மலை முகடு தாண்டி தீற்றலாய் வானம். நீலம். காலடி நடந்த தடமெங்கும் சூழும் மரங்களின் பச்சை. தொடுவானில் தொலையப்போகும் சூரியப்பந்தின் அந்தி வெளிச்சம் சிவப்பு. செங்குழம்பு தீயாகி சுற்றியுள்ள பச்சையெல்லாம் நீலமெல்லாம் சிவப்பின் சாயல். சிவப்பை மெள்ள விழுங்கும் நீலம். நீலத்தை கவ்வும் இருள். இருளில் ஒளி உமிழும் ஆயிரமாயிரம் கண்கள், சுடராடும் கண்கள். குளிர் காற்று போர்வையாய் தழுவ, தாலாட்டும் சில்வண்டின் ஓங்காரம். ஏகாந்தம். ஏகத்தின் அந்தம். நாளை மற்றொரு நாளே, இன்றைய இரவு அப்படியல்ல!
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!