முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மார்க்கு தம்பி, Mark my words!


தூக்கம் பற்றி நண்பர் ஒருவரின் Facebook பதிவு படிக்கைலயே ஒரு டவுட்டு... மார்க்கு எப்படி இதை அலோ பண்ணாரு?...ன்னு.

உலக மென்பொருள் வணிகத்தில் வேலை செய்யும் ஒரு நட்டு போல்ட்டு கூட ஒழுங்காய் தூங்குவதில்லைன்னு பின்னூட்டம் இட்டா...என்ன ஆச்சின்னு யோசிக்கிறதுக்குள்ள Facebook page நகந்துடுச்சு! 

'டேய் மார்க்கு, ஒன்ன நல்ல்லா வார் புடிச்சா சரியாயிடும்'னு தி.மோகனாம்பாள் பாலையா ரேஞ்சுக்கு எமோசனல் ஆயி... பின்ன தனி பதிவாவே போட்டுடலாம், அதுவும் மார்க்கு கண்ணுல மண்ணத்தூவி FB லயே போட்டுடலாம்னு, இதோ! (Hi Sundar, I reposted it here :-) Go on, make your day too!)

பல வெளிநாடுகள்ல church tax ன்னு ஒரு வரி இருக்கு. தம் faith ஐ Christian அப்டீன்னு tax form ல fill பண்ணவங்க மட்டும் கையத்தூக்குங்க ன்னு சொல்லி... வசூலிப்பாங்க.

நிறைய பேரு இதுக்காகவே faith அ 'None' அப்டீன்னு fill பண்ணிட்டு tax கட்டாம சுத்துவாங்க.

"தெய்வ குத்தமாச்சே! உம்மாச்சி கண்ண குத்தாதா?" ன்னு கேட்டா, சிரிச்சிகிட்டே, 'ரிடையர் ஆனதுக்கப்றம் ஒரு நாள் ஒட்டுக்கா பாவ மன்னிப்பு வாங்கிடுவேன். அது போதும்பா' ம்பாங்க!

நம்ம ஊரில் நிறைய பேரு, 'என்னைக்கிருந்தாலும் ஒரு நா எந்திரிக்க முடியாத தூக்கம் உறுதி. அப்பாலே சே(செ?)த்து தூங்கிக்கலாம்'னு நாயாப்பேயா உழைச்சி யார் அக்கவுண்டையோ நிரப்ப நிரப்ப, அந்த 'என்னைக்கோ ஒரு நாள்' ங்கிறது, "இப்ப வரட்டா? வந்துடட்டா?" ன்னு சதா சர்வகாலமும் கேட்டுகிட்டே இருக்கு. உழ வேண்டிய(!) காதில செல்போன் / இயர்போன்...

தேவைக்கு உழை, வாழ், அனுபவி, மகிழ்வாய் வயதாகி செத்துப்போ' என கல்வெட்டுகளில் பதிக்கப்படாத நம் வாழ்வியல் இன்று
'ஆசை உள்ளவரை அனுபவி, அதுக்கான கடன மூச்சு உள்ளவரை ஒழைச்சு அடை. தூங்குனே....அம்புட்டுதான்!!!!' என மாறியது தெரியாமலே மாறிப்போச்சி.

காத்திருப்பு என்பது நுகர்தலின் இன்பத்தை உயர்த்துவதாக இருந்த காலம் போய், இன்று, 'ஏன் வெய்ட் பண்ணனும்? அமேசான்ல ஆர்டர் பண்ணு, ஸ்வைப் பண்ணு, ரெண்டே மணி நேரத்தில லாலா கடை மித்தாய் / கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா, சூடு ஆறாம, டெலிவரிக்கு நான் காரண்டி!' என்று ஆகிப்போச்சு (இன்று காலையில் அமேசான், இந்தியாவில் இந்த சேவையை அறிவித்துள்ளது!).

காத்திருத்தல் என்பது நுகர்வின் இன்பத்தை உயர்த்துவது மட்டுமன்றி, மன நிறைவையும் உயர்த்துகிறது என்பதை மறந்தே போனோம்.

மனம் நிறைவடையாவிட்டால் உறக்கம் வராது, பசி எடுக்காது, கக்கா சுச்சூ கூட வேளைக்கு 'போகாது'!

உறக்கம் அவசியம். அதுவும் ஆழ்ந்த உறக்கமாக இருந்தால், 'நலம்'

இல்லை என்றால்... கவலை வேண்டாம். இன்னேரம் மார்க்கு தம்பி இந்த பதிவை செமான்டிக் பார்சர்ஸ் கொண்டு அலசி ஆராய்ந்து, எக்ஸ்பர்ட் டீம் மீட்டிங் போட்டு, 'பாபுஜியின் தியரிப்படி தூக்கமின்மைக்கு அடிப்படை காரணம், மன நிறைவின்மை / திருப்தியின்மை' என ஒருமனதாய் முடிவு செய்து, கீழ்க்கண்டவைகளை செய்திருப்பார்:

1. Pfizer மருந்து கண்டுபிடிப்பு நிறுவனத்திற்கு ஒரு phone call; 'ஹலோ, வயாக்ரா வியாபாரம் டல்லுன்னு சொன்னே இல்லயா, தூக்கம் பத்தாததுதான் அதுக்கு காரணமாம். மன நிறைவு குறைவுதான் அதுக்கே காரணமாம். கொஞ்சம் வயக்ரா சாயல்ல மயாக்ரான்னு ஒண்ணு, கொஞ்சம் மரியுவானா சேத்தா போதும். ரெடி பண்ணிடுங்க. அமேசான் பெரிய ஆர்டர் தரும். நான் காரண்டி'.

2.  அமேசான் அதிபர் Jeff தம்பிக்கு ஒரு phone; 'ஜெஃபு, நேனு மார்க்கு! ட்ரோன்ல ஸ்வீட்டோட சேத்து டேப்லட் டெலிவரி பண்றோம், ஒவ்வொரு கஸ்டமர் ஆர்டர் கூடயும் free யா! கண்டிப்பாய் மறுபடி மறுபடி நிறைய வாங்குவாங்க, free டாப்லட்டுக்காகவே!  திருப்திதான் விக்கிதாம்!! இப்பதான் கண்டுபுடிச்சோம். ரிபீட் ஆர்டர் லாபத்தில 50 சதம் எனக்கு. ஓ.கே?!'

நிறைவான வாழ்வு (வாழ்வின் ஒவ்வொரு நாளும்), நல்ல தூக்கத்தின் அடிப்படை.

நிறைவு என்பது பணத்தால், நுகர்வால்... கிட்டாது.

வாழ்வில் எத்தனை வீடு, கார், நாடுகள் பயணம் என்பதைவிட, எந்த காரணங்களுக்காக வாழ்கிறோம்?  நம் வாழ்வின் செய்தி என்ன? என்ற வினாக்களும் அவற்றிற்கான விடை தேடுதலுமே வாழ்க்கையாய் மாற்றிக்கொண்டவர்க்கு நல்லுறக்கம் உறுதியாய் கிட்டும். மற்றவரெல்லாம்... தொடக்கத்திலிருந்து மறுபடி படிக்கக்கடவது!

(மார்க்கோட மைன்ட் வாய்ஸ்; 'ஆகா!!! நான் இப்ப என்ன பண்ணுவன்?!!!')

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...