக்கும் அதே மயில்! அது சேதாரம் செய்த கதையை நான் உங்களோடு பகிர்ந்துகொள்வது பிடிக்காது இப்போது இந்த விந்தை நொடியில் அது என் எழுத்துக்களை ஒவ்வொன்றாய் கொத்தித்தின்றுகொண்டிருக்கிறது, இறகுகளின் ஊடாக. வெளியே காற்றில் துழாவுது மீண்டும் அறுபட்ட கயிறிலிருந்து விழுந்துகொண்டிருக்கும் சுரைக்கொடி.. முழுதாய் உண்டு முடிப்பதற்குள் படித்துவிடுங்கள். அதற்குள் நான் இன்னும் ஒருமுறை படர்கயிறு ஒன்றை சுரை வளர்க்க கட்டிவிட்டு வருகிறேன் :-)

ஒன்பது கோடி பனையிருந்ததே...

பண்டங்கொரு நாடிருந்ததே ஒன்பது கோடி பனையிருந்ததே வயிறு நிறைக்க நொங்கிருந்ததே பனையேறும் தொழிலிருந்ததே புயலும் காற்றும் ஒதுங்கியிருந்ததே ஒரு புயலில் காற்றுமடித்தால் ஊரில் சேதம் 'காத்து' நின்றதே... தன் இனத்தை தானே வளர்த்ததே மண்ணுயிரை சேர்த்தே வளர்த்ததே பயிர் காத்து அரணாய் நின்றதே உயிர்காத்து உயர்ந்து நின்றதே பண்டங்கொரு நாடிருந்ததே ஒன்பது கோடி பனையிருந்ததே வயிறு நிறைக்க நொங்கிருந்ததே பனையேறும் தொழிலிருந்ததே புயலும் காற்றும் ஒதுங்கியிருந்ததே ஒரு புயலில் காற்றுமடித்தால் ஊரில் சேதம் 'காத்து' நின்றதே... ... நான்கு கோடி பனை மரங்கள் 'மா'நிலமெங்கும் வெட்டிக்குவித்தோம். புயற்காற்றுக்கு நூறுவழிச்சாலைகள் அமைத்தோம். இன்று அவ்வழியில் காற்று கடந்த இடமெங்கும் பனை மரங்கள் மட்டுமே 'நிற்கின்றன'... இந்தியாவில் உள்ள பனைமரங்களில் 80 சதவீதம் தமிழ்நாட்டில் மட்டுமே. இருபுறம் கடல் சூழ்ந்த நம் நிலப்பரப்பை புயலிடமிருந்து காத்து நின்ற அரணில் 50 சதவீதம் வெட்டி எரித்து அழித்தபின் இன்று ஒரு புயல், ஒரே புயல், இம்மரத்தின் அவசியத்தை ந

மார்க்கு தம்பி, Mark my words!

தூக்கம் பற்றி நண்பர் ஒருவரின் Facebook பதிவு படிக்கைலயே ஒரு டவுட்டு... மார்க்கு எப்படி இதை அலோ பண்ணாரு?...ன்னு. உலக மென்பொருள் வணிகத்தில் வேலை செய்யும் ஒரு நட்டு போல்ட்டு கூட ஒழுங்காய் தூங்குவதில்லைன்னு பின்னூட்டம் இட்டா...என்ன ஆச்சின்னு யோசிக்கிறதுக்குள்ள Facebook page நகந்துடுச்சு!  'டேய் மார்க்கு, ஒன்ன நல்ல்லா வார் புடிச்சா சரியாயிடும்'னு தி.மோகனாம்பாள் பாலையா ரேஞ்சுக்கு எமோசனல் ஆயி... பின்ன தனி பதிவாவே போட்டுடலாம், அதுவும் மார்க்கு கண்ணுல மண்ணத்தூவி FB லயே போட்டுடலாம்னு, இதோ! (Hi Sundar, I reposted it here :-) Go on, make your day too!) பல வெளிநாடுகள்ல church tax ன்னு ஒரு வரி இருக்கு. தம் faith ஐ Christian அப்டீன்னு tax form ல fill பண்ணவங்க மட்டும் கையத்தூக்குங்க ன்னு சொல்லி... வசூலிப்பாங்க. நிறைய பேரு இதுக்காகவே faith அ 'None' அப்டீன்னு fill பண்ணிட்டு tax கட்டாம சுத்துவாங்க. "தெய்வ குத்தமாச்சே! உம்மாச்சி கண்ண குத்தாதா?" ன்னு கேட்டா, சிரிச்சிகிட்டே, 'ரிடையர் ஆனதுக்கப்றம் ஒரு நாள் ஒட்டுக்கா பாவ மன்னிப்பு வாங்கிடுவேன். அது போதும