பகல் இரவு பேதமின்றி அளந்து நடந்து, வாழ்ந்து, வயலின் இசைப்பவன்.
அவனது ஆப்த நண்பனின் அன்பான கவனிப்பில் குறையற்ற வாழ்வு வாழ்பவன்.
கதை எழுதும் ஆவலில் நாயகி, யுவதி.
மோதலில் தொடங்கி காதலாகி கசிந்துருகி...வீட்டின் எதிர்ப்பை முறியடித்து காதலனை கைப்பிடிக்கிறாளா இல்லையா என்பதை, அவளது பாசத்தாத்தனோடு முடிவுசெய்கிறாள்.
கதை அவ்வளவே.
அதை படமாக்கிய விதம், கவிதை... அற்புதம்.
இசை என்பது அமைதியும்தான் என்பதை 80களிலேயே இளையராஜா அழுத்தமாய் பதிந்த படம். பல காட்சிகளில் நிமிடங்கள் கணக்கில் இயல்பான சூழல் சத்தங்களே இசையாக மாறும் விந்தையை இங்கேயே தொடங்கிவிட்டார்.
அந்தி மழையில் நனைந்துகொண்டே இப்படப்பாடல்களை ரசிப்பது, இன்றும் தொடர்கிறது.
பின்னொரு நாளில் கமல் சொன்னதாய் படித்தது இது: 'படம் ஓடலைங்கிற வருத்தம் இருந்தது. எங்கெங்கே தப்பு பண்ணிருக்கேன்னு நல்லாவே தெரியுது. இன்னுமொருமுறை எடுத்தால் வேற மாதிரி எடுக்கலாம்'.
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தில் குறைவதில்லை, இல்லவே இல்லை. Raja Paarvai is a certified cult classic!
"நான் என்ன செரைக்கிறதுக்கா இருக்கேன்? ஆமாம், அதுக்கும்தான்!!" என ஆப்த நண்பன் ஒய்.ஜி - தொட்ட உயரம், உயரம்!
பல காட்சிகள் என்றும் மனதை விட்டு அகலாது:
துவக்கத்தில் மௌனப்படமாய் ஓடும் கௌபாய் பஸ் சேஸ், அதே சேஸ்க்கு பிண்ணனி இசை கோர்க்கையில் நம்முள் எழும் உணர்வுகள்...
நாவித வேலை செய்யும் நண்பன், 'இப்ப என்னை எடுத்துக்கயேன், நான் என்ன செரைக்கிறதுக்கா இருக்கேன்?...ஆமாம், அதுக்கும்தான்!' மொமெண்ட்...
அழகோ அழகு தேவதை பாடலின் சூழல், நாயகன் நாயகி கெமிஸ்ட்ரி...
சூரிய ஒளியில் குளித்துக்கொண்டு ஒற்றை வயனில் இசையை கசியவிட்டபடி நாயகன் பால்கனியில் French door பிண்ணனியில் நிற்கும் காட்சி...
அவனது சாலையில் நாயகி, வீடு தேடி வருகையில் ஒளிக்கும் இயல்பான சூழல் ஓசைகள்...
கண்ணற்ற பதினைந்து வயது 'மணமக'ளுக்கும் நாயகனுக்கும் நடக்கும் பரிதாப உரையாடல்...
சித்திக்கு வயலின் இசைத்தே பதில் அளிக்கும் நிகழ்வு...
பார்வையற்ற நாயகி கைத்தடியூன்றி நடக்க, நாயகன் அவளை கைப்பிடித்து வழிகாட்டி அழைத்துச்செல்லும் பூங்கா காட்சி, வண்ணங்கள் வழியும் frames...
நாயகன் நம்முள் கடத்தும் blind innocence...
பார்வை தெரியும் நாயகன் சிறுவயதில் தகப்பனுடன் விளையாடுகையில் தகப்பன் பாதி விளையாட்டில் மாரடைத்து மாள, கயிற்றில் தொங்கியவண்ணம் சிறுவனின் கையறு நிலை கூக்குரல்...
இசை... இசை... இசை...
வைரமுத்துவின் கவிதை மழை...
தன் நறுவனத்தின் முதல் படத்துக்கு பாருண் முக்கர்ஜி என்ற பெங்காலி ஒளிப்பதிவாளரை கமல் எப்படி தேடிப்பிடித்தார் என யாராவது அவரிடம் கேட்பார்களா என ஆவலோடு காத்திருக்கிறேன் :-)
கருத்துகள்
கருத்துரையிடுக