முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

25 ஆண்டுகளில் மிகச்சிறந்த Mainstream கவிதை!

இவரை ரசிக்கப்போனேன்...


இவரது ரசிகனாகிப்போனேன்!

கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
வாழா
என் வாழ்வை வாழவே
தாழாமல் மேலே போகிறேன்
தீரா உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆழ்கிறேன்
ஹே.. யாரோபோல்
நான் என்னைப் பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்
நானே இல்லாத
ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும்
நான் ஆகிறேன்
இரு காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா..
நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறுக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்
தோ…காற்றோடு
வல்லூரு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்
நீரின் ஆழத்தில்
போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள்
நான் மூழ்கினேன்
திமிலேறி காளை மேல்
தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில்
கை கோர்த்து
நானும் நடப்பேன்
ஏதோ ஏக்கம் எழுதே
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே
ஆரோ பாடுதே..
ஆரோ ஆரிராரிரோ..
ஆரோ ஆரிராரிரோ..
கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே.
புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே..
பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா: ரியல் ஹீரோ!

வைரமுத்து இனி மகிழ்வாய் ஓய்வெடுக்கலாம் :-)


கருத்துகள்

  1. சுவாமிநாதன்1 மே, 2026 அன்று 11:03 AM

    பலமுறை இந்த பாடலை கேட்டு பார்த்து சிலிர்த்து இருக்கிறேன். பாடலின் ஒவ்வொரு வரியும் இதனை வாழ்ந்து பார்க்க வேண்டும் என ஏக்கம் கொடுக்கிறது என்பது உண்மையே. இன்று பாடல் வரிகளை படித்த பின் மீண்டும் மகிழ்வு, மீண்டும் நெகிழ்வு. 🔥. மிகவும் நன்றி நண்பரே நன்றி🙏💕

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

கல்யாணம்!!!!

குளிரூட்டும் சாதனங்கள் விற்பனையகம் ஒன்றிற்கு சென்றிருந்தோம். இன்முகத்துடன் எங்களை வரவேற்றவர் ஒரு இளைஞர். ஒரு குறிப்பிட்ட சாதனம் பற்றிய எங்களது கேள்விகளுக்கெல்லாம் தெளிவாக நிதானமாக விளக்கம் கொடுத்தார். விலை மட்டும் நாங்கள் எதிர்பார்த்த விலையில் இல்லை என்றார். 'சரி, தொலைபேசி எண் கொடுங்கள். நாளை மீண்டும் வருகிறோம். வரும்போது அழைக்கிறோம்' என்றோம். அவரும் ஒரு எண்ணை தந்தார். அது அவருடையதா அல்லது கடை மேலாளருடையதா என்று கேட்டோம். 'நான்தான் மேலாளர். இது அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டும் எனது எண். அதற்கு பிறகு அழைத்தாலும் கடையில் பணியாளர்கள் யாராவது பேசுவார்கள்' என்றார். 'அது என்ன மூணு நாள் கணக்கு?' என்றோம். அதற்கு அவரது விடையை அப்படியே இங்கே பதிவு செய்கிறேன்: 'நான் வேலைய ரிசைன் பண்ணிட்டேன் சார். இன்னும் மூணு நாளுதான் இங்கே. அதன் பிறகு இந்த ஊர்லயே ஒரு ஐ.டி கோர்ஸ்ல சேர்ந்து ஆறு மாசத்தில coding கத்துகிட்டாகணும் சார். இல்லேன்னா கல்யாணமே ஆவாது சார்!' "சின்ன வயசாதான் தெரியறீங்க, நல்ல வேலைலயும் இருக்கீங்க. இருந்துமா பொண்ணு கிடைக்கல?" 'உங்களுக்கு தெரியாது ச...