முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரொம்ப டீப்பும்மா!

அண்ணலும் நோக்க, அவளும் நோக்க செம்புலப்பெயல்நீர் போலவே... 'எங்க ஊரு காதல பத்தி நீ இன்னா நெனைக்கிற?' என ஒரு வெளிநாட்டுப்பெண் கேட்க, 'எங்க ஊரு காதல் போல அது ஆழமில்லம்மா' ன்னு இளையராஜா தொடங்க, "ஆழமுன்னா என்னா?' என வெ.நா.பெண் கேட்க, " அது ரொம்ப டீப்பும்மா' ங்கிறார் ராஜா. நம் இன்றைய தலைமுறை இந்த கான்வர்சேஷனை உள்ளூருக்கு கொண்டு வந்தாச்சி. காணாமலே காதல், கண்டதும் காதல், மோதலினால் காதல் என பல பரிமாணங்களை தாண்டி பயணிக்கும் காதல் எனும் பேருணர்வு, வளர்ந்த நாடுகள் நம் சிறார்கள் மீது நடத்தும் சமூக வலைதள தாக்குதல்களால் உருமாறிக்கொண்டிருக்கிறது வெகுவேகமாய். காதல் கைகூடாது போவதும், கனிந்து கடிமணமாவதும், சமூக ஏற்புடன் திருமணமாவதும் தொல்காப்பிய காலத்திலிருந்து தொடர்வது இப்போது எப்படி மாறிக்கொண்டிருக்கிறது? நட்பு அல்லது காதல் என்கிற இரண்டே கட்டங்களில் பாண்டியாடிப்பழகிய பல தலைமுறைகளின் வழி வந்த நம் மண்ணின் இளைய எதிர்காலம் இப்போது காதலை ஊடறுத்து எழுப்பியுள்ள Maze ஐ எட்டிப்பார்ப்போம் இப்போது: Situationship - நட்புக்கு மேலே, காதலுக்கு கீழே, ஆனால் காமம் உண்டு. சூழல் மாறினால் இ

இறை தரிசனம்

எண்ணெய் தேய்த்து படிய வாரிய தலை. தலையில் க்ளிப்பின் பிடிப்பில் ஒரு துண்டு மல்லிகைச்சரம். மிக மிக நேர்த்தியாக தொடுக்கப்பட்ட சரம். அணிபவரை மனதில் நிறைத்து தொடுப்பவர் தொடுத்த சரம். அதில் பொங்கி வழியுது தாயன்பு. ஆகாய நீல மேல்சட்டையெங்கும் கரு நீல சதுரங்கள். கரு நீலத்தில் நனைத்த கீழாடை. சைக்கிளின் முன்னிருக்கையில் அச்சிறுமி. பின் இருக்கையில் நேர்த்தியாக வெட்டப்பட்ட, படிய வாரப்பட்ட தலைமுடி கொண்ட அவளது அண்ணன், சிறுவன்,  அவளது சீருடை வண்ணத்திலேயே அவனதும். இருவரையும் சுமந்த சைக்கிளை கவனமாக மிதித்து முன்செலுத்தும் தகப்பன், ஏழ்மை அப்பிய முகம், வறிய உடை, கிள்ளியெடுக்க சதையில்லை.  அந்த காலை வெயிலில் ஒரு தேசிய நெடுஞ்சாலையின் நாற்கர சந்திப்பில், அவசர கதியில் விரையும் எண்ணற்ற வாகன மனிதர்களின் இடையில் ஒளிரும் அவனது கண்கள், அதில் தெரிந்த எச்சரிக்கை உணர்வு... இயந்திர ஆற்றலின் துணை கொண்டு விரைந்துகொண்டிருந்த சனத்திரளில் தன் சொந்த ஆற்றலில், தன் எதிர்காலத்தை தன் சைக்கிளில் முன்னும் பின்னுமாய் அமர்த்தி நிகழ்கால நொடியில் மட்டுமே கவனத்துடன் மிதித்துச்சென்ற அவனது முகம் போன்ற அமைதியான, நம்பிக்கை தரும், மகிழ்வு த

தமிழ்நாடு - ஒரு புதிய அறிமுகம்!

 Tamil Nadu - A primer  இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு ஒன்று 1980களின் தமிழகத்திற்கு இருந்தது. இன்றும் அந்த தனிச்சிறப்பை தக்க வைக்க போராடத்துவங்கியுள்ளது! இந்தி எதிர்ப்பு போராட்ட சூடு தணிவதற்கு முன்னரே தஷிண பாரத் இந்தி பிரச்சார சபாக்கள் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருந்தன. கற்க வரும் மாணவர்களின் கூட்டம் இன்றுவரை பெருகிக்கொண்டே உள்ளது; அவர்கள் என் னதான் தேர்வுத்தாளை மட்டுமே மையமாக வைத்து கற்பிப்பதை தொடர்ந்தாலும் :-)  ஆத்தாடீ மாரியம்மாஆஆஆஆ எனத்தொடங்கி, முருகா நீயெல்லாம் தெய்வமில்லை! என தொடர்ந்து, கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன் என உருகி, திருச்செந்தூரின் கடரோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கத்தை நினைவு படுத்தி, புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களை எங்கள் புருஷோத்தமன் புகழ் பாட அழைத்து,   பாட்டும் நானே பாவமும் நானே என சிவனின் பரிமாணங்களை உணர்த்தி, உள்ளம் உருகுதையா என உருகி, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என பேட்டை துள்ளி, நல்ல மனதில் குடியிருக்கும் நாகூராண்டவா என நன்றி விளித்து, வானுக்குத்தந்தை எவனோ மண்ணுக்கும் தந்தை அவனே என விளக்கி, ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்

காதலை காதலிப்போம்!

அவள் பேரழகி.  வானெங்கும் தங்க விண்மீன்கள் கண்கள் மூடி கடல் குளிக்க சூரியன் கண்விழித்தெழும் நேரம்... நட்புகளுடன் கடற்கரையோர தங்கநிறப்பொழுதொன்றில் களிநடனமாடி, வீடு திரும்ப சாலையில் நான்கு சக்கர வாகனத்தை உச்சத்தில் முடுக்க... விபத்து நிகழ்கிறது. அழகிக்கு தலையில் அடி. நிகழ்கால நினைவுகள் மறந்துபோய் செயல் அளவில் சின்னஞ்சிறுமியின் மன முதிர்வோடு மட்டும் கண் விழிக்கிறாள். ஒரு நாள் கவனிப்பின்றி திறந்திருந்த மருத்துவமனை வாயில் வழி வெளியேறி பெருநகர சாலையில் கால் பதிக்க, நகரின் கோரக்கரமொன்று அவளை பாலியல் தொழில் நடக்கும் விடுதியொன்றில் விற்றுவிடுகிறது. அவன் பேரழகன்.  அனாதை. தி்ருமணம் ஆகாதவன், ஊட்டியில் ஒரு பள்ளியின் தலைமைப்பொறுப்பில். ஆனாலும் அவனது விருப்பு வெறுப்புகளை மென்மையாக மட்டுமே வெளிப்படுத்துபவன். ஒரு விடுமுறையில் அதே பெருநகரில் நண்பனை சந்தித்து... நண்பனின் தூண்டுதலால் மதுவருந்தி பின் நண்பனின் இழுப்பிற்கு தலையாட்டி அவனுடன் ஒரு பாலியல் விடுதிக்கு செல்கிறான். பேரழகி-பேரழகன் சந்திப்பு: பாலியல் விடுதியில் அந்த குமரி வடிவம்-குழந்தை உள்ளம் கொண்ட பேரழகியை சந்திக்கிறான். அந்த இரவு அவளுடன் தங்கி, அவள

கண்டா சுடச்சொல்லுங்க!

  டெட் பாடிய கையோட தூக்கி வாருங்க (காட்டு) பன்றிய கண்டா சுடச்சொல்லுங்க! காட்டுப்பன்றிகளை கண்டதும் சுட கேரள அரசு அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கை செய்தியாகி இருந்தது. 2022 இல் விவசாயிகள் 'முன் அனுமதி' பெற்றபின்பு சுடலாம் என அரசு வறையறுத்தது. ஆனால் இன்று வரை பன்றிகளின் சிக்கல் வளர்ந்து கொண்டே வருகின்றது. பன்றிகளுக்கு ஒற்றர்கள் யாரோ தகவல் சொல்லியிருப்பார்களோ என சந்தேகிக்கும் அளவுக்கு அவையும் இடம் பெயர்ந்து தமிழக கானக எல்லைப்பகுதிகளில் மெல்ல பெருகி வருவதாக சற்று முன் கிடைத்த தகவல்! இயற்கையில் காட்டுப்பன்றிகள், நரிகள் இருந்த வரை பெருகாமல் கட்டுக்குள் இருந்தன. நரிகளை பற்களுக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் வேட்டையாடி அழித்தபின்பு காட்டுப்பன்றிகளோடு போராடுகிறோம், காடுகளை அழித்தபின் அங்கு காணாமல் போன தம் உணவை தேடி ஊருக்குள் வரும் யானைகளோடு போராடுவது போல. ஆஸ்திரேலியாவில் முயல் தொந்தரவை ஒழிக்க 'உயிருடனோ பிணமாகவோ பிடித்து  வந்தால் சன்மானம்' என்பது போன்ற பல முயற்சிகளை இருநூறு+ ஆண்டுகளாக முயற்சித்த பின்பும் முயல்கள் எண்ணிக்கையோ குறைவதாக இல்லை :-) நாட்டின் குறுக்கே கோழிவலை வேலி

தி ஜானகிராமனும் மாருதி ஜிப்சியும்!

பின் 1980களில் இதயத்தை திருடாதே படம் கேஜி தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்கையில் எனக்குள் தோன்றிய சங்கல்பம், 'ஒரு நாள் மாருதி ஜிப்சி வண்டிய வாங்கறோம். லைஃப் பார்ட்னர பக்கத்தில உக்கார்த்தி வச்சி ஊட்டிய ரவுண்டு சுத்துறோம். இது சத்தியம்!' நாகார்ஜீனா, கிரிஜா, மாருதி ஜிப்சி + ஊட்டியின் குளிரில் நனைந்த வர்ணஜாலம் எல்லாம் சேர்ந்து இந்த சங்கல்பத்தை உரம் போட்டு வளர்த்தன. படிப்பு முடிந்ததும் அமெரிக்க மேற்படிப்பு கனவில் கேம்பஸ் இன்டர்வ்யூ எல்லாவற்றையும் அரைமனதோடு அட்டெண்ட் செய்து, "ஏண்டா இன்னொருத்தனோட வாய்ப்ப கெடுக்கிற? ஆர்வமில்லன்னா அட்டெண்ட் பண்ணாத" என தலைமை பேராசிரியர் அன்பாய் கடிந்த பின் அவற்றையும் புறக்கணித்து... அவரது அட்வைசின்படி அதே என் கல்லூரியிலேயே விரிவுரையாளராக சேர்ந்து, பாடமும் நடத்திக்கொண்டு அப்ளிகேஷன்களையும் நிரப்பி அனுப்பிக்கொண்டே இருந்தேன். பின் ஒரு நன்னாளில் அமெரிக்க கல்லூரி ஒன்றில் மேற்படிப்புக்கு சொற்ப ஸ்டைஃபெண்டுடன் அழைப்பு வர, இரு முறை அமெரிக்க எம்பசி வாசலில் கால் கடுக்க க்யூவில் நின்று உள்ளே சென்று...'உன்னால சொந்த செலவில படிக்க முடியாதுன்னு உங்கப்பாவோட