"இல்லைன்னு சொல்லல, இருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்' என ஒருத்தர்.
இவரை நம்பும் ஒரு கூட்டம்.
'ஆண்டவன் சொல்றான். அருணாசலம் செய்றான்' என இன்னொருவர்.
இவரை நம்பும் இன்னொரு கூட்டம்.
'கடவுள் இல்லை. கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி' என ஒரு கூட்டம்.
'ராமர் கோயில் கட்டியே தீருவோம்' என ஒரு கூட்டம்.
'பாபர் சமாதி எங்களுக்கே' என ஒரு கூட்டம்.
'குழம்பிய மக்களே! கர்த்தரிடம் வாருங்கள்!' என ஒரு கூட்டம்.
'அஹம் ப்ரம்மாஸ்மி. எனக்குள் கடவுள், உனக்குள் கடவுள். ஆனால் என் கடவுள் உன் கடவுளல்ல!' என ஒரு கூட்டம்.
இது போக கல்கி முதல் நித்தி வரை சித்தி வேண்டி கூட்டமோ கூட்டம்!
"இவங்க கைல சிக்கினோம்னா செத்தோம்டா!" ன்னு கடவுளர் அனைவரும் பதுங்கியிருக்கும் இடம், எனக்கு தெரியும் :-)
நீங்களும் அறிய விரும்பினால் மேலே படிங்க :-)
Before Sunrise என்று ஒரு திரைப்படம். 1990களில் வெளியாகி உலகின் நூற்றாண்டின் டாப் 100 படங்களில் முதலிடம் பிடித்த படம்.
செலின் என்ற ஃப்ரெஞ்ச்சு பொண்ணுக்கும் ஜெஸ்ஸி என்ற அமெரிக்க பையனுக்கும் இடையில் பல உரையாடல்கள். அதில் ஒன்றில்தான் கடவுள் ஒளிந்திருக்கிறார்!
"
Celine: I believe if there's any kind of God it wouldn't be in any of us, not you or me but just this little space in between. If there's any kind of magic in this world it must be in the attempt of understanding someone sharing something. I know, it's almost impossible to succeed but who cares really? The answer must be in the attempt.
"
அதாவது,
"
கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவர் என்னிலோ உன்னிலோ இருக்கமாட்டார்; நமக்கிடையேயான இந்த சிறிய இடைவெளியில்தான் இருப்பார்.
இந்த உலகில் மேஜிக் என்னும் மந்திரவித்தை என்னவென்றால், நம்மோடு தம் தினத்தை பகிரும் உயிர்களின் பகிர்தல் பற்றி உணர/புரிந்துகொள்ள நாம் செய்யும் முயற்சிகளே.
இந்த உலகில் மேஜிக் என்னும் மந்திரவித்தை என்னவென்றால், நம்மோடு தம் தினத்தை பகிரும் உயிர்களின் பகிர்தல் பற்றி உணர/புரிந்துகொள்ள நாம் செய்யும் முயற்சிகளே.
முயற்சியால் பலன் கிடைப்பது கடினமாக இருக்கலாம்; என்ன போச்சி அதனால்? விடை நம் முயற்சிக்குள் ஒளிந்திருக்கிறது.
"
கடவுளை காணும், உணரும் மேஜிகல் மொமெண்ட்ஸ், நம்மைச்சுற்றி உள்ள உயிர்களுக்கும் நமக்குமான இடைவெளியில் பொதிந்துள்ளன. முயன்றால் இறை தரிசனம் கிட்டும்...
கடவுள் இருக்குறாரு கொமாரு!
கடவுள் இருக்குறாரு கொமாரு!
God not worried about us. So let him be. Y worry about him. Already lot to worry/work about
பதிலளிநீக்கு