முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தாரா!

ஒரு சாமியாருக்கு ஒரு வீணாப்போன சீடன். அவனோட அலும்பு தாங்கமுடியாத மத்த நல்ல சீடருங்கள்லாம் ப்ளான் பண்ணி ஒரு நாளு அந்த சீடன ஒரு இத்துப்போன காட்டுல ஒரு நெருஞ்சி முள் தடத்த காட்டி, 'அங்கே போய் குதிரைப்படுக்கை மர இலை சில கொத்து ஒடிச்சிட்டு வா' ன்னு அனுப்புனாங்க. அந்த சீடனும் ஓட்ட ஓட்டமா ஓட, பாதத்துல நெருஞ்சியெல்லாம் பாசத்தோட 'ஏறி'கிடுச்சி'. பறிச்ச எலைய குடுத்துட்டு கடுமையான வலியோட குருகிட்ட ஓடி தொபுகடீர்னு கால்ல விழுந்து அழுகிறான். அழுக சத்தத்தில தவம் கலஞ்ச குரு 'என்ன?'ங்கவும், "முள்ளுங்க குருவே முள்ளுங்க! என்ன செஞ்சா இதுங்க எறங்கும்' னானா, குரு கண்ண மூடி ஆழமா யோசிச்சிட்டு ' பத்துரதன் புத்திரனின் மித்திரனின் பத்தினியின் கால் வாங்கித்தேய்' னு  சொல்லிட்டு தீர்த்த யாத்திர கிளம்பிட்டாராம். முள்ளு சீடனுக்கு இந்த மந்திர வார்த்தைகள என்ன பண்றதுன்னு தெரியலயாம். அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற தீர்வ எப்படியாவது கண்டுபிடிக்கனும்னு சக சீடர்கிட்ட எல்லாம் கேக்கவும், எவனுக்குமே தெர்லயாம். சீழ்வச்ச காலோட இன்னைக்கும் சுத்திகி...

ஜென்சி பிசாசு!!!!

நான் பாட்டுக்கு பள்ளிக்கூடம் போனமா, விளையாண்டமா, வீட்டுக்கு வந்தமா, படிச்சமான்னு (மெய்யாலுமே அப்டிதான்!) சிவனேன்னு சுத்திகிட்டிருந்தேன். ரேடியோ கூட கிரிக்கெட் கமென்ட்டரிக்கு மட்டும்தான். திடீர்னு ஒரு நாள், சேனல் கரகரன்னு மொணகவும் வேற ஸ்டேஷன் ட்யூன் பண்ணலாம்னு திருப்புனா, அன்னைக்கு புடிச்சது இந்தப்பிசாசு. தெய்வீக ராகம், தெவிட்டாத பாடல்னு ஒரு குரல்.  எப்படி உள்ளே எறங்கிச்சின்னே தெரில இன்னைய வரைக்கும் உச்சிய புடிச்சி உலுப்புது! அப்படி ஒன்னும் perfect ஆன குரலும் கிடையாது, வல்லின மெல்லின உச்சரிப்பு சிக்கலும் கூட (இவரோட 'ர', பெரிய 'ர' ஆனா 'ற' இல்ல!, உடுங்க பாசு, இதெல்லாம் ஆராய்ச்சி பண்ணா புரியாது, அனுபவிச்சி கேக்கணும்!) டேப் ரெகார்டரெல்லாம் அப்ப wish list ல கூட இல்லைங்க... உங்களுக்கு நம்புறதுக்கு கூட கஷ்டமா இருக்கலாம்... அப்பல்லாம் wish list ஏ இல்லைங்க!!!! அந்த மாதிரியான ஒரு இளவட்ட கூட்டம் வாழ்ந்த காலம்! அப்பலேந்து மார்க்கோனி கணக்கா ரேடியோவ திருகி திருகி, பிசாச தேடி, ரேடியோ knob கழண்டாலும் விடுறதில்ல! யாருன்னு தெரியாது, ஊரேது தெரியாது...

கண்ணம்மா கேன்டீன்

நண்பர் ஒருவர் நகரிலுள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் பேராசிரியை. மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்காக என்னை அழைத்திருந்தார். என்னை கல்லூரிக்குள் வரவேற்று பிரின்சிபாலிடம் அறிமுகம் செய்து விட்டு, 'உரையாடல் ஆரம்பிக்கிறதுக்குள்ள ஒரு சுக்கு காபி சாப்டலாம் வாங்க. கண்ணம்மா கேன்டீனுக்கு போலாம்' என்றார். பெயர் ஈர்க்கவே, சென்றேன். சிறு தானிய முறுக்கு, லட்டு, மர விளையாட்டு பொம்மைகள், 'Never eat anything that your Grandma wouldn't have approved!' என்ற banner... இது அத்தனையும் ஒரு பெரிய பொறியியல் கல்லூரி நிறுவன வளாகத்துள்! கடை நடத்தும் இளைஞரோடு அறிமுகம் ஆயிற்று.  சந்துரு. 'ஏன் கண்ணம்மா?' என்றேன். "பாரதியார் பிடிக்கும். படிச்சதில இது நெஞ்சில பதிஞ்சிடுச்சி" தாராபுரம் அருகில் உள்ள ஒரு ஊரிலிருந்து இதே பொறியியல் கல்லூரியில் மெக்கானிகல் என்ஜினியர் ஆன பின்னர், ஆன பின்னர், இந்த உணவகத்தை இங்கேயே நடத்துகிறார்!!!! கல்லூரி அருகிலேயே தங்கியிருக்கிறார். 'பத்துக்கு பத்து இடத்த தாண்டி என்ன வேண்டியிருக்கு?" என்கிறார...

அவரவர் புரிதல் அவரவருக்கே...

அவரவர் புரிதல் அவரவருக்கே! நேற்று மழையாய் இன்று வெயிலாய் நாளை குளிராய் அதன்பின் ஏதோவொன்றாய்... நான் இருப்பேன் நீயும் இருப்பாய். இங்கு இணைந்தது எங்கு பிரிவது? பிணைப்பின் இழைகள்... வாழ்வின் நொடிகளில் ஆனந்தம் சேர்க்கும் கவலை சேர்க்கும் வருத்தம் சேர்க்கும் கோபம் சேர்க்கும் வலி சேர்க்கும் வலிமை சேர்க்கும் இழைகளிலெது  உன் இழை என் இழை? ஊடும் பாவுமாய் (இழைகள்)... ஒருபோதும் ஒத்தோடுவதில்லை. அதனதன் பாதை  அது அதற்கே. பிரிந்து இணைந்து இணைந்து பிரிந்து... வாழ்வின் தாளத்தில்  சிறு லயம் நாம். இந்த குறுக்குமறுக்கில் வாழ்வு நெய்தல் ஐவகை நிலத்திலும், ஆறாம் நிலத்திலும்! வண்ண வண்ண  எண்ணம் வரையும் நமக்கான ஓவியம். காண்பவர் காணட்டும். அவரவர் புரிதல் அவரவருக்கே! (ஆறாம் நிலம் - மனம்)

நலம் நாடி... வேண்டுதல்...

தினமலர் நாளிதழில் வித்தியாசமான விளம்பரம், 'குழந்தைகளுக்கு கதைகள் கூற ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்' என ஒரு அறக்கட்டளை விளம்பரம். என் கண்ணில் பட்டதும் தொடர்பு கொண்டேன். 'நேரில் வாங்களேன், பேசுவோம்' என்றார். பேசினோம், ஒரு அமைப்பு உருவானது. நகர் முழுதும் 8 இடங்களில் கதைகூறும் மையங்கள். தன்னார்வலர்கள் கதை சொல்ல, குழந்தைகள் கேட்க, வாரத்தில் சில மணி நேரங்கள் மட்டும். வணிகம் ஒரு புறம், அறக்கட்டளை ஒரு புறம் என சிரித்த முகத்துடன், சீரிய எண்ணங்களுடன் இவரது வழி நடத்தலில் இன்று ஐந்தாவது ஆண்டு. வருடந்தோறும் ஒரு பெரிய நிகழ்வு, கதை / கட்டுரை / நாட்டுப்புறப்பாட்டு போட்டிகள் என... ஐந்து வருடங்கள் பகுதி நேர தன்னார்வலர்களின் சிறு குழு மூலம் இவரது முயற்சியில் மகிழ்ந்த குழந்தைகள் ஆயிரத்துக்கும் மேல். இவ்வளவு குழந்தைகளை மகிழ்வித்தவர், தன் சொந்தக்குழந்தைகளையும், உற்றாரையும், உறவினரையும், நண்பர்களையும் தவிக்கவிட்டு சில தினங்கள் முன்பு விடைபெறாமலே விடைபெற்றார்... காலனுடன் கூட பிணக்கின்றி ஒத்துழைத்து... அதற்கு இரு நாட்களுக்கு முன் மாம்பழங்கள் அனுப்பியிருந்தேன். புதி...

புள்ளகுட்டிகளோட பாருங்க!

மேற்குத்தொடர்ச்சிமலை. வார்த்தைகள்கூட பிரிக்க முடியாத மலைத்தொடர். மலை வீட்டில் காலை 4 மணிக்கு அலாரம்போல அம்மா எழுப்பிவிட, ரங்கு மழையில் முகம் கழுவும்போதே உள்ளே ஏதோ தளும்ப ஆரம்பிக்கிறது. 4 மணியிலிருந்து பொழுது விடிவதற்குள் அவன் சந்திக்கும் மனிதர்கள், காட்சிகள், சப்தங்கள் நம்மை வேறொரு உலகத்திற்குள் இழுக்கின்றன. ஒற்றையடிப்பாதைகளால் பிணைக்கப்பட்ட மலை எஸ்டேட் தேயிலைத்தோட்ட தினசரி வேலை, ஆபீஸ் வேலை போல 10 மணிக்கு தொடங்கி மாலை அந்தி சாய கரையேறுவதல்ல. கைரேகை தெரியாத இருளில் விழித்து கைரேகை தெரியாத நள்ளிரவிலும் நீளும் இவனது உழைப்பு. காணி நிலம் அவன் கனவு. திருமணம் கூட அதன் பின்புதான் என்ற வைராக்கியம். அவனிடம் மனதைக்கொடுத்த மாமன் மகள். அவள் திருமணத்திற்கான அவள் தகப்பனின் முயற்சி. அந்த முயற்சியில் இணையும் மலை மனிதர்கள், மனிதம் கசியும் இவர்களின் வாழ்வு, நம்பிக்கைகள் என விரியும் பெருமலைத்தொடரில் இனிய சகா ஒருவரின் ஏழ்மை காக்கும் குரல், அதை முடக்கத்துடிக்கும் மனிதர்கள், மலைத்தொடரை முடக்கத்துடிக்கும் 'வளர்ச்சி'... இதற்கு மேல் கதை தெரியாமல் படம் பார்ப்பதே இந்தப்படத்திற்கு...

ஒவ்வொரு விள்ளலும் நானே

அள்ளி எடு. கிள்ளி எடு. சுரண்டி எடு. வழித்து எடு. உரித்து எடு. தருவேன், என் வேரில் ஈரம் வற்றும் வரை. தருவேன் அதன்பின்னும். இது மனிதக்காதலே அல்ல. பூக்களுக்கும் புழுக்களுக்கும் இடையில்தானே வாழ்வு ஊடாடுகிறது... மலர்வதனைத்தும் நானே. உதிர்வதனைத்தும் நானே. புழுவும்தான்...