சாதாரண விதை நிலம் நீங்கி பயணித்து உணவாகி பல்லிடுக்கில் சிக்கியோ சிக்காமலோ மோட்சமடையும்.
அவதார விதையோ கல்லிடுக்கில் விழுந்தாலும் புரட்டிப்போட்டு நிலம் மீட்கும், உயிர் வளர்க்கும், வானுக்கும் மண்ணுக்கும் பாலமாய், பூமிக்கு பலமாய், மரம் செய்யும்! காடு வளர்க்கும்!!
ஒற்றை விதைக்குள் ஓராயிரம், ஈராயிரம், பல்லாயிரம் பூ காய் கனி விதை... எண்ணுவதற்கு காலத்தினால்கூட இயலாதுபோகும்.
காலமற்ற வெளியிலும் விதையொன்று எங்கேனும் உறங்கக்கூடும், விழிக்கக்கூடும். விதையின் இருப்பு வரை வாழ்வும் இருக்கும்.
ஆடி ஆறடிக்குள் முடங்குவோர் ஆடாமல் கற்கவேண்டியது விதையிடம் ஏராளம்.
கற்போமே விதையளவேனும்... விதையிடமேனும்...
சுவையுடனும் பாெருளுடனும் உள்ளது - உறங்கிக் கிடந்த விதை விழித்தெழுந்தது பாேல...மாயா ஜாலம் செய்வதைப் பாேல.
பதிலளிநீக்கு