இந்திய சினிமாவின் திறமையின் உச்சம், ஏழு ஸ்வரங்கள், ஒன்பது ரஸங்கள், ரெண்டு மிஸ்டேக்குகளால் செதுக்கப்பட்டு... அது ஆச்சி 30 வருசம். ஆனால் இன்றும் காண்பவர் உணர்வோடு ஒன்றி, (பலமுறை) பார்த்தவர் கண்ணிலும் நீர்த்திரையிடும் அற்புதம் எப்படி சாத்தியமாச்சு? நடனத்தை மட்டுமே சுவாசித்து வாழும் வாய்ப்பற்ற ஏழைக்கலைஞன். இந்தக்குசேலனை தேடிவந்த கண்ணனாய் கலையார்வம் ஊறிய மேல்தட்டு பத்திரிகையாளர், கலைஞி, இளைஞி, கணவரிடமிருந்து பிரிந்து தந்தை வீட்டில். சான்ஸ் மீட்டிங்கில் தொடங்கும் இவர்களின் இணைந்த பயணத்தில் நட்பு காதலாய் மாறி மௌனமான நேரங்களாய் நகர்கிறது. நாடறிய அம்பாரியேறும் வாய்ப்பு அவளால் அவனுக்கு கிட்ட, ஆர்ப்பரிக்கும் கற்பனை கைதட்டல்களில் நனைந்து கரங்கள் இணைய நினைக்கும்பொழுது அவனது அம்மா இறந்துபோக... பின் அவளது கணவன் வந்து நிற்க; வந்தவன் இவர்களது உணர்வுகளை மதித்து இணைத்து வைக்க விரும்பினாலும் ஏழைக்கலைஞனுக்கு ஒப்புதலில்லை. தம்பதிகள் வெளிநாட்டுக்கு கிளம்பியபின் இவன் நடனத்தை சரக்கு வழியே மறக்க, நண்பனின் அரவணைப்பில் நோயாளியாய் நாட்கள் கழிய, வயதானபின் மீண்டும் ஒரு முறை சான்ஸ் மீட்டிங், காதல...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!