முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இசைதெய்வம் நானடா!


சில நாட்களுக்கு முன் ஒரு ஒளிப்பதிவு பார்த்தேன். ரேடியோ மிர்ச்சி ஏற்பாடு செய்திருந்த நேர்காணல், இளையராஜாவும் மிர்ச்சி தேர்ந்தெடுத்த அவரது ரசிகர்களும்.

பல மொழி ரசிகர்கள், சந்நிதானத்தில் இருப்பது போல் பரவசத்தில் இருந்தாலும் தெளிவாய் கேள்வி கேட்டனர்.

'கடவுளை நேரில் பார்க்கிறேன்', 

'உங்கள் பாடல் கேட்டபடியேதான் உறக்கம், ஒவ்வொரு இரவும், இருபது வருடமாய், உலகின் எந்த மூலையில் வேலை செய்தாலும்'

'என் அம்மா பதினைந்து வயசில இறந்துட்டாங்க. இன்றைய வரைக்கும் உங்க சின்னத்தாயவள் இசைவழியா அவங்க என் கூடவே இருப்பதாய் உணர்ர்கிறேன்'

'ஐயா, நானு ஐதராபாது. இரடு கண்ணும் தெளியேது. ஆனா உங்க இசை வழியா தினமும் உங்கள "பாத்துகிட்டே இருக்கேன்" '

"எங்கட நாட்டிலயும் நிங்களுக்கு வல்லிய fans உண்டு சாரே! ஞான் நொம்பர் ஒண்ணாக்கும்"

என உணர்வுக்குவியலை சிதறவிட, மனிதர் அவர்கள் அனைவர்க்கும் தனித்தனி பதிலாய் சொன்னது ஒரே விசயம்தான், 

"இசை என்பது எனக்குள் எழும்பும் உணர்வு. அதை நான் வெளிக்கொணர்கிறேன். அந்த உணர்வுகள் உங்களுக்குள் என்ன மாதிரியான அதிர்வுகள் எழுப்புகின்றன என்பது உங்கள் தன்மையை பொறுத்து உங்களுள் நிகழும் ஒன்று. அது என்னால் நிகழ்வது அன்று"!
இன்று நேற்றல்ல, அன்னக்கிளி காலம் தொட்டு அவர் இதைத்தான் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்...

உணர்வால் ஆராதிக்கவேண்டிய ஒருவரை அறிவால் கூறு போடுவதை (அகம்பாவி, திமிரு என்பதாக) இனியாவது நிறுத்துவோமா?

இவரது இசையில் இதுவரை யாருமே கேட்டிராத அற்புதமான பாடல் ஒன்று, இதோ, உங்களுக்காக!

"
அதிகாலை நேரமே ...
சுகமான ராகமே
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக...
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்...
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
ஏதோ மோகம் ஏதோ தாகம் 
என்னுள்ளே என்னுள்ளே
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனதிலே...
இளங்காத்து வீசுதே! இசை போல பேசுதே!
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!
மேகம் முழிச்சு கேக்குதே!
கரும்பாறை மனசுல, மயில் தோகை விரிக்குதே!
மழைச்சாரல் தெறிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே!
மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே! 
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே!
அடி ஆத்தாடி…
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே
அதுதானா
உயிரோடு
உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்...
இது ஒரு பொன்மாலைப்பொழுது
வானமகள் நாணுகிறாள் 
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப்பொழுது
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்.
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள், சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன்மாலைப்பொழுது
வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால், வேள்விகளை
நான் செய்தேன்...
ஓ...! மனசுல என்ன ஆகாயம்? 
தினந்தினம் அது புதிர் போடும்,
ரகசியத்த யாரு அறிஞ்சா? 
அதிசயத்த யாரு புரிஞ்சா?
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இளைய நிலா பொழிகிறதே, இதயம் வரை நனைகிறதே
உலா போகும் மேகம் கனா காணுமே விழா காணுமே வானமே
இசை மேடையில் இந்த வேளையில்
சுகராகம் பொழியும்
இசை மேடையில் இந்த வேளையில்
சுகராகம் பொழியும்
மௌனமான நேரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
*செவியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே...
"

இந்தப்புதிய பாடலுக்கான இசை தானாகவே நம் மனதில் ததும்பி வழிகிறது அல்லவா?!


ராஜா!

(*ராஜா இசையில் வந்த ஐகானிக் பாடல் வரிகளை வைத்தே ஒரு வாழ்த்துப்பா, நட்சத்திர குறியிட்ட சொல்லை மட்டுமே மாற்றியிருக்கிறேன்!)

கருத்துகள்

  1. தலை சிறந்த கலைஞர்கள் அவ்வப்பாேது உருவாகிக் காெண்டுதான் இருக்கின்றனர்! நமது நல்ல நேரம் அவர்கள் வாழும் பாேது நாமும் உடன் வாழ்ந்து மகிழ்வதே!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...