முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

96. ஹையோ! கவிதை!!


காலியான வகுப்பறை, பார்பர் ஷாப், பார்க்கிங் லாட், பாத்ரூம், ஆட்களற்ற மெட்ரோ ரயில் இருக்கைகள், மேம்பால நடுச்சாலை, திடீர் பவர் கட்டில் ஒலிக்கும் யமுனை ஆற்றிலே பாடல், பழைய பெட்டியில் மொக்கை கவிதை, கார் கியர், கொடியில் காயும் சுடிதார் செட்... இவையெல்லாம் நம்மை காதலில் நனைக்கமுடியுமா? திக்குமுக்காடவைக்கமுடியுமா?

முடியும், நாம் ராம் & ஜானுவுடன் சில மணி நேரங்கள் கழித்தால்.

மழை நீரை நாக்கு நீட்டி உணர்ந்து ரசிக்கும், இயற்கையின் மடியில், அதன் அரவணைப்பில் உறங்கும், அன்பான கண்டிப்போடு போட்டோகிராபி கற்றுத்தரும் ஆசான் (குண்டுப்பையன் உடலை வளைத்து குனிந்து போட்டோ எடுக்க முயல, ஆசான் குச்சியால் கால்களில் தட்டி மண்டிபோட வைக்கிறார் :-). அவர்மீது மரியாதை கலந்த நேசத்துடன் ஒரு மாணவி.

மாணவப்பருவத்தில் ஆசானின் முதல் காதல். காதலின் நினைவாய் கடற்கரை ஈர மணலில் 
            ராம் 
           ஜானு என்று எழுத, அலைகள் இவர்களது பெயரை எட்டி எட்டி படிக்க முயல, நாம் நனையத்தொடங்குகிறோம் காதல் மழையில்.

படித்த ஊர் வழியே பயணம் செய்ய நேரும்போது, தான் 'வாழ்ந்த' பள்ளியைக்கண்டு நிறுத்தி, வாட்ச்மேன் அனுமதியுடன் இவர் கதவு திறந்து உள் நடக்க, கதவுகள் நம்மையும் உள்ளிழுத்துக்கொள்கின்றன. 
இறுதியில் விமான நிலைய கண்ணாடித்தடுப்புக்குப்பின் உணர்ச்சிக்குவியலாய் ஆசான் நிற்கையில், பிசையும் மனதோடு கூடவே நாமும்...

நினைவுப் பெட்டியில் சேர்த்துவைக்க வேண்டிய பொக்கிஷம்...

எத்தனை திருஷ்டி சுற்றினாலும் கண்படும் இவர்கள் இருவரின்மேல்!

ஜானு, வாழ்ந்திருக்கிறார், இரு காலகட்டங்களிலும். இவரது திரைப்பயணத்தில் ஒரு மைல்கல். 

ராம்... மிகப்பெரிய ஆச்சரியம்! தமிழ் திரையுலகு இவரை பொக்கிஷமாய் காக்கக்கடவது! சீனு ராமசாமியின் மிகப்பெரிய திரைத்தொண்டு, 'ராமை' 'கண்'டுபிடித்தது!

அமெரிக்காவின் ரிச்சர்ட் லிங்க்லேட்டர், மனித உணர்வுகளை, காதலின் பரிமாணங்களை, மூன்று பகுதிகளாய், ஒவ்வொன்றும் பத்தாண்டு இடைவெளியில், ஒரே நாயகன், நாயகியுடைய வாழ்வில் ஒரு தினத்தை (ஒவ்வொரு படமும் ஒரு தினத்தின் நிகழ்வுகள்) உலகம் போற்றும் Trilogy ஆக்கித்தந்திருந்தார்; Before Sunrise, Before Sunset, Before Midnight என.

அந்தப்படங்கள் தந்த ஒரு இன்டிமேட் ஃபீல், அந்த ஜோடியுடன் அவர்கள் இருக்கும் இடத்திலேயே நாமும் இருந்து ரசிப்பதாய் உணரவைத்த வித்தைக்காக, இம்மூன்று படங்களும் சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த படங்களின் தரவரிசைப்பட்டியலில் டாப் படங்களாக இன்று வரை.

இந்தியாவிலிருந்து ஒரு Welcome Addition, 96!

புக் பண்ணும்போதே இரண்டு ஷோக்கள், ஒரு வார இடைவெளியில், முடிந்தால் ஒரு முறை துணையுடன், மறுமுறை தனிமையில், என திட்டமிட்டு, பார்ப்போம், கொண்டாடுவோம்!

கொண்டாடியபின் சொல்வோம், 'உள்ளம் கேட்குமே மோர்'!

பின் குறிப்பு: படத்தில் இசையின்றி இடம்பெறும் ஜானகி பாடல்கள்... அவை வழியே கேட்கும் நம் மனமெங்கும் கசியும் ராஜாவின் இசை! டைட்டிலில் 'ராஜாவுக்கு நன்றி' என்று சொல்லி, படம் முழுதயும் நன்றி நகர்த்துகிறது. யமுனை ஆற்றிலே...ஹையோ!!!!!


Watched "96" with family today.

After reaching home, after everybody alighted from the car, closed all windows and...cried some rivers...

Such was the power of a simple, honest, beautiful love story; may take a while to get the 'high' it gave, out of my system :-)

A beautiful beautiful beautiful story, extremely well enacted; reminded me of lot of things about cherished memories and eviscerating pain... about human bond...  about love...

Hey am alright though my innards are like molten lava... don't bother; it will solidify on its own soon :-)

We need constant reminder that being loved insanely is a great great feeling and  we must protect with our soul such a person that makes us feel this way. 96 has done essentially that!

A true blue love story with a giant heart, in the lines of Richard Linklater's world famous trilogy (Before Sunrise, Before Sunset, Before Midnight), 96 leaves us wanting more!

Don't miss it.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...