அன்றொரு நாள் என் வீட்டு மாடியில் படர்ந்திருந்த சுரைக்கொடி தாங்கிய கயிறொன்றை, உணவுதேடிப்பறக்கையில் தவறுதலாய் மோதி அறுத்துவிட்டதாய் என் மாடிச்சுவரில் அமர்ந்து வருத்தம் தெரிவித்தது தோகை மயிலொன்று.
அது நகர்ந்து பறந்து மறைந்தபின் அவ்விடத்தில் கிடந்தது ஒற்றை மயிலிறகு, சேதாரத்திற்கு செய்கூலியாய்!
குட்டிபோடும் என நான் புத்தகத்துக்குள் புதைத்து வைத்திருந்த அந்த மயிலிறகு, குட்டிபோட்டு, பெருத்து, அறையெங்கும் மயில் தோகை!
அம்மயில்தோகையின் உச்சியில்... தோகை வேண்டி காத்திருக்கும் அதே மயில்!
அது சேதாரம் செய்த கதையை நான் உங்களோடு பகிர்ந்துகொள்வது பிடிக்காது இப்போது இந்த விந்தை நொடியில் அது என் எழுத்துக்களை ஒவ்வொன்றாய் கொத்தித்தின்றுகொண்டிருக்கிறது, இறகுகளின் ஊடாக.
வெளியே காற்றில் துழாவுது மீண்டும் அறுபட்ட கயிறிலிருந்து விழுந்துகொண்டிருக்கும் சுரைக்கொடி..
முழுதாய் உண்டு முடிப்பதற்குள் படித்துவிடுங்கள். அதற்குள் நான் இன்னும் ஒருமுறை படர்கயிறு ஒன்றை சுரை வளர்க்க கட்டிவிட்டு வருகிறேன்
:-)
What an imagination
பதிலளிநீக்குThank you :-)
பதிலளிநீக்கு