முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கோடை ஷ்பெசல் : பாம்பு டான்சு!

வெயிலோடு_உறவாடி ராமநாதபுரம் - தண்ணியில்லாக்காடு. அரை டவுசர் டீம் சேர்த்து நெசமான கிரிக்கெட் பேட்டு, நெசமான பால் தேத்திட்டு காலைல ஒம்போது மணிக்கு வீடு வீடா ப்ளேயர் புடிச்சி, டீம் செட் பண்ணி, அப்பால கண்ணுல படுற மொத எதிரி டீம (ப்ளேயர) உசுப்பேத்தி, 'பத்து மணிக்கு அந்த ஊருணில மேட்ச், மோதிப்பாக்கலாமா?'. அந்த ப்ளேயர் ஒடனே ரோசம் வந்து அடுத்த ஒரு மணி நேரத்தில டீம் தேத்தி, அம்ப்பயர், ஸ்கோரர் எல்லாம் ரெடி பண்ணி... அதென்ன மாயமோ தெரில அந்த கத்திரி வெயிலோட பாச்சா எல்லாம் வெளையாடி முடிக்கிற வரைக்கும் நம்மகிட்ட பலிக்காது. பல முறை ஸ்கோரர் கைங்கரியத்தில எதிர் டீம் கெலிக்கிறதெல்லாம் சகஜம். இது மேட்டரே இல்லை. மேட்டரு மாட்ச் முடிஞ்சபின்னதான் தொடங்கும்.  அதுவரை நேர நடந்துகிட்டு இருந்த பசங்களெல்லாம் பாம்பு டான்சு ஆடுற மாதிரி நெளிய ஆரம்பிப்போம். 'டேய், ஒனக்குமாடா?' என நலம் விசாரித்துக்கொண்டே வீடு நோக்கி ஓடுவோம். போகும் வழியில் தெரு கோவில் அருகில் கடை வைத்திருப்பவர் எங்களை கண்டதும் குஷியாகி விடுவார், 'இன்னைக்கு வியாபாரம் ஜோரு' என. தலைக்கு இரண்டு எலுமிச...

குப்பையிலே ஒரு விதை

They add beauty to even a waste bin! குப்பைக்கூடைக்கும் அழகு சேர்ப்பவை இயற்கையில் விளைந்தவை. What about us who are rapidly coverting Giving Earth into a Giant Waste Bin?! இந்த உலகை பெரிய குப்பைத்தொட்டியாக்கிக்கொண்டிருக்கும் நாமும் இயற்கையில் விளைந்ததுதானே. நாம் மட்டும் ஏன் இப்படி? Planting is the only way Up, from the pile of trash we heap on ourselves, to our salvation... விதையொன்று ஊன்றி, அது செடியாய், கொடியாய், மரமாய் வளர வளர அதை இறுகப்பற்றிக்கொண்டால் மட்டுமே தப்பிக்க இயலும்... அவை நாம் சொர்க்கம் செல்லும் பாலமாகவும் அமையும்!

எச்சம்

எச்சம் - என்ன ஒரு தமிழ் சொல்! உண்டது போக மீவது மிச்சம் என்றால், உண்டது செரித்தது போக வெளித்தள்ளுவது எச்சம். நம் உடல், தேவையில்லை என வெளித்தள்ளும் எச்சமும் உணவே, வேறு யாருக்கோ, பூமியில். பறவையின் எச்சம் கானகமாக விரியும். கானக எச்சம் பூவாய், காயாய், கனியாய் நமை வந்தடைய அவற்றை உண்டு நம் உடல் வெளித்தள்ளுவதும் எச்சமே. மனிதனும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலத்தில் அவனது எச்சமும் கானகமானது பழங்கதை. இலக்கணத்தில் எச்சம் என்பது முற்றுப்பெறாத சொல்லை குறிக்கிறது. ஒன்பது வாசலிட்டு என்புதோல் போர்த்த உடம்பும் ஒரு உயிரெச்சமும் மெய்யெச்சமும் சேர்ந்து செய்த உயிர் மெய் எச்சம்தானே! தமிழ்க்கடலின் சுவையென்னவோ திகட்டாத இனிப்பு மட்டுமே!

இந்த டீலக்ஸ் சூப்பரு!

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு படம் மட்டுமே தந்து, நீண்ட இடைவெளிக்குப்பின் இரண்டாவது பட டைட்டில் கார்டில் தியாகராஜன் குமாரராஜா பெயர்  போடும்போது தியேட்டர் அதிர உற்சாக குரல் எழுப்பிய இளையவர்கள், பட நாயகர்கள் அனைவருக்கும் அதே மரியாதை தந்து, 'தப்பான கூட்டத்தில படம் பாக்க மாட்டிகிட்டமோ, இந்த ரேஞ்சில கத்தினா ஒன்னுமே புரியாதே...' என்று பயமுறுத்தியவர்கள், அடுத்த சில நிமிடங்களில் கப் சிப்! அப்படி என்னதான் நடந்தது? கண் முன்னே விரியும் கதைகளும், காட்சிகளும் செய்த வித்தை அது! 'என்னடா நடக்குது இங்கே?! என வியப்போடு நிமிர்ந்து உட்கார்ந்தவர்கள், இடைவேளை வரை வெவ்வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டு படத்தில் மூழ்கியாச்சி! நடைமுறை வாழ்வின் அபத்தங்களை, போலித்தனங்களை, வக்கிரங்களை, நம்பிக்கைகளை, பிம்பங்களை... உடைத்து எறிந்து, அதனுடனே நமது மனக்கட்டமைப்புகளையும் வெடி வைத்து தகர்த்திருக்கிறார். தியாக குமார ராஜா. அவரது பலம், அவற்றை உணர்ந்த நாமும் குதூகலமாய் அந்த உடைப்புக்களை ஏற்றுக்கொண்டு சிரித்தபடியே வெளிவருவதுதான்! A certificate முற்றிலுமாய் பொருந்தக்கூடிய ஒரே இந்திய சி...

ஈதல் இகழ்பட வாழ்தல்...

கொளுத்தும் வெயில். சிவப்பு சிக்னல் மாறக்காத்திருக்கும் நேரம். காரின் கண்ணாடிக்கதவைத்தட்டி தட்டி கை கூப்பி காசு கேட்கும் நடு வயது கடந்த பசித்த மனிதர்... என் ஆடை பைகள் எதிலும் பொடிச்சில்லறை இல்லை என்று உள்மனம் செய்தி வாசிக்க, 'பர்சுல பத்து ரூபா இருக்கலாம்' என புத்தி இன்டிகேட் செய்து, உடனே குழப்பியது 'நம்ம மெனக்கெட்டு பர்ச பாக்கெட்லேந்து உருவி தேடி, பத்து ரூபா நோட்டு இல்லன்னா என்ன பண்றது? எதிர்பார்க்கு அதிகமாகி பின்ன அவரு மனசு நோவுமே...' என் இக்கட்டை மனைவியிடம் சொல்ல, 'என் பர்சுல இருக்கு. எடுத்துத்தரேன்' என அவர் அவசரமாய் முயன்று எடுக்க, சிக்னல் பச்சை காட்ட, பின்னால் கார்கள் ஆரன் நிறுத்தாமல் அடிக்க, நான் அவசரமாய் கண்ணாடியை இறக்கி அவர் கரங்களில் பத்து ரூபாயை திணிக்க... கேட்டாரே ஒரு கேள்வி! 'எய்யா, பசியோட கும்பிட்டு நிக்குற ஆளுக்கு பசி நீக்க ஏதாச்சும் குடுக்க ஒனக்கு தோணல. எங்கம்மா மகமாயி எடுத்துக்குடுத்தா பாத்தியா யோசிக்காம பத்து ரூபாய. அவ நல்லா இருப்பாய்யா!'.... ஒரு நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 'நடு ரோடில சிக்னல்ல வ...

நேத்து...கவிதையில போச்சி யாரும் துணையில்லை...

நேத்து, கவிதையில போச்சி, யாரும் துணையில்லை... நேற்று உலக கவிதைகள் தினமாம்! விழியில் பதிந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு நல்ல எழுத்துக்கு மட்டுமே வாய்க்கும்; கவிதையோ, கதையோ, சொலவடையோ! லொடலொடவென பேசுபவரை பற்றி ஒரு நாட்டுப்புறக்கதை 'ஓலப்பாயில ஒண்ணுக்கிருந்தவன் மாதிரி' எனும்போது, கரிசல் கிராமத்தை கி. ரா வர்ணிக்கையில், 'இரவைப்பொத்தலிட்டன மாடுகளின் சூடான பெருமூச்சு' எனும்போது... கிடைக்கும் வாசிப்பனுபவம், உணர்வனுபவம்... வேற லெவல். நல்ல கவிதைகள், கவிதைகளில் மட்டும் ஒளிந்திருக்கவில்லை :-) குடத்தில் தண்ணீர் தளும்பத்தளும்ப முன்னே நடைபோடும் பெண்ணின் குடத்தில் தளும்பியது மனசு என்ற ஆத்மாநாமின் கவிதை போன்ற இன்னொன்றை இன்றுவரை தேடிக்கொண்டே இருக்கிறேன் தமிழில் (கல்யாண்ஜியின் 'இருந்து என்ன ஆகப்போகிறது?  இறந்துபார்க்கலாம். இறந்து என்ன ஆகப்போகிறது? இருந்து பார்க்கலாம்' is a close second). சிக்கனமான சொற்கட்டமைப்பில் வெடித்துச்சிதறும் உணர்வுகளை குவிப்பது ஒரு சிலருக்கு மட்டுமே வசப்படுகிறது... மானபங்கப்படுத்தப்பட்டு தரையில் அலங்கோலமாய் கிடக்கும்...

வேர்த்திரள்

வேர்த்திரள் காகமொன்று விதை உமிழ்ந்து விதைத்ததிந்த கானகம், வளர்ந்த நாளில் வந்த (பறவைக்)கூட்டம் வாழ்த்திடும், நூறு நூறு நூறு வேர்கள் முளைத்திடும். பறவையோடு சேர்ந்து வந்த வாலிருந்த வானரம், மரமிறங்கி வால்கழற்றி வாள்சுழற்றி மரங்கள் வெட்டும்போதெலாம், வீழ்ந்ததிங்கு அங்குமிங்கும் அங்குமிங்கும் எங்குமெங்கும் கானகம்... வீடிழந்த பறவைக்கூட்டம் விதைசுமந்து வேகமாய், இறகுவீசி காற்றிலேறி கடிதுசென்று தூரமாய், பெரும்பரப்பில் உயி'ரெச்ச'விதைகள் லட்சவிதைகள் தூவுமே. புதிய நிலத்தில் பழைய விதைகள்  புதிய வேர்கள் பதிய பதிய  உயிர் முளைத்து மரங்களிங்கு வளர்ந்திடும், விதையுதிர்த்த பறவைக்கூட்டம் மனமகிழ்ந்து தங்கிடும், மரமறுத்த மனிதக்கூட்டம் மீண்டும் மீண்டும் வெற்றியின்றி முயன்றபோதும் கானகங்கள் நீண்டிடும். வேர்த்திரளின் உயிர்முடிச்சு விதைவயிற்றில் விதைவயிற்றில் புதைந்ததறிந்த மனிதக்கரங்கள் ஆய்வகத்தில் மரபணுக்கள்  வெட்டியொட்டும் அவலம் கண்டும் பதைத்திடாது வேர்த்திரளும்  கனிவுடனே கனிவுடனே மனிதமூச்சு காத்திடும் இலைவழியே காய்வழியே கனிவழியே பகிர்...