பண்டங்கொரு நாடிருந்ததே
ஒன்பது கோடி பனையிருந்ததே
வயிறு நிறைக்க நொங்கிருந்ததே
பனையேறும் தொழிலிருந்ததே
புயலும் காற்றும் ஒதுங்கியிருந்ததே
ஒரு புயலில் காற்றுமடித்தால்
ஊரில் சேதம் 'காத்து' நின்றதே...
தன் இனத்தை தானே வளர்த்ததே
மண்ணுயிரை சேர்த்தே வளர்த்ததே
பயிர் காத்து அரணாய் நின்றதே
உயிர்காத்து உயர்ந்து நின்றதே
பண்டங்கொரு நாடிருந்ததே
ஒன்பது கோடி பனையிருந்ததே
வயிறு நிறைக்க நொங்கிருந்ததே
பனையேறும் தொழிலிருந்ததே
புயலும் காற்றும் ஒதுங்கியிருந்ததே
ஒரு புயலில் காற்றுமடித்தால்
ஊரில் சேதம் 'காத்து' நின்றதே...
...
நான்கு கோடி பனை மரங்கள் 'மா'நிலமெங்கும் வெட்டிக்குவித்தோம். புயற்காற்றுக்கு நூறுவழிச்சாலைகள் அமைத்தோம்.
இன்று அவ்வழியில் காற்று கடந்த இடமெங்கும் பனை மரங்கள் மட்டுமே 'நிற்கின்றன'...
இந்தியாவில் உள்ள பனைமரங்களில் 80 சதவீதம் தமிழ்நாட்டில் மட்டுமே.
இருபுறம் கடல் சூழ்ந்த நம் நிலப்பரப்பை புயலிடமிருந்து காத்து நின்ற அரணில் 50 சதவீதம் வெட்டி எரித்து அழித்தபின் இன்று ஒரு புயல், ஒரே புயல், இம்மரத்தின் அவசியத்தை நமக்கு உணர்த்திச்சென்றுள்ளது.
பனையேறும் பெருமாள்களே- பெருநகரங்களில் கட்டிட வேலைக்கு கல் சுமந்தது போதும். அக்கினிக்குஞ்சு போல சிறு பொறியாய் ஒரு கூட்டம் நம் நிலப்பரப்பு முழுதும் பனை விதைத்துவருகின்றது. உங்கள் வாழ்நாளில் நீங்கள் மீண்டும் பனையேறுவீர்கள். அதுவரை அந்தக்கலையை மறவாதிருங்கள்...

(அக்கட பூமியில் நம் மண்ணின் ஆன்மாவின் குரலாய் ஒலிக்கும் பாடகி ரேஷ்மி சத்தீஷின் 'பண்டங்கொரு நாடிருந்ததே' பாடலை தழுவி என் பதிவு).
கருத்துகள்
கருத்துரையிடுக