முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உயிரின் விலை 250 ரூபாய் மட்டுமே

இன்டர்நெட்டில் அரசு அலுவலர்கள் ஏராளமாய் இருக்கலாம். அவர்கள் படித்து மனது வைத்தால் இந்த பதிவு சேர வேண்டிய துறைகளுக்கு சென்று சேரும் என்ற நம்பிக்கையால் உந்தப்பட்டு இப்பதிவு... அரை அடி விட்டம், வெவ்வேறு ஆழங்களில் நாடு முழுதும் குழந்தைகளுக்காக காத்திருக்கின்றன புதைகுழிகள்.  ஆழ்துளை கிணறுகள் இரு வகை. வேளாண் நிலங்களின் நீர்த்தேவைகளுக்காக தோண்டப்படுபவை ஒரு வகை. இதற்கு பல மாநிலங்களில் அனுமதி தேவை இல்லை. குடி நீர் தேவையை தணிக்க என்ற போர்வையில் நீர் வணிகத்திற்காக அனுமதியின்றி கள்ளத்தனமாக தோண்டப்படுபவை இன்னொரு வகை. தோண்டிய ஆழத்தில் நீர் வற்றிப்போனால் வேறு இடத்தில் உடனே இன்னொரு குழி. நீரின்றி அமையாது உலகு அல்லவா! வேளாண் நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்ட அனுமதி கட்டாயமாக்கப்பட்டு, தோண்டிய ஆழ்துளை கிணறுகள் அடையாளமிடப்பட்டு மின் இணைப்பு எண்ணோடு அரசு நிலப்பதிவேடுகளில் பதியப்பட்டு, வில்லங்க சான்றிதழில் ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் உள்ளதா இல்லையா? இல்லையென்றால் மூடி போடப்பட்டுள்ளதா இல்லையா? (மூடியின் விலை 250 ரூபாயில் தொடங்குகிறது) என பதியப்பட்டு, பயன்பாட்டில் இல்லா...

மூன்றாவது வகை கனவு / Dream of a third kind

கனவு காண யாருக்குத்தான் விருப்பமில்லை?! உறக்கத்தில் வருவது ஒரு வகை என்றால் உறங்கவிடாதது ஒரு வகை. இவை இரண்டும் தவிர இன்னொரு வகை கனவும் உண்டு. நாம் கண் "திறந்து" மட்டுமே காணக்கூடிய கனவு, அது மூன்றாம் வகை. திரைப்படங்கள் கூட கண்திறந்து காணக்கூடிய கனவுதானே என்கிறீர்களா?  இல்லை! கனவின் சிறப்பே பொருள் விளங்க  முடியாத / விளக்க முடியாத, உணரமட்டுமே முடியும் அதன் தனித்தன்மையே. It is a fleeting state which can only be experienced but never be revisited in its full vividness, lucidity and intensity. We can never feel them again in their entirity just by jogging our memory dial! A movie can be retold frame by frame but not these; not the ones you see here.  You can only cherish the feel but never express it in its true form with anyone else... Funny thing is, these dreams are just hanging around us, lying around us, flying around us during all our wakeful moments too but are we "looking"?

இந்த மழை...நிற்காது!

பார்வையற்ற இசைக்கலைஞன், இளைஞன். பகல் இரவு பேதமின்றி அளந்து நடந்து, வாழ்ந்து, வயலின் இசைப்பவன். அவனது ஆப்த நண்பனின் அன்பான கவனிப்பில் குறையற்ற வாழ்வு வாழ்பவன். கதை எழுதும் ஆவலில் நாயகி, யுவதி. மோதலில் தொடங்கி காதலாகி கசிந்துருகி...வீட்டின் எதிர்ப்பை முறியடித்து காதலனை கைப்பிடிக்கிறாளா இல்லையா என்பதை, அவளது பாசத்தாத்தனோடு முடிவுசெய்கிறாள். கதை அவ்வளவே.  அதை படமாக்கிய விதம், கவிதை... அற்புதம். இசை என்பது அமைதியும்தான் என்பதை 80களிலேயே இளையராஜா அழுத்தமாய் பதிந்த படம். பல காட்சிகளில் நிமிடங்கள் கணக்கில் இயல்பான சூழல் சத்தங்களே இசையாக மாறும் விந்தையை இங்கேயே தொடங்கிவிட்டார். அந்தி மழையில் நனைந்துகொண்டே இப்படப்பாடல்களை ரசிப்பது, இன்றும் தொடர்கிறது. பின்னொரு நாளில் கமல் சொன்னதாய் படித்தது இது: 'படம் ஓடலைங்கிற வருத்தம் இருந்தது. எங்கெங்கே தப்பு பண்ணிருக்கேன்னு நல்லாவே தெரியுது. இன்னுமொருமுறை எடுத்தால் வேற மாதிரி எடுக்கலாம்'. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தில் குறைவதில்லை, இல்லவே இல்லை. Raja Paarvai is a certified cult classic! ...

Photo post: மழை திவசத்தே களி!

பாண்டியம்மா ரெஃ்பரீய அட்ச்சி தூக்கி!!

பாண்டியம்மா ரெஃபரீய அட்ச்சி தூக்கி!!!  பிகிலு பறக்கும் என நினைத்து தியேட்டருக்குள் நுழைந்ததும் எதுவோ வித்தியாசமாயிருக்கேன்னு உணர்வு சொல்ல, திரும்பி நோட்டம் விட்டேன்; அங்கங்கே காலி இருக்கைகள்!  லேட்டா வருவாங்க போல என்று நினைத்துக்கொண்டேன். யாரும் வரவில்லை. தளபதியின் பிரம்மாண்டமான படம், ஏ ஆர்.ஆரின் இசை, அட்லீயின் டைரக்‌ஷன். மூன்றாம் நாளே காலி இருக்கைகள்... விளையாட்டு பற்றிய நல்ல படம். விஜய்க்குள் ஒளிந்திருக்கும் நல்ல நடிப்பை வெளிக்கொண்டுவந்ததற்கு அட்லீக்கு தாராளமாய் நன்றி சொல்லலாம். மாணிக் பாஷாவுக்கும் வேலு நாயக்கருக்குக்கும் உள்ள இடைவெளியில் ராயப்பன் இஸ் எ டவரிங் பெர்ஃபார்மன்ஸ் என் இனிய தமிழ் மக்களே! நயன்தாரா, அழகாய் இருக்கிறார், வயது ஏறுவது தெரிந்தாலும். இந்திப்பட உலகை தன் முதல் படத்திலேயே திரும்பிப்பார்க்கவைத்து உச்சம் தொட்ட நடிகர் ஒருவரை பம்மாத்து வில்லனாக்கியது, காக்கி உடைக்குள் ரவுடிகள், மாணவர் அடையாள அட்டைகளோடு ரவுடிகள் என வசனங்களால் வன்மம் சேர்த்த காலம் போய் இவற்றை காட்சிப்படுத்தியது, லாஜிக் ஓட்டைகள் நமது பெருநகர மைய சாலையி...

எண்ணெய்க்கனவு...

வழுக்கைத்தலைகளில் முடி வளர அமேசான் காடுகளிலிருந்து அரியவகை மூலிகை எண்ணெய்களை கொண்டுவந்து கூவிக்கூவி விற்கிறார்கள் பேராசைப்பெருவணிக நிறுவனங்கள், ஊடகங்கள் வழியே உலகெங்கும். இவர்களுக்காக அரும்பாடுபட்டு அமேசான் காடுகளில் பயிர் வளர்த்த இயற்கை இன்று அங்கு தன் மயிரிழந்து வழுக்கையாகி நிற்பதுகூட இவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. இழந்த மயிரை திரும்ப வளர்க்க இந்தக்காடுகள் கூட அந்த மூலிகை எண்ணெய்களை வாங்கித்தேய்த்தாகவேண்டும்போல. தேங்காய் எண்ணெய் என்றால் என்ன என்றே தெரியாது ஒரு சிக்குப்பிடித்த சமூகமே கண்ட கண்ட வேதிப்பொருட்களால் ஆன, தலைமயிரில் ஒட்டாத எண்ணெய், கையில் பிசுக்கேற்றாத எண்ணெய், குளிர்காலத்தில் உறையாத எண்ணெய், எண்ணெய் வாசனையற்ற எண்ணெய் என எண்ணெயே இல்லாத எண்ணைகளை தேங்காய் எண்ணெய் என்ற போர்வையில் வெளிச்சம்போட்டுக்காட்டும் பெருவணிகத்தை நம்பி வாங்கி தலையில் தேய்த்து, இருந்ததும் உருக்குலைந்துபோய், ஈறும் பேனும் விளையாடும் தலைமயிரை மேலும் வேதிப்பொருட்களாலான ஷாம்ப்பூ போட்டு கண்டிஷனிங் செய்து தலை குளித்து கண்ணாடியில் பார்த்தால் மயிரே போச்சி, இட்ஸ் கான், காயிந்தே என பல மொழிகளில் புலம்ப...

கனவுக்கும் நனவுக்கும் அப்பால்...

மனதில் வேண்டுதலையும் முதுகில் மரக்கன்றுகளையும்  சுமந்து சுமந்து கனவையும் நனவையும் ஊடறுக்கும் சாலைகளில்  கனவையும் நனவையும் ஊடறுக்கும் சாலைகளில் அலைந்து திரிகின்றேன் வருடங்கள் எத்தனை (என) மறந்த பின்பும். இக்கவிதையை வாசிப்பவர்கள் ஒன்றை மட்டும்  நினைவிலிறுத்த வேண்டுகிறேன்: உங்கள் வருங்கால  சந்ததியின் காதுகளில்  சிட்டுக்குருவிகளின் சிறகசைப்பு சுமந்துவரும் சிறுகதையொன்று... வெகுதொலைவிலுள்ள ஒரு நிலப்பரப்பில், இயற்கைக்கு (வெகு) அருகில்  இருக்கும் பெரும்பரப்பில், கனவுகளெல்லாம் நனவாகும் அந்நிலப்பரப்பில் அவை கண்டு களித்த  கதையாகவும் இருக்கலாம், அது இதுவாகவுமிருக்கலாம்: "மரமாக மாறிப்போக தவமாய் தவமிருந்த  மனிதன் ஒருவன் இந்த நிலப்பரப்பில் அன்று இருந்தான்"...