முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அலையாய், துகளாய், இறையாய்...

இறை இருக்கும் இடம் எது?  கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்ற மாதிரி நழுவல்கள் இன்றி, சமரசமின்றி நேர்மையாய் அலசுவோமா? அந்தரத்தில் ஊஞ்சலாடும் நட்சத்திரக்கூட்டங்களுள் ஒன்றான நம் புவியில் மட்டும் இறை இருக்கிறது என்று கொண்டால் மற்ற நட்சத்திரங்களை காப்பது யார்? அந்த இறை எங்கு உறையும்? இந்த கூற்றை தொடர்ந்து சிந்தித்தால் இறை நம் புவிக்குள் மட்டுமே அடங்கியிருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகும். அள்ளித்தெளித்த பல கோடி வைரங்களாய் உலகங்கள் பரவிக்கிடக்கும் பால் வெளிகளில், அவற்றை தழுவிப்போர்த்தியிருக்கும் காரிருளில் இன்னாருக்கு இன்ன இடம், இந்த இடம் மட்டுமே என்ற ஆதார விதிகளை வகுத்த இறை, இவை எல்லாவற்றையும் காக்கும் இறை, இதை விட்டு வெளியிலிருந்து, விலகி இருந்து காக்க வாய்ப்பில்லை. அப்படியானால் இறை எங்குதான் இருக்கிறது? எங்குதான் இருக்கிறது இறை? விடை அறிய, நாம் இன்னொரு வினாவுக்கு விடை தேடவேண்டியிருக்கிறது. "அறிவியலும் ஆன்மீகமும் இணையும் புள்ளி எது"? ஆன்மீகம் நம் உள்ளில் இருந்து வெளிப்பட்டு நம் உணர்வுகளின் வழி, சிந்தனையின் வழி அண்டவெளியெங்கும் பரவியோடி

சொல்லாடிய தமிழெங்கே?!

நெல்லாடிய நிலமெங்கே? சொல்லாடிய தமிழெங்கே? 'டப்பா டப்பா வீரப்பா எப்போடாப்பா கண்ணாலம்?' "மாசி பொறக்கட்டும், மல்லியப்பூ பூக்கட்டும்" மண்ணும் மொழியும் மனிதருக்கு தரும் மேன்மையை வேறு எதுவும் ஈடு செய்யாது. நெல்லாடிய நிலங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள், அங்காடிகள், ஆலைகள் என 'வளர்ச்சி' தாளத்துக்கு ஆடத்தொடங்கி இன்று ஓட்டமே வாழ்க்கையாய், ஆட்டமே இயல்பாய் எதியோப்பிய சோளத்திலிருந்து தயாராகும் சர்க்கரைக்கரைசலை அந்நிய உணவு வழி உள்ளே தள்ளி, வெளியேற்றுவதற்கு மருத்துவ உதவி தேடும் நம் அவசர தினங்களை இருக்கும் அளவுக்கு அலசியாச்சு. எனவே அதை தவிர்த்து 'சொல்லாடிய தமிழுக்கு' வருவோம். எழுபது எண்பதுகள் வரை தமிழ் சமுதாயம் மொழி பழகியது பள்ளிகளுக்கு வெளியேதான். இலக்கணம் மட்டுமே பள்ளிகளின் கடமையாக இருந்தது. பேசு தமிழ் இயல்பான வாழ்வான சூழலில் "விளையாடு தமிழ்" என்று ஒன்று இருந்தது, மொழி வளர்த்தது... சிறு குழந்தைகள் பேசத்தொடங்குமுன்னரே தாலாட்டுப்பாடல் வழி தொடங்கிய இந்தத்தமிழ், வளர் குழந்தைகளின் விளையாட்டில் இன்றியமையாததாக உருவேறியது.

நாம் தொலைத்த கண்ணியை நாமதானே மீட்கணும்!

கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தம் பெருநகர் பெருநுகர்வு வாழ்வில் (consumerist life in big cities) அலுப்பு தட்டி இயற்கையை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறார்கள், மாடித்தோட்டம் முதல் ஏரோபோனிக்ஸ் வரை (மண்ணின்றி, நீரின்றி பயிர் வளர்த்தல்!). பெருவிருப்பத்துடன் பயிர்களை வளர்க்கும் இவர்கள் அனைவரும் முழு முனைப்போடு தம் முயற்சியில் மூழ்கிப்போய், இந்த முயற்சிகளை மேன்மைப்படுத்த உதவும், வளப்படுத்த உதவும் ஒரு இன்றியமையாத கண்ணியை மறந்தே போய்விட்டனர். பல்லுயிர்ச்சூழலை நெறிப்படுத்தி வளப்படுத்தும் அந்த 'தொலைந்துபோன கண்ணி' என்ன? இதை அறிமுகப்படுத்த ஒரு கதை சொல்லட்டுமா? கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது இந்திய மண்ணின் தொல்குடிகளுள் ஒன்றான தமிழரின் பழமொழி. அன்றிலிருந்து இன்றுவரை ஒரு சிற்றூர் என்பது இருநூறு / முன்னூறு வீடுகள், ஐந்தாறு தெருக்கள், ஊர் மையத்தில் ஒன்றிரண்டு கோவில்கள், நான்கைந்து நீர்நிலைகள், ஊரைச்சுற்றி விளைநிலங்கள், பாசன / வடிகால் வாய்க்கால்கள் என்பதாகவே இருக்கிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் சொந்தமாக 'இறை காடுகள்&

சர்வேசா!

உப்பு வாங்கித்தந்த விடுதலை. உடுப்பு வாங்கித்தந்த விடுதலை. உதிரம் வாங்கித்தந்த விடுதலை. உண்மை வாங்கித்தந்த விடுதலை. இன்று உள்ளங்கையகல காகிதத்தில் அடங்கி, சற்றே பெரிதாய் காற்றில் பறந்து, நம் எல்லைகளில் காவல் காக்கும் மக்கள் உடல் மீது கிடந்து, நம் சாலைகளில் மக்கள் காவலர்களின் வாகனங்களில் படபடத்து... இதிபோன்ற தருணங்களை சடுதியில் மறந்து கடந்து... மீண்டுமொரு விடுதலை நாளில் கொடியேற்றி இனிப்பு பகிர்ந்து விடுமுறை பெருநுகர்வுக்கு நம் தேசமே ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது. தேசியக்கொடி நம் ஆன்மாவின் ஆடை.  பசுமை வனங்கள் வெளுத்த மனங்கள் சிவந்த பழமாய் இறை சிந்தனை என நம் கால் முதல் தலை வரை சுற்றி நிற்கும் இக்கொடியை இன்று ஒரு நாள் மட்டுமாவது நம்முள் உணர்ந்தாலே போதும், நமக்கு நாமே உண்டாக்கிக்கொண்ட பசுமை, வெண்மை, சிவந்த சிக்கல்கள் தீரும். விவேகாநந்தர் தேடியது ஏதோ 150 இந்திய இளைஞர்கள் அல்ல. ஆன்மாவின் மானத்தை கொடியால் காக்கும் 150 இளைஞர்கள். ஏனோ இவர்கள் நம் கண்களில் இன்றுவரை எளிதில் தென்படுவதே இல்லை. வாழிய பாரதம்.

க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டும் டாம் க்ரூசும் இணைந்து மிரட்டும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை

ஹாலிவுட் ஒரிஜினல்களை தழுவிய இந்தி படத்தின் காப்பி என்றாலும் நன்றி நவில்வதென்னவோ ஹிந்தி காப்பிக்கு மட்டுமே! Gran Torino   A Few Good Men இந்த இரு படங்களையும் புத்திசாலித்தனமாய் இணைத்து Pink என இந்தி(ய)மயமாக்கியவர் சூரஜ் சர்க்கார்.  தமிழில் டைரக்டர் வினோத் தல அஜித்துக்காக சில மாறுதல்கள் செய்திருக்கிறார். கதையின் ஒன்லைனர்: ஒரு பெண், "வேண்டாம்!" என்றால்... வேண்டாம், வேண்டவே வேண்டாம்! அமிதாப் இந்தியில் சொன்னதை அஜித் தமிழில் சொல்லியிருக்கிறார்.  பல நல்ல மாற்றங்களை இந்தப்படம் தமிழுக்கு கொண்டுவந்துள்ளது. நாயகனை முன்னிறுத்தாமல் கதையை முன்னிறுத்தியது, ஒரு மாஸ் நாயகன் இதை முன்னெடுத்து செவ்வனே செய்தி சொல்லியிருப்பது, பஞ்ச் டயலாக்குகளை வெகுவாக குறைத்திருப்பது, Focus குறையாது கதை நகர்வது ரியலிசம், ஆசம் லெவலில். படத்தின் மிக கனமான காட்சி, படத்தின் இறுதியில், கோர்ட் ட்ராமாவெல்லாம் முடிந்தபின், அந்த காக்கிச்சட்டையின் ஒற்றை கை குலுக்கலில் குவிகிறது, நாயகன் மீது அல்ல, கை கொடுப்பவரின் மீது! இந்தியில் அமிதாப் தொட்ட உயரத்தை நம்ம அஜித

காற்றினிலே வரும் கீதம்

இலங்கை தமிழ் வானொலியில் ஏக் தோ தீன் ல ல லா அநேகமாய் நான் முதல் முதலாய் கேட்ட அவருடைய பாடலாக இருக்கலாம். பலப்பல பாடல்கள், யார் யாரோ இசையமைத்தவை, கேட்டபோது எல்லாம் என் மனதைக்கவரந்த பாடல்களுக்கென்னவோ இசை அவருடையதாகத்தான் இருந்தது. பின்னர் டேப் ரெக்கார்டர் அறிமுகமாகி HMV நிறுவனம் மட்டுமே வெளியிட்ட அவரது படப்பாடல்களை நண்பர்களிடம் இரவல் பெற்று கேட்டோம். மொக்கை வானொலி நிலையங்களில்கூட செய்திகள் வாசிக்கும் முன் விழும் சில நிமிட இடைவெளியை இவரது பாடல் ஒன்றை கொண்டு நிரப்பிய இரவுகள், எங்களுக்கு நிரம்பிய இரவுகள். Sony, TDK, T-Series என ப்ளாங்க் டேப்புகள் வாங்கி, காகிதங்களில் பாடல்களை எழுதி ஒலிப்பதிவுக்கடைகளில் தந்தால் இருபது ரூபாயில் 25 முதல் 30 பாடல்கள் பதிந்து தருவார்கள். சில வாரங்கள் திரும்பத்திரும்ப கேட்டு, பிறகு அடுத்த லிஸ்டோடு மீள்பதிவுக்காய் அதே கேசட்டை எடுத்துக்கொண்டு ஓடுவோம் கடைகளுக்கு, அதுவரையில் ரீல் அந்துபோகாமல் இருந்தால். காதல், சோகம், கோபம், காமம், நன்றி என எந்த உணர்வை தூக்கலாக தனிமையில் உணர விரும்பினாலும் அங்கும் அவரது இசை ஊதுபத்தி புகை போல கசிந்தால்தான் அந

Award Winning Short Film Script: "The Last Tribe"

(Film yet to be made :-) Multiple Award winner, this one will be, if anybody is willing to make a short film using this script :-) ---------- A drone hovering above a densely populated area, invisible to naked eyes. A bunch of faces in closeup, look up. Expressions ranging from fear to anger cross their faces. A slightly longer shot - head to shoulder to waist, rising up in unison. Drone is visible now and hovering lower and lower. A bunch of hands extend from the raised shoulders. Stones whir in the air upwards, one smashes the drone. Cut to a longer shot, the bunch of folks return to their squatting posture with water bottles by their sides. A single voice booms from the crowd, "Thakkaali! Engakiteyevaa!" ("தக்காளி! எங்ககிட்டயேவா?!" in Tamil). Long after the purpose and need behind open defecation was gone, we still have trouble getting rid of it in spite of Swach Bharat...