முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம் ஆன்மாவின் நிறம் கருப்பு


சில ஆயிரம் முதலைகளை அழிக்க, ஒரு பெருங்கடல் முழுவதும் குண்டு வீசலாம். அல்லது முதலைகளை வேறு சொற்பமான வழிகளிலும் பிடிக்கலாம்.

ப்ரச்னை என்னன்னா, முதலைங்களெல்லாம் பினாமி முதலைகளை காவு கொடுத்துவிட்டு மீண்டும் தம் பணியில் கண்ணும் கருத்துமாய். 

விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து பாருங்கள். நம் அன்றாட வாழ்வில் ஊழலின் தாக்கம் குறையவே இல்லை. இன்றும் நாம் அரசு எந்திரத்தின் கடைசி ஆணிக்கு கூட கரன்சி காட்டாமல் எந்த ஆணியையும் நாம் பிடுங்க முடியாது...வேலையும் நடக்காது. 

'சர்வீஸ் சார்ஜ் எவ்ளோ?' ன்னு எந்த அலுவலகத்தில் கேட்டாலும் 'உங்களுக்கு பிரியப்பட்டத குடுங்க' என்பதாகவே பதில்!

அவங்க சரியாதான் சொன்னாங்க. நம்மடமிருந்து 'பிரிய'ப்படவேண்டியதாய் அவர்கள் நினைக்கும் தொகையை கேட்கிறார்கள். 

பண மதிப்பு இழப்பில் அவங்கள்லாம் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்களா, அதனால, கூடுதல் வேகத்துடன் 'உழைக்கிறார்கள்'.

சொந்த ஊருக்கு ட்ரான்ஸ்பரா, கொடு 5 லட்சம் என்று கொடுத்தால், விட்டதை பிடிக்க வசூலிக்கையில் அங்காளி என்ன பங்காளி என்ன?!

வசூலித்தது, பணமாய், தங்கமாய், வைரமாய், நிலமாய்... எல்லாம் கறுப்பாய்தானே மாறுது!

"லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிக்கிறது" என்ற banner இருக்கும் இடமெல்லாம் லஞ்சம் இல்லாமல் இல்லை! லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர்களே பிடிபடுவதும் அப்பப்ப லைட்டா நடக்குற ரத்த பூமிங்க இது (சி.பி.ஐ யே சாட்சி சொல்லும்:-) ஒழிச்சிட்டா ரணகளமாயிடுமுல்ல!!!!

இந்தியனும் பாட்சாவும் கூட்டு சேந்து தொரத்தினாலும், ஒரு விரல் புரட்சி நடத்தினாலும் 'சிஸ்டம்' காப்பாத்தும்!!!
ஏனெனில் இந்த சிஸ்டம் வேலை செய்யும் விதம் அப்படி!

'கை' காட்டி மிரட்டினாலும் 'சூலாயுத'த்தால் குத்தினாலும் இதற்கு வலிக்காது; நம் கைகள் கொண்டு நம் வயிற்றை நாம் எப்படி சுத்தம் செய்வது இயலாதோ அப்படி; கையால் எடுத்து உண்டதுதானே வயிற்றில்!

பொன்னகரம் என்றொரு புதுமைப்பித்தன் கதை. 'கற்பு கற்பு என்று பேசுகிறீர்களே, இதுதானையா பொன்னகரத்தின் கதை!' என்று முடித்திருப்பார்.

அவர் இன்று இருந்து, இந்தப்பதிவை எழுதியிருந்தால் இப்படித்தான் முடித்திருப்பார்: 
"
பணமதிப்பு இழப்பு பணமதிப்பு இழப்பு என்று கூவுகிறீர்களே, இதுதானையா ஆன்மாவை கரன்சிக்கு அடகு வைத்த நாட்டின் கதை!
"

பின் குறிப்பு:

'கடலில் ஏது முதலை?' என்கிறீர்களா?

That is the whole point!!!!!!

கருத்துகள்

  1. At present I don't have the facility to comment in Tamil and hence continue in English. Do your​ mean the demonetisation and the aim of the PM to finish off the corrupt alligators once for all, in the first part?

    பதிலளிநீக்கு
  2. Yes, absolutely. With rhetoric his team convinced the nation that allegators indeed lived in the open ocean and after the Demon, all alligators went belly up...

    பதிலளிநீக்கு
  3. U r the change; so give some solution too. Present situation is known to us. Solutions can be discussed and spread

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rationalize / abolish taxes altogether and levy a minuscule percentage cut from the amount of cash passes thru the financial systems as 'cost of doing business' in India.

      Digitize and virtualize all touchpoints of corruption after publishing the cost of each service provided by govts.

      Transparency and Accountability can be enforced in a digital governance system;not just digital wallets...

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்