நேசம் நடந்த தடம்...
என் வீடு சேரும் வழித்தடத்தில்
மிதிபடாத பூக்கள் காட்டின
உன் சுவடுகளை.
ஈர மண் வாசலில்
இன்னும் காயாத
உன் கால் தடம்.
வீட்டுக்குள் நீ வந்து சென்ற இடம் காட்டும்
உதிர்ந்த பவழமல்லி இதழ்கள்,
எனக்காக காற்றில் நீ விட்டுச்சென்ற
உணர்வு இழைகள்...
நீ வருவதற்கு முன்
தனிமை நிலவில்
உன்னோடு உரையாடிக்கொண்டிருந்த
லயிப்பில் நான்...
நனவிலோ கனவிலோ... என் கால் தடம்
ஒட்டி உன் சுவடுகள்.
அடுத்தமுறை நேரில் வந்தால்
கனவு கலைக்க என் மீது ஒரு
பூவையேனும் எறி; இல்லையெனில்
மறுபடியும் இக்கவிதையை
நான் முதலிலிருந்து எழுதவேண்டிவரும்!
கருத்துகள்
கருத்துரையிடுக