முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் விழித்திரையில் - 4. ஏழு ஸ்வரம், நவரஸம், ரெண்டு மிஸ்டேக்!


இந்திய சினிமாவின் திறமையின் உச்சம், ஏழு ஸ்வரங்கள், ஒன்பது ரஸங்கள், ரெண்டு மிஸ்டேக்குகளால் செதுக்கப்பட்டு... அது ஆச்சி 30 வருசம். ஆனால் இன்றும் காண்பவர் உணர்வோடு ஒன்றி, (பலமுறை) பார்த்தவர் கண்ணிலும் நீர்த்திரையிடும் அற்புதம் எப்படி சாத்தியமாச்சு?

நடனத்தை மட்டுமே சுவாசித்து வாழும் வாய்ப்பற்ற ஏழைக்கலைஞன். இந்தக்குசேலனை தேடிவந்த கண்ணனாய் கலையார்வம் ஊறிய மேல்தட்டு பத்திரிகையாளர், கலைஞி, இளைஞி, கணவரிடமிருந்து பிரிந்து தந்தை வீட்டில். சான்ஸ் மீட்டிங்கில் தொடங்கும் இவர்களின் இணைந்த பயணத்தில் நட்பு காதலாய் மாறி மௌனமான நேரங்களாய் நகர்கிறது. 

நாடறிய அம்பாரியேறும் வாய்ப்பு அவளால் அவனுக்கு கிட்ட, ஆர்ப்பரிக்கும் கற்பனை கைதட்டல்களில் நனைந்து கரங்கள் இணைய நினைக்கும்பொழுது அவனது அம்மா இறந்துபோக... பின் அவளது கணவன் வந்து நிற்க; வந்தவன் இவர்களது உணர்வுகளை மதித்து இணைத்து வைக்க விரும்பினாலும் ஏழைக்கலைஞனுக்கு ஒப்புதலில்லை. தம்பதிகள் வெளிநாட்டுக்கு கிளம்பியபின் இவன் நடனத்தை சரக்கு வழியே மறக்க, நண்பனின் அரவணைப்பில் நோயாளியாய் நாட்கள் கழிய, வயதானபின் மீண்டும் ஒரு முறை சான்ஸ் மீட்டிங், காதலியின் 'நாட்டிய மயூரி' மகளுடன். அதன்பின் (அதன் முன்னும்தான்!) நிகழ்வதெல்லாம் glorious cinematic brilliance!


ஸ்வரம் 1 : விஸ்வநாதம்!
கலைப்படங்களா கமர்சியல் படங்களா போன்ற விவாதங்களை உடைத்து, கலையைப்படமாக்கி கமர்ஷியல் ஹிட்டாக்கிய இவரின் beautiful vision and flawless execution... real diamond in our cinematic sky.

பாலச்சந்தரின் மாணவனை இவர் இந்தப்படத்தில் பயன்படுத்தியது போல் பாலச்சந்தர் கூட பயன்படுத்தியதில்லை! 


ஸ்வரம் 2 : ஜெயப்ரதா.
மாதவியை இன்று முதல்முதலாய் பார்ப்பவர் மனதிலும் மரியாதை தோன்றும், காதலிக்கவும் தோன்றும்!

ஆறாம் ஸ்வரத்தின் (கமல்) முதல் ஸ்வரமாய் இருந்த பருவத்தில் கடத்தும் உணர்வுகள் வேறு, அதுவே அபஸ்வரமாய் அழிவின் விளிம்பில் கிடக்கையிலும் இழக்க மனமின்றி நடத்தும் போராட்டத்தில் கடத்தும் உணர்வுகள் வேறு... பார்ப்பவர் மனம் கரைவது மட்டுமே பொது. 

'உனக்கும் அவனுக்கும் என்ன உறவு?' என்ற மகளின் கேள்விக்கு அவர் காட்டும் reaction... Priceless!

'இவர்கூட பெரிய கலைஞர்தாங்க' என்ற பகிர்தலில் வழியும் வாத்சல்யம், 

வேதம் அணுவிலும் ஒரு நாதமென ஒத்திசையும் கவலை தோய்ந்த உணர்வுகள்... 

நாதவிநோதங்களில் நாட்டியக்காரனின் நாட்டியமாகவே மாறி வெளிப்படுத்தும் மகிழ்ச்சி... 

நன்றிப்பெருக்கின் முத்தத்தை ஏற்கும் காதலில் கசிந்துருகும் பெண்மை...

மௌனமான நேரம் முடியக்கூடாதே, இவர்கள் இன்னொரு படம் செய்யவேண்டாமே என்று காண்பவரை ஏங்கவைக்கும் ஜோடியில் பாதி!


ஸ்வரம் 3 : எஸ். பி். பாலசுப்ரமணியம்.

தகிட ததிமியின் அதிர்வலைகள் இன்றும் கூட தமிழர் காதுகளில் தனியாட்சி! 

இந்தப்படத்தில் இவர் தொட்ட உச்சம், வேதம் அணுவிலும் ஒரு நாதம்; ஒரு ஒப்பற்ற கலைஞனின் வித்தை கூடு விட்டு கூடு பாய்வதை, கூடு நீங்கி விடைபெறுவதை, தன் குரலின் மூலம் இன்னொரு பரிமாணத்திற்கு இட்டுச்சென்றவர்!


ஸ்வரம் 4 : வைரமுத்து.

நடராஜன் பாதத்தில் தலை சாயுமோ? என் கண்ணில் கண்ணீரும் கரை மீறுமோ?

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே, அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும் வீடுபேறு தருமே என இவர் மனதில் கண்டதை வார்த்தையில் வடித்து அதன் தன்மை குறையாமல் கேட்பவர், பார்ப்பவர், நடிப்பவர், இயக்கியவர் அனைவருக்கும் ஒருமித்த புரிதலை, காட்சியை உருவாக்கிய அற்புத பாடல் வரிகள்...

உலக வாழ்க்கை நடனம், நீ ஒப்புக்கொண்ட பயணம்...

வான்போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே!


ஸ்வரம் 5 : சரத்பாபு.

தமிழ் திரையுலகின் ஒரிஜினல் நண்பேண்டா!

தோழனைக்காணாது தேடி, பாட்டிலுடன் கண்டதும் விசனப்பட்டு, 'கலையாத நினைவு நான்' என்ற தன் கவிதையை நண்பன் உணர்வுபூர்வமாய் பாட, நெகிழ்ந்து தோள் கொடுத்து...

நண்பனின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும், பின்னடைவிலும், மகிழ்விலும், துக்கத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் நட்பை பார்ப்பவருள்ளும் கடத்திய செப்படி வித்தைக்காரன்!

வீட்டு ஓனர் பெண்ணுடன் ரொமான்சிலும் என்ன ஒரு கண்ணியம், என்ன ஒரு யதார்த்தம்!


ஸ்வரம் 6 : கமல் ஹாசன்.

உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே...

பரதம் முதல் குச்சிப்புடி வரை ஆடியது இவர் பாதங்கள் மட்டுமல்ல நம் உணர்வுகளும் சேர்ந்தேதான். தகிட ததிமி யில் சரக்கை தீர்த்தமாய் பாவித்து உடையில் தடவி இரு கரம் விரித்து ஒற்றைக்கம்பியின்மேல், தள்ளாடும் கால்களுடன், நடுக்கிணற்றின் மேல் நம் நெஞ்சம் பதைக்க (சினிமா என்பதை மறக்கவைத்து)...

டில்லி தேசிய கலை நிகழ்ச்சியின் அழைப்பிதழில் தன் படம் கண்டு கலங்கி நட்பின் கரம் பிடித்து உணர்வுப்பெருக்கில் முத்தம் விதைத்த போது நம் நெஞ்சமும் காதலில் கசிந்துருக (சினிமா என்பதை மறக்கவைத்து)...



இது மௌனமான நேரம் என ஆன்மாவின் ராகத்தினை மௌனமாய் விழி வழியே கடத்தியபடியே நகரும் இந்தப்பாடல் களம்,  ஜோடிப்பொருத்தம் திருஷ்டி கேட்கும்!


அம்மாவுக்காக திருமண மண்டப சமையல்கட்டில் such a graceful dance...

ஷைலஜா யாரென்று தெரிந்தபின் ஷைலு என்று அவர் refer செய்யும்போதெல்லாம் அந்த உச்சரிப்பில் ததும்பும் அன்பு...

மருத்துவமனையில் தன்னைப்பார்க்க 'சுய ரூபத்துடன்' வரும் மாதவியைப்பார்த்ததும் தொடங்கும் சிறிய flashback realization இன் முடிவில் அவர் வாயிலிருந்து வெளிப்படும் 'மாதவீ...' என்ற ஒற்றைச்சொல் கடத்தும் ஓராயிரம் உணர்வுகள்... - அசுர நடிப்பு, உழைப்பு!

நண்பனுடனான ஆத்மார்த்த நட்பை வெளிப்படுத்தும் தருணங்கள்... அதிர்ஷ்டமற்றவன் என மனமுடையும் தருணங்கள், புதிய நடனம் கற்கும் விருப்பத்தை மொழியறியா மாணவியுடன் நடனத்தின் வழியே கடத்துவதும், குரு கிடைத்த மகிழ்வை நண்பனுக்கு நடன பாவங்கள் வழியே புரியவைத்து 'வழியனுப்பும் உடலசைவு' - மரணிக்கப்போகும் அம்மாவிடம் தான் மறுநாள் ஆடவிருக்கும் நடனத்தை அறங்கேற்றும் உணர்ச்சிக்குவியல்... - ஹையோ! எந்து ஒரு டேலன்ட்!!!!!!

தான் கற்ற வித்தை அனைத்தையும் மாணவிக்கு வெற்றிகரமாய் கடத்திய மகிழ்வுடன், அவள் வழியே தன் கலை நீளும் என்பதை உறுதியாய் உணர்ந்த நொடியில் அதை தன் இணையமுடியாத இணையிடம் கடத்தும் அந்த ஒற்றைப்பார்வை...



ஸ்வரம் 7 : ஏழு ஸ்வரம். இளையராஜா.

சாதாரண நிகழ்வுகளோ, ஆன்மாவில் சென்று தைக்கும் moments ஓ - அவற்றை இன்னும் பல பரிமாணங்களுக்கு உயர்த்தி நமை கதை மாந்தர்களுக்கிடையே கொண்டு சேர்க்கும் immersive music!!! இன்றும் கூட 'இது மௌனமான நேரம்', 'தகிட ததிமி', 'வேதம், அணுவிலும் ஒரு நாதம்' என கேட்கும் பாடல்களின் உணர்வுச்சூழலை படம் பார்த்திராதவர்க்கும் கடத்தும் magician! 

இந்தப்படத்தின் பிண்ணனி இசையும் முன்னணி இசையே என ஆறு ஸ்வரங்களையும் நம் ஆன்மாவுக்குள் கடத்திய ஏழாம் ஸ்வரக்காரர், ஏழு ஸ்வரக்காரர்... ஓரு முறை கேட்டபின் என்று கேட்டாலும், எத்தனை நாள் கழித்து கேட்டாலும் நம் மனத்திரையில் காட்சியாய் விரியும் இவரது இசை!


நவ ரஸம் : 

யதோ ஹஸ்தஸ் ததோ த்ருஷ்டி,
யதோ த்ருஷ்டி ததோ மன:
யதோ மனஸ் ததோ பாவோ,
யதோ பாவஸ் ததோ ரஸ:

பொருள்:–அபிநயம் பிடிக்கும் கைகளை கண்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கண் பார்வை எங்கே இருக்கிறதோ அதில் மனம் லயிக்க வேண்டும். அப்படி மனம் லயிக்கும் போது முகத்தில் பாவம் (சரியான உணர்ச்சியை வெளிப்படுத்தும் பாவம்) தோன்றும். அதன் வழியே ரஸம் ( நவரஸ உணர்ச்சிகள் ) அமையும்.

சலங்கை ஒலி, சாகர சங்கமம்...கமல் என்ற ஒற்றைப்புள்ளியில் நவரஸங்களின் சங்கமம், அற்புதமான காணனுபவம்... நம் வாழ்நாள் முழுதும் தொடரும்!


ரெண்டு மிஸ்டேக்:

அந்த ரெண்டு மிஸ்டேக், அது நிகழும் moments... his acting... Pure bliss... படம் பாருங்கள், புரியும்!

என் விழித்திரையில் - 3 ஆனை மேல் அம்பாரி!

கருத்துகள்

  1. அற்புதமான புகழாஞ்சலி. மீண்டும் ஒரு முறை திரைப்படம் பார்த்த சிலிர்ப்பை அனுபவித்தேன். நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...