குப்ப மேட்டரு! நேற்று நீங்கள் வீட்டினுள் அலறி 'அடித்து' வெளியே எறிந்த உயிரற்ற எலி என்ன ஆயிற்று என்று தெரியுமா? (அடிச்சது யாரு? சிங்கம்ல!!!) குப்பை என்ற சொல், நாகரீக வாழ்வு இந்த உலகுக்கு தந்த புத்தம்புதிய சொல். மீந்ததை (எஞ்சியதை) உண்டு வாழ பல்லுயிர் இருக்கும்வரை அதுவும் உணவாகிக்கொண்டுதானே இருக்கவேண்டும்? எப்படி குப்பையாச்சி? நம் உடலும் உணவே, யாருக்கோ! என்றவகையில்தான் இந்த உலகில் அனைத்து உணவுகளும் படைக்கப்பட்டன, உண்ணப்பட்டன, பன்னெடுங்காலம். வீட்டுக்குப்பின்னால் எருக்குழி (note: குப்பைக்குழி அல்ல!) எடுத்து, வீட்டில் மீந்ததை அதில் சேர்க்க, 'மீந்தது' அனைத்தும் பலகோடி உயிர்களுக்கு உணவாகி, அதன் பின் மீந்தது மீண்டும் பயிருக்கு எருவாகி, இலையாய் காயாய் கனியாய் நமக்கு உணவாகி என இடைவிடாத மறுசுழற்சியில் (recycling). சைக்கிளை உலகம் கண்டுபிடிக்கும் முன்னரே ரீசைக்கிளை வாழ்வியலாக கொண்டவர் நாம். இன்று குப்பையாகிப்போனது நம் வாழ்வு. 'எரும மாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு சொன்னா கேப்பாருக்கு எங்க போச்சி புத்தி?' என்பதும் நம் சொலவடைதான். நாமோ அதையும் தாண...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!