அவரவர் புரிதல் அவரவருக்கே!
நேற்று மழையாய்
இன்று வெயிலாய்
நாளை குளிராய்
அதன்பின் ஏதோவொன்றாய்...
நான் இருப்பேன்
நீயும் இருப்பாய்.
இங்கு இணைந்தது எங்கு பிரிவது?
பிணைப்பின் இழைகள்...
வாழ்வின் நொடிகளில்
ஆனந்தம் சேர்க்கும்
கவலை சேர்க்கும்
வருத்தம் சேர்க்கும்
கோபம் சேர்க்கும்
வலி சேர்க்கும்
வலிமை சேர்க்கும்
இழைகளிலெது
உன் இழை
என் இழை?
ஊடும் பாவுமாய் (இழைகள்)...
ஒருபோதும் ஒத்தோடுவதில்லை.
அதனதன் பாதை
அது அதற்கே.
பிரிந்து இணைந்து
இணைந்து பிரிந்து...
வாழ்வின் தாளத்தில்
சிறு லயம் நாம்.
இந்த குறுக்குமறுக்கில்
வாழ்வு நெய்தல்
ஐவகை நிலத்திலும்,
ஆறாம் நிலத்திலும்!
வண்ண வண்ண
எண்ணம் வரையும்
நமக்கான ஓவியம்.
காண்பவர் காணட்டும்.
அவரவர் புரிதல்
அவரவருக்கே!
(ஆறாம் நிலம் - மனம்)
கருத்துகள்
கருத்துரையிடுக