வெயிலோடு_உறவாடி
ராமநாதபுரம் - தண்ணியில்லாக்காடு.
அரை டவுசர் டீம் சேர்த்து நெசமான கிரிக்கெட் பேட்டு, நெசமான பால் தேத்திட்டு காலைல ஒம்போது மணிக்கு வீடு வீடா ப்ளேயர் புடிச்சி, டீம் செட் பண்ணி, அப்பால கண்ணுல படுற மொத எதிரி டீம (ப்ளேயர) உசுப்பேத்தி, 'பத்து மணிக்கு அந்த ஊருணில மேட்ச், மோதிப்பாக்கலாமா?'.
அந்த ப்ளேயர் ஒடனே ரோசம் வந்து அடுத்த ஒரு மணி நேரத்தில டீம் தேத்தி, அம்ப்பயர், ஸ்கோரர் எல்லாம் ரெடி பண்ணி...
அதென்ன மாயமோ தெரில அந்த கத்திரி வெயிலோட பாச்சா எல்லாம் வெளையாடி முடிக்கிற வரைக்கும் நம்மகிட்ட பலிக்காது.
பல முறை ஸ்கோரர் கைங்கரியத்தில எதிர் டீம் கெலிக்கிறதெல்லாம் சகஜம்.
இது மேட்டரே இல்லை.
மேட்டரு மாட்ச் முடிஞ்சபின்னதான் தொடங்கும்.
அதுவரை நேர நடந்துகிட்டு இருந்த பசங்களெல்லாம் பாம்பு டான்சு ஆடுற மாதிரி நெளிய ஆரம்பிப்போம். 'டேய், ஒனக்குமாடா?' என நலம் விசாரித்துக்கொண்டே வீடு நோக்கி ஓடுவோம். போகும் வழியில் தெரு கோவில் அருகில் கடை வைத்திருப்பவர் எங்களை கண்டதும் குஷியாகி விடுவார், 'இன்னைக்கு வியாபாரம் ஜோரு' என. தலைக்கு இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கிக்கொண்டு நெளிந்தவண்ணம் வீடு நோக்கி ஓடுவோம்.
எங்கள் வீட்டில் அம்மா அல்லது அக்கா, எங்களை கண்டதுமே எரிச்சலாகி, 'தொடப்பத்தாலயே ரெண்டு போடனும். நாளப்பாத்தாப்புல இதே ரோதன. எத்தன வாட்டி சொன்னாலும் கேக்க மாட்றானுங்களே!' என தலையில் அடித்துக்கொண்டு எங்களிடம் இருந்து எலுமிச்சையை பிடுங்கிக்கொண்டு அடுக்களைக்குள் மறைந்ததும், கிணற்றில் மளமளன்னு தண்ணிய எறைச்சி தொட்டிய ரொப்பி, உள்ள டைவ் அடிச்சி பதுங்கிடுவோம்.
அடுப்படிலேந்து சோடா உப்பு போட்ட எலுமிச்சை சாறு நீரை தேவதைபோல் ஏந்தி வரும் அக்கா, 'கருமம் புடிச்சவனுங்களே! எப்படிடா அதிலயே போறீங்க?!' என தலையில் அடித்துக்கொண்டே தந்து மறைந்ததும் அவசர அவசரமா குடிச்சிட்டு அதோட எஃபக்ட் தெரியறவரைக்கும் தண்ணிக்குள்ளயே குந்திகினு...
பாஸ், நீர்க்கடுப்போட கொடும உணர்ந்தவங்கதான் அது ரிலீவ் ஆகும்போது ஏற்படுகிற கடவுள் அனுபவத்த உணரமுடியும்!
சோடா உப்பு எலுமிச்ச சூசு அத சரி பண்ணுற வரையில தொட்டிக்குள்ள கடுமையான எரிச்சலோட சொட்டு சொட்டா... நீர்க்கடுப்பு ஒண்ணுக்கில ஒன்னுது என்ன என்னுது என்னன்னு... வெயில் எங்களோட விளையாடியது அந்தக்காலம்!
(நாங்கள் தாவிக்குதித்து வெளியேறியபின் அம்மாவும் அக்காவும் அரைநாள் அந்த தொட்டியை கழுவுவார்கள். அடுத்த நாள் மதியம் மீண்டும் எலுமிச்சம்பழத்துடன் எங்களை காண்கையில் அவர்களுக்கு வரும் கோபத்தின்முன் கண்ணகி எம்மாத்திரம்! :-)
கருத்துகள்
கருத்துரையிடுக