தன் சிறகசைப்பில் புவியை 'சுற்றும்' சிறு பறவை புலம் தேடி (காந்தப்)புலம் உணர்ந்து விரையும் காலம், மனிதர்க்கு தெரியும்.
புலன் மட்டுமே வெளிச்சமிட்டுக்காட்டும் வான் தடத்தில் அவை அறிவு கொண்டு பறப்பதில்லை, உணர்வு கொண்டே...
வழித்தடத்தில் இளைப்பாற, உணவு உண்ண என தடம்நோக்கி நீளும் மரக்கிளைகள் போட்டி போட்டு...
'என்ன கதை புதிதாய்!' என இலைக்காது குவித்து அவை வினவ, பறவை சொல்வதெல்லாம் அழிவின் கதை.
கதை கேட்டு கலங்குவதில்லை மரமெதுவும்!
"அழிப்பவர் அழிக்கட்டும். யாம் பழம் செய்வோம், விதைகள் செய்வோம். நீ உண்ண முடிந்தவரை உண்டு வயிற்றில் சுமக்க முடிந்த அளவு சுமந்து செல்; காற்றும் விதை பரப்பும் முடிந்தவரை.
மனிதரற்ற இடங்களில் எச்சம் வழியே எமை பரப்பு. அங்கும் அவர் கூட்டம் பெருகினால்... முடிந்தவரை யுத்தம் தவிர். தவிர்க்க இயலாவிட்டால் அவர்களது இருப்பிடமெங்கும் விதையெச்சம் தூவு. யாம் முளைப்போம், துளிர்ப்போம்.
நச்சிட்டு எமையழிக்க அவர் முயல்வர்.
(தன்னப்பம் தன்னைச்சுடும்) வீட்டப்பம் ஓட்டைச்சுடும் என உணவும் தீயாகி வீடு் பற்றியெறிந்த கதைகள் பல தெரிந்தவர்தான்... ஆனாலும் செய்வர்.
எமை அழித்தது போக எஞ்சிய நச்சு, அவரிட்ட நச்சு, வேரறுக்கும் அவர் குலத்தை.
கவலை வேண்டாம்! அதன் பின் வாழ்வு மீளும் நம் வழியே!!
"
விடைபெற்றுப்பறந்தது சிறுபறவை, வாழ்வின் விதை சுமந்து.
ஒற்றைப்பறவை, ஒற்றைவானம் அல்ல,
கருத்துகள்
கருத்துரையிடுக