முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டார்வினும் ஒதிய மரமும்!

சார்லஸ் டார்வின் தந்த பரிணாமவியல் - Evolutionary Biology. இதன் தவறான சாரம் - Survival of the fittest. இந்த தவறான புரிதல்தான் தமிழிலும் 'வலியவன் வாழ்வான் / வலிமையான உயிர்கள் வாழும்' என வலம் வருகிறது. வலிமை என்பதற்கு மனிதர்களது புரிதலில் "பேராற்றல்" - Might. உதாரணத்துக்கு இன்றைய அமெரிக்கா. டார்வின் சொன்னது, Survival of the most adaptable.  அமெரிக்கா வலிமையான நாடு. ஆனால் டார்வினின் பரிணாம கோட்பாட்டில் அது fittest Nation அல்ல. வலிமைக்கும் most adaptable க்கும் என்ன வேறுபாடு? Most Adaptable - உதாரணம்: ஓணான் / உடக்கான்!  தான் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்ளுதல் / மாற்றிக்கொள்ளுதல். 200 மில்லியன் ஆண்டுகளாக adapt ஆகி ஆகி தன் இனத்தை நீட்டித்துக்கொண்டிருக்கும் இந்த உயிர் ஒரு சில 'வெகு வேகமாக சூழல் மாறிப்போன நிலங்களில் பதுனைந்தாண்டுகளிலேயே தன் மரபணுவை (DNA) மேம்படுத்தி பிழைத்திருக்கிறதாம்! நம் கண்ணதாசன் இதையே எளிமையாக  'ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை' என எழுதியிருக்கிறார்...